search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young women"

    சபரிமலையில் இன்று ஐயப்பனை தரிசித்த இளம்பெண்களின் வீடுகள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #SabarimalaProtest #SabarimalaWomen
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலுக்கு இன்று போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனை தரிசித்த இளம்பெண்கள் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பிந்து (வயது 44), கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டியை சேர்ந்தவர். ஏற்கனவே இவர் சபரிமலை சென்றபோது இவரது வீடு மீது ஐயப்ப பக்தர்கள் தாக்குதல் நடத்தினர். இதுபோல மலப்புரம் அங்காடிபுரத்தை சேர்ந்த கனகதுர்கா (42) வீடு மீதும் தாக்குதல் நடந்தது.

    இன்று அதிகாலையில் இவர்கள் இருவரும் மீண்டும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்த தகவல் வெளியானதும் மர்ம நபர்கள் சிலர் பிந்து, கனகதுர்கா வீடுகள் முன்பு திரண்டனர். அவர்களுக்கு எதிராக கோ‌ஷமிட்டபடி போராட்டத்திலும் ஈடுபட்டனர். சிலர் வீடுகள் மீது கல்வீசவும் செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #SabarimalaProtest #SabarimalaWomen
     
    சபரிமலைக்கு செல்ல முயன்ற இளம்பெண்கள் 6 பேரை போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். #Sabarimala #AyyappaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    சபரிமலை கோவில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். தந்திரி கண்டரருராஜீவரு உடன் இருந்தார். நேற்று சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்பட்டது. வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.

    நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றது. இன்றும் சாமி தரிசனம் செய்ய சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.



    வருகிற 14-ந்தேதி மாலை 5 மணிக்கு தங்க ஆபரணங்களில் ஜொலிக்கும் சுவாமி ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை நடைபெறும். அதே சமயம் சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.

    இந்த நிலையில் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற 2 இளம்பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய சம்பவமும் நடந்து உள்ளது.

    விசாகபட்டினத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய பம்பை வந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் வயதில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது ஆதார் அட்டையை போலீசார் சரி பார்த்தனர். அப்போது அதில் அவருக்கு 49 வயது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பெண் தனக்கு 50 வயது ஆகிவிட்டதாகவும் ஆதாரில் தவறாக வயது குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஆனால் அந்த பெண் சாமி தரிசனத்திற்கு சென்றால் பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார் அவருக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினார்கள். இதே போல கர்நாடகாவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் குழுவில் இடம் பெற்ற ஒரு பெண்ணுக்கு 30 வயதுதான் ஆகியிருந்தது. அவர் சபரிமலைக்கு சாமி தரிசனத்திற்கு சென்றால் பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்துவார்கள் என்பதால் அந்த பெண்ணுக்கும் அறிவுரை வழங்கி அவரை திருப்பி அனுப்பினார்கள்.

    இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழுவினர் இன்று காலை சபரிமலை செல்வதற்காக வந்தனர். அந்த குழுவில் 50 வயதிற்கு உட்பட்ட 4 இளம்பெண்களும் இருந்தனர். அவர்களை நிலக்கல்லில் தடுத்து நிறுத்திய போலீசார் இளம்பெண்கள் சபரிமலை சென்றால் ஏற்படும் பிரச்சினையை எடுத்துக்கூறினார்கள்.

    அதற்கு அந்த இளம்பெண்கள் தாங்கள் பம்பை வரை மட்டும் செல்ல திட்டமிட்டுள்ளதாக போலீசாரிடம் கூறினார்கள். அதே சமயம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது சபரிமலை செல்லப் போவதாக மாற்றிக் கூறினார்கள்.

    போலீசாரின் அறிவுரையை ஏற்று 4 பெண்களும் சபரிமலை செல்லும் திட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.  #Sabarimala #AyyappaTemple
    களக்காடு மற்றும் ஆறுமுகநேரியில் இளம்பெண் உள்பட 2 தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள காடுவெட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். விவசாயி. இவரது மகள் ராதா (வயது 19). இவர் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் அடிக்கடி மடிக்கணினியை பார்த்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ராதா தனது மடிக்கணினியை பார்த்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் வீட்டு வேலை செய்யாமல் மடிக்கணினியை பார்த்துக் கொண்டு இருக்கிறீயே? என சத்தம்போட்டுள்ளனர்.

    இதில் மனமுடைந்த ராதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷத்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை ராதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    பணகுடி அருகே உள்ள கோவில்விளையை சேர்ந்தவர் குணா (வயது 45). இவரது மனைவி செல்வம். குணாவிற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி செல்வம் பிரிந்து சென்றுவிட்டார்.

    இந்நிலையில் கடந்த 2-ந் தேதி களக்காடு பழைய பேருந்து நிலையம் அருகே குணா வி‌ஷத்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இவரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவங்கள் குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏரல் அருகே உள்ள இடையர்காட்டை சேர்ந்தவர் நயினார். இவரது மகன் நயினார் செல்வம் (வயது 26). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணகாகவில்லை. இவர் கடந்த சில மாதங்களாக சரியாக வேலை செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதில் மனமுடைந்த காணப்பட்ட அவர் கடந்த 27-ந் தேதி முக்காணி நேதாஜி தெருவில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். இங்கு வைத்து அவர் வி‌ஷத்தை குடித்துவிட்டார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பேச மறுத்த இளம்பெண்ணை வாலிபர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வள்ளியூர்:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பெரும்சிலம்பு, வாரியவிளையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மெர்சி (வயது23). இவர் வள்ளியூரில் உள்ள விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை பணியில் இருந்த மெர்சி, தோழி ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு ஜவுளிக்கடையை விட்டு வெளியே வந்தார். பஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடை பக்கம் வந்த போது, அங்கு ஏற்கனவே ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து விட்டு வேலையை விட்டு நின்று விட்ட ரவீந்திரன் மெர்சிக்காக காத்து நின்றார்.

    அவரிடம் மெர்சி பேச முயன்ற போது அந்த வாலிபர் தனது கையில் உள்ள கத்தியால் மெர்சியின் கழுத்து, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மெர்சி பலியானார். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    வள்ளியூர் பஸ் நிலையம் அருகே எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலைக்கான காரணம் குறித்து திடுக் தகவல்கள் கிடைத்தன.

    குமரி மாவட்டம் வாரிய விளையை சேர்ந்த மெர்சி அந்த ஜவுளிக்கடையில் கடந்த 3½ மாதத்திற்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளார். அதே ஜவுளிக்கடையில் திருக்குறுங்குடி அருகே உள்ள மகிலடி கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் ரவீந்திரன் (31) என்ற என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார்.

    முதலில் வேலை தொடர்பாக ரவீந்திரனும், மெர்சியும் பேசி பழகினர். இதில் ரவீந்திரனுக்கு மெர்சி மீது அளவு கடந்த காதல் ஏற்பட்டது. இதனால் அவர் மெர்சியிடம் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். இதை மெர்சி ஏற்கவோ, மறுக்கவோ இல்லையாம். ஆனால் அவர் தொடர்ந்து ரவீந்திரனிடம் நட்பாக பேசி, பழகி வந்துள்ளார்.

    இந்த நிலையில் ரவீந்திரனுக்கு ஜவுளிக்கடை வேலை பிடிக்காததால், பணியில் இருந்து நின்று விட்டார். அதன் பிறகு அவர் செல்போன் மூலம் மெர்சியிடம் பேசி உள்ளார். முதலில் அவரிடம் சகஜமாக பேசிய மெர்சி, அதன் பிறகு தன்னிடம் காதல் திருமணம் என்று பேச வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

    இந்த நிலையில் ரவீந்திரன் வேறு வேலைக்கும் செல்லாமல் அடிக்கடி மெர்சி வேலைக்கு செல்லும் போதும், பணி முடிந்து திரும்பும் போதும் அந்த பகுதிக்கு சென்று அவருடன் பேச முயன்றுள்ளார். ஆனால் மெர்சி பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தான் ரவீந்திரன், மெர்சியிடம் கடைசியாக உன்னிடம் பேசி விட்டு வெளியூர் செல்ல போவதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மெர்சி அங்கு சென்ற போது ரவீந்திரன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.

    கொலை செய்யப்பட்ட மெர்சி பிணமாக கிடக்கும் காட்சி

    இதைத்தொடர்ந்து வள்ளியூர் போலீசார் இன்று ரவீந்திரனை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரவீந்திரன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மெர்சி என்னுடன் முதலில் நன்றாக பேசி பழகி வந்தார். ஆனால் நான் வேலையை விட்டு நின்றதால் என்னுடன் பேசுவதை விட்டு விட்டார். என்னை காதலிக்கவும் மறுத்து விட்டார். நான் வேறு வேலைக்கு சென்று அவரை திருமணம் செய்ய முன்வந்தேன். ஆனால் மெர்சி திருமணம் செய்யவும் மறுத்து விட்டார்.

    இதனால் எனக்கு கிடைக்காத மெர்சி, வேறு யாருடனும் வாழ கூடாது என்று முடிவு செய்து கடைசியாக அவரிடம் பேச வேண்டும் என்று வரச் சொன்னேன். அவர் அங்கு வந்ததும், மீண்டும் என்னை காதலிக்கும்படி கேட்டேன். ஆனால் மெர்சி அதற்கு பதில் சொல்லாததால், அவளை குத்திக்கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து ரவீந்திரனை போலீசார் இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    பாளை அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி அருகே உள்ள சவுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு கடல் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது வேனில் பாளை அருகே உள்ள குமந்தானூரை சேர்ந்த 17 வயது இளம்பெண். அந்த நிறுவனத்துக்கு தினசரி வேலைக்கு சென்று வந்தார். அப்போது கருப்பசாமிக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

    அப்போது கருப்பசாமி எப்படியும் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசைவார்த்தை கூறி அந்த இளம்பெண்ணை கற்பழித்தார். தற்போது கருப்பசாமி அந்த இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து பேசுவதை நிறுத்தி விட்டாராம்.

    இதனால் அந்த இளம்பெண் பாளை தாலுகா மகளிர் போலீசில் புகார் செய்தார். பெண் போலீசார் விசாரணை நடத்தி கருப்பசாமி மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். #tamilnews
    ஐயப்பனை தரிசிக்கும் வரை மாலையை கழற்ற மாட்டோம் என்று சபரிமலைக்குச் செல்ல கேரள அரசிடம் பாதுகாப்பு கேட்ட 3 இளம்பெண்கள் கூறினர். #Sabarimala #YoungWomen
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது கோவிலின் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று ஐயப்ப பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர். கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு 2 முறை கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்கு வந்த பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்.

    இந்நிலையில் மண்டல பூஜை விழாவுக்காக கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. இனி மண்டல பூஜை நடக்கும் டிசம்பர் 27-ந்தேதி வரை நடை திறந்திருக்கும். இந்த கால கட்டத்தில் கோவிலுக்குச் செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.

    இதனால் சபரிமலையில் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என போலீசார் கருதினர். எனவே சபரிமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். போலீஸ் தடையையும் மீறி சபரிமலையில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    சபரிமலைக்கு வந்த புனேவைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திலேயே பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் பீதிக்கு ஆளான பெண்கள் பலரும் இதுவரை சபரிமலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த், அனிலா, கொல்லத்தைச் சேர்ந்த தன்யா ஆகிய 3 பெண்களும் சபரிமலை கோவிலுக்குச் செல்ல அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்று நாங்கள் 3 பேரும் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளோம். இந்த தகவல் வெளியானதும் எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. வெளியில் நடமாடவும் பயமாக இருக்கிறது.

    ஆனால் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை. எனவே சபரிமலைக்குச் செல்ல அரசாங்கம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களால் இப்போது எங்களால் அங்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறி பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் நிலை வர வேண்டும். அப்படி வந்தால் அது எதிர்கால பெண்களுக்கு பலன் உள்ளதாக அமையும்.

    இப்போது கோவிலுக்குச் செல்ல அணிந்துள்ள மாலையை கோவிலுக்கு சென்ற பின்பு தான் அகற்றுவோம். அதுவரை மாலையை கழற்ற மாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.  #Sabarimala #YoungWomen


    சபரிமலையில் அசம்பாவிதத்தை தவிர்க்க வேண்டும் என்றால் தயவு செய்து இளம்பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு கேட்டுக் கொண்டுள்ளார். #SabarimalaTemple #TantriKandararuRajeevaru
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள், காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் கூட்டினார்.

    இதில் கலந்து கொண்ட எதிர்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுஆய்வு மனு விசாரணைக்கு வரும் ஜனவரி 22-ந்தேதி வரை ஒத்திவைக்க வற்புறுத்தினார்கள். ஆனால் அதை பினராயி விஜயன் ஏற்க மறுத்ததால் அந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது.
    இதே போல பந்தளம் மன்னர் குடும்பம் மற்றும் சபரிமலை தந்திரிகளுடன் பினராயி விஜயன் நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதற்கிடையில் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு இது பற்றி கூறும்போது, சபரிமலையில் அசம்பாவிதத்தை தவிர்க்க வேண்டும் என்றால் தயவு செய்து இளம்பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார். #SabarimalaTemple #TantriKandararuRajeevaru 

    சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ள நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்து இளம்பெண்கள் விரதத்தை தொடங்கினர். #Sabarimala
    கொழிஞ்சாம்பாறை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அதிரடி தீர்ப்பை அளித்தது. இதனை பலர் வரவேற்றுள்ளனர்.

    ஆனால் கேரள மாநிலத்தில் பெண்களே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சியினர் ஐயப்பன் கோவிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்க மாட்டோம். கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்று ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கேரளம், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கன்னுபுரம் அய்யத்தோள் என்ற பகுதியை சேர்ந்த ரேஷ்மா (வயது 29), நிசாந்த் (27) பெயர் கூற விரும்பாத மற்றொரு பெண் உள்பட 3 பெண்கள் நேற்று மண்டல விரதத்தை தொடங்கினர். கருப்பு ஆடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல உள்ள பெண்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-



    எங்களுக்கு ஐயப்பன் மீது பக்தி அதிகம். கடந்த சில வருடங்களாக 41 நாட்கள் விரதம் இருந்து வீட்டிலேயே ஐயப்பனை வணங்கி பூஜை செய்து முடித்தோம். அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மனநிறைவை அளிக்கிறது. ஐயப்பனை நேரில் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

    ஆண்களை போலவே கடும் விரதம் இருந்து காடுமலை கடந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய உள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினர்.  #Sabarimala

    பெரியபாளையம் அருகே சீர்வரிசை கேட்ட காதல் கணவர் வீட்டு முன் அமர்ந்து இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆதரவாக பெண்களும் களம் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பெரியபாளையம்:

    திருவள்ளுர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள காரணிபாட்டை கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது24). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

    இதே பகுதியை சேர்ந்த கவுசல்யா (வயது22) நர்சிங் கோர்ஸ் படித்துள்ளார். இருவரும் கடந்த ஏழு வருடமாக காதலித்து வந்தனர்.

    இந்நிலையில், கடந்த மாதம் விஜய்க்கும், வேறு பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதை அறிந்த கவுசல்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விஜயிடம் முறையிட்டுள்ளார்.

    ஆனால், விஜய் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். இது பற்றி ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் கவுசல்யா புகார் செய்தார். காதலர்கள் இருவரையும் அழைத்து போலீசார் சமரசம் செய்து கோவிலில் திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.



    பின்னர் ஆடி மாதத்தை யொட்டி கவுசல்யா தனது தாய் வீட்டுக்கு சென்றார். மீண்டும் கணவர் வீட்டுக்கு திரும்பி வந்ததும் விஜய் அவரது தாய் உஷா, சகோதரி சிவரஞ்சனி ஆகியோர் ஆடி மாத சீர் கொண்டு வரவில்லை என்று கவுசல்யாவை தரக்குறைவாக பேசி இருக்கிறார்கள்.

    25 சவரன் நகை மற்றும் சீர்வரிசை எடுத்து வரவேண்டும் என்று வலியுத்தி இருக்கிறார்கள். இது குறித்து கவுசல்யா கடந்த 28-ந் தேதி ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் செய்தார்.

    எனவே, கணவன்-மனைவி இருவரையும் போலீசார் அழைத்து பேசி சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், வீட்டுக்கு வந்தவுடன் விஜய் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள விஜயின் சகோதரி சிவரஞ்சனி வீட்டுக்கு சென்று விட்டனர்.



    பிரச்சனையை பெரிதாக்கியதால் கவுசல்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து தனது கணவன் மற்றும் மாமியார் தன்னை வீட்டின் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கவுசல்யா பூட்டி கிடக்கும் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கிராம மக்கள் மற்றும் சுய உதவி குழு பெண்கள் சிலர் கவுசல்யாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். #tamilnews
    கே.கே.நகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விபசாரத்தில் தள்ளப்பட்ட 2 இளம்பெண்களை மீட்டனர். விபசாரம் நடத்தி வந்த தலைவியை தேடி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் பகுதியில் விபசாரம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தது. இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் திருச்சி வடக்கு காட்டூரை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 24) என்பவர் கே.கே.நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் ஒருவர், தினேஷ்குமாரிடம் நைசாக பேச்சு கொடுத்ததோடு, கே.கே.நகர் பாத்திமா தெருவில் உள்ள ஒரு வீட்டில் 2 இளம்பெண்கள் இருக்கிறார்கள். உல்லாசத்திற்கு வருகிறீர்களா? என்று அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார் , உடனடியாக திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் கே.கே.நகர் பாத்திமாதெரு பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாடகை வீட்டில் 2 அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்களை மீட்ட போலீசார் , அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் விபசாரம் நடத்தி வந்த ராணி தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×