என் மலர்
உள்ளூர் செய்திகள்

உரிமம் இன்றி இயங்கும் கனரக வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்
- மதுக்கூர் பகுதியில் சில கனரக வாகனங்கள் எவ்வித உரிமமும் இன்றி இயங்கி வருகிறது.
- சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
மதுக்கூர்:
காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-
மதுக்கூர் பகுதியில் சில கனரக வாகனங்கள் எவ்வித உரிமமும் இன்றி இயங்கி வருகிறது.
இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, போக்குவரத்து காவல்துறை சார்பில் அனைத்து வாகன உரிமையாளர்களையும் அழைத்து சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோ சனைகள் வழங்க வேண்டும்.
மேலும், எவ்வித உரிமம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகனங்களை பறிமுதல் செய்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






