search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனை"

    • நீலகிரி மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத் தலைமை தாங்கினார்
    • மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைசெயலாளர் பாலநந்தகுமார் பங்கேற்பு

    ஊட்டி,

    குன்னூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சிகள் பூத் கமிட்டி புத்தகங்களை நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளளரும், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளருமான பொன்ராஜ் ஆய்வு செய்தார்.

    இதில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழ உறுப்பினர் மாதன் மற்றும் மாநில, மாவட்ட சார்பணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகரிய செயலாளர், பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கும் ஐந்து நபர்கள் வீதம் வழங்கப்பட உள்ளது.
    • நடக்கப் போவது, செய்ய வேண்டியது போன்றவை பயிற்சியின் சாராம்சமாக விளக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி த்துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழுவினை வலுப்படுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சி தஞ்சாவூர், தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் அவர்கள் தொடங்கி வைத்து பள்ளி மேலாண்மை குழு முக்கியத்துவத்தைப் பற்றி ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

    ஆசிரியர் பயிற்றுநர்கள் மொத்தம் 80 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழுவினை சிறப்பான முறையில் நடத்துவதற்கான வழிகளை பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் இப்பயிற்சி வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிகளுக்கு ஐந்து நபர்கள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இதில் வெங்கட்ராமன், குலோத்துங்கன், திருமுருகன், மதியழகன், பத்மவாதி, சுசித்ரா ஆகியோர் மாவட்ட கருத்தாளராக செயல்பட்டனர்.

    பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பங்கேற்பினை அதிகரித்தல், துணை குழுக்கள் அமைத்தல், உள்ளாட்சி உறுப்பினர்கள் பங்கேற்பினை உறுதி செய்தல் மற்றும் செயலி வழி பள்ளி மேம்பாட்டு திட்டமிடலை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சியானது நடை பெற்றது.

    இதில் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பு பற்றிய மேற்பார்வை மற்றும் துணை குழுக்கள் பற்றிய அறிமுகம் மேலும், பெற்றோர் செயலையும் மாதாந்திர பள்ளி மேம்பாட்டு திட்டமும் நடந்தது. நடக்கப் போவது, செய்ய வேண்டியது போன்றவை பயிற்சியின் சாராம்சமாக விளக்கப்பட்டது.

    இப்பயிற்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌமிய நாராயணன், தமிழ்நாடு கல்வி பெல்லோவ்ஷிப் ஒருங்கிணைத்தனர்.

    • காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.
    • போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது வான், கடல் மற்றும் தரை வழியாக மும்முனை தாக்குதலை இஸ்ரேல் படை தீவிரப்படுத்தி உள்ளது.

    காசாவில் உள்ள மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், தேவாலயங்கள், பொதுமக்கள் வாழ்விடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. இந்த அதிரடி தாக்குதலில் கட்டிடங்கள் இடிந்து விழுவதோடு மட்டுமல்லாது அப்பாவி பொது மக்களும் உயிர் இழந்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரமே உருக்குலைந்துவிட்டது.

    இந்த சண்டையில் காசாவில் 4,104 குழந்தைகள் உள்பட 10 ஆயிரத்து 22 பேர் இறந்து விட்டதாக ஹமாஸ் சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போரை நிறுத் தக்கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவும் போரை உடனே நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு பிடி கொடுக்காமல் இஸ்ரேல் பேசி வருகிறது.

    அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனும் 2 முறை இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். ஆனாலும் இஸ்ரேல் போரை வைவிட மறுப்பு தெரிவித்து தொடர்ந்து முப்படைகளின் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

    மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் விவாதித்தனர். பிணைக்கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.

    ஆனால் போர் நிறுத்தத்தை ஏற்க இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இது உள்ளூர் போர் அல்ல, உலக அளவிலான போர் என்றும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார். இதனால் போர் தொடரும் சூழ்நிலை நிலவி வருகிறது.

    போர் காரணமாக படுகாயம் அடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    காசாவில் உச்சக்கட்ட போர் நடந்து வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக காசா எல்லைப்பகுதிகளில் உடமைகளுடன் திரண்ட வண்ணம் உள்ளனர்.

    போரில் உயிர் இழந்தவர்களுக்காக ஜெருசேலத்தில் இஸ்ரேலியர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

    • கருந்தலைப்புழுவால் பாதித்ததென்னை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை
    • 60-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர்.

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழூர் பகுதியில் விவசாயிகள் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் தேங்காய் காய்த்த நிலையில் இலையில் கருந்தலைப்புழு தாக்கி தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இது குறித்து தகவல் அறிந்து, புழுதேரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர் மற்றும் தலைவர் திரவியம், வேளாண் விஞ்ஞானி தமிழ்ச்செல்வன், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், வட்டார வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகளிடம் இரவு நேரங்களில் விளக்கு பொறி வைக்கும்படியும், அதேபோல் ஒட்டுண்ணிகளை தென்னை மரங்களில் விட வேண்டும் என்றும் இது போல் தொடர்ந்து செய்து வந்தால் கருத்தலை புழு தாக்குதல் பாதிப்பிலிருந்து தென்னை மரங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனைகளை வேளாண் துறை அதிகாரிகள் வழங்கினார்கள்.

    • தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாமிதோப்பில் நடைபெற்றது.
    • சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் பாபுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

    தென்தாமரைகுளம்:

    சாமிதோப்பு, கரும்பாட்டூர், வடக்கு தாமரைகுளம் ஆகிய ஊராட்சிகளின்தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாமிதோப்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர் நம்பி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ் கலந்துகொண்டு பேசினார். மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் பாபுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் சாமிதோப்பு தலைமைபதி குருவும், தி.மு.க.வக்கீலுமான ஜனா யுகேந்த், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர்கள் பொன் ஜான்சன், தமிழன் ஜானி, வடக்கு தாமரைகுளம் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் பிள்ளை, மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், நிர்வாகி தாமரை பிரதாப், கரும்பை மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுக்கூர் பகுதியில் சில கனரக வாகனங்கள் எவ்வித உரிமமும் இன்றி இயங்கி வருகிறது.
    • சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    மதுக்கூர்:

    காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    மதுக்கூர் பகுதியில் சில கனரக வாகனங்கள் எவ்வித உரிமமும் இன்றி இயங்கி வருகிறது.

    இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, போக்குவரத்து காவல்துறை சார்பில் அனைத்து வாகன உரிமையாளர்களையும் அழைத்து சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோ சனைகள் வழங்க வேண்டும்.

    மேலும், எவ்வித உரிமம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகனங்களை பறிமுதல் செய்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானாவாரி பயிர்களில் மகசூலை அதிகரிக்க விதை கடினப்படுத்துதல் முக்கியமானது.
    • இந்த தகவலை ராமநாத புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரி வித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    மானாவாரியில் பயிரிடும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பருவ மழையை மட்டுமே நம்பி உள்ளது. மானாவாரி பயிர்க ளில் மகசூலை அதிகரித்திட விதை கடினப்படுத்துதல் என்பது முக்கியமான தொழில் நுட்பமாகும்.

    விதை கடினப்படுத்துதல் என்பது விதையினை சில மணி நேரங்கள் நீரில் ஊற வைத்து பின்னர் விதைகளை அதன் இயல்பான ஈரப்ப தத்திற்கு உலர வைத்தல் ஆகும். நீருடன் சில மருந்து களை கலந்து ஊறவைத்து விதைப்பதால் விதைகளின் வீரியம் அதிகரித்து வறட் சியை தாங்கி வளர்வதுடன் மிகக் குறைந்த செலவில் 10 முதல் 15 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது.

    நெல், கம்பு, பருத்தி விதைகளை கடினப்படுத்த 20 கிராம் பொட்டாசியம் குளோரை டினை 1 லிட்டர் தண்ணீ ரில் கரைக்க வேண் டும். இக்கரைசலில் 550 மில்லி லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ விதை யினை 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி இயல்பான ஈரப் பதம் வரும் வரை நிழலில் வைத்து பின்னர் விதைக்க வேண்டும்.

    சோளம்

    சோளம் விதையை கடினப்படுத்த 20 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் டினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில் 650 மில்லி லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ விதை யினை 18 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி அதன் இயல்பான ஈரப்பதம் வரும் வரை நிழலில் வைத்த பின் விதைக்க வேண்டும்.

    உளுந்து, பாசிப்பயறு

    உளுந்து, பாசிப்பயறு விதைகளை கடினப்படுத்த 1 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 1 கிராம் மாங்கனீசு சல்பேட்டினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரை சலில் 350 மில்லி லிட்டர் எடுத்து அதில் 1 கிலோ விதையினை 3 மணி நேரம் ஊற வைத்து பின்னர் நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். விதைக்க பயன்படுத்தும் விதையின் அளவை பொறுத்து கரைசலின் அளவினை கூட்டிக் கொள்ளலாம்.

    இந்த தகவலை ராமநாத புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    • அஞ்சலக ஊழியா்களுக்கு அஞ்சல் வணிக வளா்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.
    • அஞ்சலக பதிவுபெற்ற வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    அவிநாசி,அக்.15-

    அஞ்சலக வார விழாவையொட்டி, அஞ்சலக ஊழியா்களுக்கு அஞ்சல் வணிக வளா்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.

    அவிநாசி அஞ்சல் நிலையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவிநாசி அஞ்சல் அலுவலா் ஏஞ்சலின் ஐஸ்வா்யா வரவேற்றாா்.

    அஞ்சல் வணிக வளா்ச்சித் திட்டம், விரைவு அஞ்சல் சேவை, பாா்சல் சேவை, இணையவழி, வெளிநாட்டு அஞ்சல், அஞ்சலக வங்கிக் கணக்கு சேவை, வங்கி வட்டி விகிதம், பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம், பென்ஷன் திட்டம், ஆதாா் சேவைகள் உள்ளிட்டவை குறித்து திருப்பூா் மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா் விளக்கமளித்தாா்.

    இதில், தெக்கலூா், சேவூா், பழங்கரை, துலுக்கமுத்தூா், செம்பியநல்லூா் வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த அஞ்சலக பதிவுபெற்ற வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

    • திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பூத் கமிட்டி கூட்டம் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
    • பெரும்பாலானோருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படவில்லை.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் இன்று நடைபெற்றது.

    திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு பகுதி செயலா ளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலா ளர் நிலையூர் முருகன் முன் னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜன் செல் லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தை பொருத்த வரை ஏற்கனவே பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் பணி செய்து கொண்டிருக்கிறீர் கள். விரைவில் நாடாளு மன்ற தேர்தல் வரவுள்ளது. எனவே தற்போது தேர்தல் பணிகளை செய்ய தொடங் குங்கள். வீடு வீடாக சென்று அ.தி.மு.க.வின் திட்டங்களை யும் தி.மு.க. தடுத்து நிறுத்திய அ.தி.மு.க.வின் தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறுங்கள். நகை கடன் ரத்து, கல்வி கடன் ரத்து, செய்வதாக அறிவித்து தி.மு.க. மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி கடந்த முறை ஆட்சிக்கு வந்துள்ளது.

    அது குறித்து நீங்கள் வாக்காளர்களிடம் வீடு, வீடாக சென்று தெரிவிக்க வேண்டும். தற்போது நாடா ளுமன்றத் தேர்தலுக்காக ஒரு சிலருக்கு மட்டும் மகளிர் உரிமைத்தொகை வழங்கிவிட்டு பெரும்பாலா னோருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட வில்லை.

    அது குறித்தும் மக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரிக்க வேண்டும். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கட்சி தலைமை நிறுத்தும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதை நமது இலக் காக கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார் வட்டச் செய லாளர்கள் பொன்.முருகன், நாகரத்தினம், பாலா, வாசு தக்கார் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்சேர்க்கை, பாக முகவர்கள்மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து விவாதம்
    • சேலம் இளைஞரணி 2-வது மாநில மாநாட்டிற்கு வருவோர் பெயர் பட்டியல் படிவம் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்சேர்க்கைக்கு பாக முகவர்கள்மற்றும் பொறுப்பாளர்களை நியமனம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது நீலகிரி மாவட்ட செயலாளர்பா.மு. முபாரக்கிடம்இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்சேர்க்கைக்கு பாக முகவர்கள்மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்தும், சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டிற்கு கலந்து கொள்ேவார் பெயர் பட்டியல் படிவங்களை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், துணை அமைப்பாளர்கள் நாகராஜ் பத்மநாபன் ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில்குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாவட்ட சிறுபான்மை அமைப்பின் தலைவர் மு.முபாரக், குன்னூர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்நாதன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்லின்ராஜ், கோத்தகிரி இளைஞரணி மீன்ராஜ் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
    • பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சூபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பண்டாரவாடை ஊராட்சி மன்றம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு பொது மருத்துவம் மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடைப்பெற்றது.

    முகாமை, பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா துவக்கி வைத்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆலோ சனைகள், அறிவுரைகள் வழங்கினார்.

    முகாமில் பொதும ருத்துவம், கர்ப்பிணிகளுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, பிசியோதெரபி, மன நல மருத்துவம், சித்த மருத்துவம் என பல்வேறு மருத்துவத்திற்கு ஆலோசனைகளும், மருத்துவமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, கழக நிர்வாகி அறிவழகன், பாபநாசம் ஒன்றிய தலைவர் சுவாமிமலை பேரூர் தலைவர் புர்கான் அலி , வட்டார மருத்துவ அலுவலர் தீபக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    • திருப்பத்தூரில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற து.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், வருகிற மக்களவை தேர்த லில் 2 லட்சம் ஒட்டு வித்தி யாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும், கட்சி தொண்டர்கள் சோர்வின்றி பணியாற்ற வேண்டும் என்று கூறினார். பின்னர் ஏழை மாணவர் கள் 3 பேருக்கு கல்வி நிதி ரூ.15 ஆயிரம் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் முன் னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மாநில பேச்சாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் கணேசன், வட்டார தலை வர்கள் பன்னீர்செல்வம், பிரசாந்த், பேரூராட்சி உறுப்பினர் சீனிவாசன், வட்டார செயலாளர் ஜெயராஜ், இளைஞர் காங்கிரஸ் கார்த்தி, முகேஷ், தங்கராஜ், அருள்பிரகாஷ், செல்வம், ஹக்கீம், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×