தென்னை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

கருந்தலைப்புழுவால் பாதித்ததென்னை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை60-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர்.
தென்னை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை
Published on

வேலாயுதம் பாளையம், 

கரூர் மாவட்டம் புகழூர் பகுதியில் விவசாயிகள் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் தேங்காய் காய்த்த நிலையில் இலையில் கருந்தலைப்புழு தாக்கி தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இது குறித்து தகவல் அறிந்து, புழுதேரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர் மற்றும் தலைவர் திரவியம், வேளாண் விஞ்ஞானி தமிழ்ச்செல்வன், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், வட்டார வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகளிடம் இரவு நேரங்களில் விளக்கு பொறி வைக்கும்படியும், அதேபோல் ஒட்டுண்ணிகளை தென்னை மரங்களில் விட வேண்டும் என்றும் இது போல் தொடர்ந்து செய்து வந்தால் கருத்தலை புழு தாக்குதல் பாதிப்பிலிருந்து தென்னை மரங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனைகளை வேளாண் துறை அதிகாரிகள் வழங்கினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com