தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை: நீலகிரி நிர்வாகிகள் ஆலோசனை

இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்சேர்க்கை, பாக முகவர்கள்மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து விவாதம் சேலம் இளைஞரணி 2-வது மாநில மாநாட்டிற்கு வருவோர் பெயர் பட்டியல் படிவம் வழங்கப்பட்டது
தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை: நீலகிரி நிர்வாகிகள் ஆலோசனை
Published on

ஊட்டி,

இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்சேர்க்கைக்கு பாக முகவர்கள்மற்றும் பொறுப்பாளர்களை நியமனம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது நீலகிரி மாவட்ட செயலாளர்பா.மு. முபாரக்கிடம்இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்சேர்க்கைக்கு பாக முகவர்கள்மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்தும், சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டிற்கு கலந்து கொள்ேவார் பெயர் பட்டியல் படிவங்களை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், துணை அமைப்பாளர்கள் நாகராஜ் பத்மநாபன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில்குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாவட்ட சிறுபான்மை அமைப்பின் தலைவர் மு.முபாரக், குன்னூர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்நாதன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்லின்ராஜ், கோத்தகிரி இளைஞரணி மீன்ராஜ் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com