search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர் ஆர்.என்.ரவி"

    • ஆளுநர் ஆர்.என்.ரவி 16ம் தேதி தான் சென்னை திரும்புகிறார்.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.

    தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணத்தால் அமைச்சராக பொன்முடி பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பாணை வெளியிட்டது.

    இதைதொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் பொன்முடி இடம்பெறவும், அமைச்சராக பதவி ஏற்கவும், ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.

    இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை டெல்லிக்கு தீடீர் பயணம் மேற்கொள்கிறார்.

    நாளை காலை 7.30 மணிக்கு டெல்லி புறப்படும் ஆளுநர் 16ம் தேதி தான் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

    மக்களவை தேர்தலுக்கான தேதி வரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுநரின் திடீர் பயணத்தால் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, பதவியேற்புக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியும் அவசியம் ஆகும்.

    மேலும், தமிழக முதலமைச்சரின் பிரந்துரை கடிதத்தின் மீது ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விளக்க முயன்றேன்
    • காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்-ன் 127 ஆவது பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. நேதாஜி உருவாக்கிய இந்திய தேதிய ராணுவம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்டதால் தான் ஆங்கிலேயர்கள் நாட்டிற்கு விடுதலை அளித்ததாக கூறினார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கு வி்ளக்கம் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, "நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து செய்தியாக்கி விட்டன. நான் காந்தியை அவமதிக்கவில்லை. அவருடைய போதனைகள் என்னுடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருந்தன. காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை.

    தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விளக்க முயன்றேன். ஆங்கிலேயருக்கு எதிரான நேதாஜியின் படைகள் நமது விமானப்படை மற்றும் கப்பல் படைக்கு முக்கியதுவம் அளித்தன. இதுமட்டும் இல்லாமல் நேதாஜியின் பங்களிப்பு இல்லை என்றால் நமக்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் கூடுதல் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் " என தெரிவித்துள்ளார்

    • குடியரசு தின விழா தேநீர் விருந்து, ஜனவரி 26 ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே தெரிவித்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.

    அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழா தேநீர் விருந்து, இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த விருந்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சியினர் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தது குறிப்பிடதக்கது.

    • ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
    • 2023ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது.

    இந்தியாவில் 2024 புத்தாண்டு இன்னும் சற்று நேரத்தில் பிறக்க இருக்கிறது. இதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய தலைவர்கள் பொது மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2024 புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    2023ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது. ஜி20 தலைமையில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது. விளையாட்டுத் துறையில் நமது வீரர், வீராங்கனைகள் சிறப்பாக பரிணமித்தது என சுயசார்புபாரதத்தின் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டின் சான்றாக விளங்கியது.

    சட்டசீர்திருத்தங்கள் காலனித்துவ பாரம்பரியத்தை நிராகரித்ததுடன், நமது தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.

    உச்சநீதிமன்றம், ஜம்மு & காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்பு தொடர்பாக வழங்கிய தனது வரலாற்றுபூர்வ தீர்ப்பின் மூலம் "ஒரேபாரதம் உன்னதபாரதம்" என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியது.

    நமது இளையசக்தி அனைத்து துறைகளிலும் தங்கள் திறமை மற்றும் தொழில்முனைவு மேதைத்துவத்தை நிரூபித்து வருகிறது. நமது புராதன சனாதன தரிசனத்தில் ஆழமாக வேரூன்றிய நமது தெளிவான கலாசாரஆன்மிகம், உலகை ஒரே குடும்பம் ஆக ஒருங்கிணைத்துள்ளது. நாம் நமது சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, 'ஒரேதேசம்' ஆக கடுமையான சவால்களை முறியடித்து முன்னேறினோம்.

    அதே நம்பிக்கை, அர்ப்பணிப்பு, கூட்டுறுதி மற்றும் ஆற்றலுடனும் நாம் 2024-ல் நுழைகிறோம். நமது முயற்சிகளில் சிறந்து விளங்கவும், நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் சேர்ப்பதற்காகவும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்.

    'புத்தாண்டு 2024' நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொடுக்கட்டும்- ஆளுநர் ரவி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு பற்றி முதன் முதலில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் பேசினார்.
    • தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்தார்கள். அப்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இத்தகவலை பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

    2011ல் இருந்து 2014 வரை தமிழகத்தின் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும்போது, பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்ததாக, அந்த துறையின் அதிகாரியே வழக்கு பதிவு செய்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கைந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு பற்றி முதன் முதலில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் பேசினார்.

    ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, யாரெல்லாம் குற்றம்சுமத்தினார்களோ அவர்கள் எல்லாம் ஐகோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்கிறார்கள். அதில், செந்தில் பாலாஜியிடம் கொடுத்த பணத்தை அவர் திருப்பி தந்துவிட்டார், எனவே, அந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம் என கூறியிருந்தனர். இதை எதிர்த்து, மின் துறையில் தேர்வு எழுதிய 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது.

    இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் ஒருவர் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார், பணம் கொடுத்த 2 பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பணம் வாங்கிக்கொடுத்த ஒரு புரோக்கர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன்பின்னர், நாங்கள் மனசு மாறிவிட்டோம், வழக்கு போடாதீர்கள் என அவர்களே ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்கள். வழக்கிற்கு இதைவிட என்ன வேண்டும்? என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

    அனைத்து விதமான தரவுகளையும் பார்க்கும்போது ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக காவல்துறை உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

    அதனால்தான் பாஜக தலைவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர். ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • மாமன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
    • சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

    சென்னை:

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

    தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஓணம் நன்னாள் வாழ்த்துகள். அழகிய இத்திருநாள் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமைக்கான அறுவடைத் திருநாளாகும். மக்கள் அனைவரையும் வாழ்த்துவதற்கு வருகைதரும் மாமன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

    இந்நாளில் ஒளிவிடும் பல்வேறு வண்ணங்கள் நம் அனைவருக்குமான அன்பையும், சகோதரத்துவதையும், வலிமையுறச் செய்யட்டும். மாமன்னன் மகாபலியின் வாழ்த்துக்கள் இந்த அம்ருதகாலத்தில் நம் இந்தியத் திருநாட்டின் இலக்கை நிறைவுசெய்வதாக அமையட்டும்.

    இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:-

    மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டுப் பெருவிழாவான திருவோணம் நாளை (செப்டம்பர்-8) கொண்டாடப்பட இருக்கிறது. நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும், வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள்.

    அத்தப்பூ கோலமிட்டு, பட்டாடையும் புத்தாடையும் உடுத்தி, அறுசுவை உணவருந்திச் சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஓணம். 'மாயோன் மேய ஓண நன்னாள்' எனச் சங்க இலக்கியமாம் மதுரைக் காஞ்சியிலும் குறிப்பிடப்படும் இத்திருநாள் திராவிட நிலத்தின் தொன்மையையும் நம்மிடையேயான பண்பாட்டு உறவையும் காட்டும் விழா. கேரள மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒண்றிணைந்து கொண்டாடி ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருக்கிறது.

    அத்தகைய திருநாளைத் தமிழ்நாட்டில் உள்ள மலையாளி உடன்பிறப்புகளும் ஏற்றத்துடன் கொண்டாடுவதற்கேற்ப, இங்குள்ள எல்லையோர மாவட்டங்களிலும் சென்னையிலும் அரசு விடுமுறை அளித்தது கழக அரசு என்பதை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து, உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்குத் தமிழ்நாட்டின் சார்பாக எனது ஓணத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதைப் பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டுத் திருவிழாக்கள் அமையட்டும்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×