search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yogi adityanath"

    • காவல்துறையில் 22,000 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • காவலர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    லக்னோ:

    காவலர் நினைவுத் தினத்தையொட்டி உத்தர பிரதேசத்தில் பணியின் போது உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத், நிகழ்ச்சியில் பேசியதாவது:

    நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது. கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டர்களில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். 4,453 பேர் காயமடைந்தனர்.

    காவலர்களின் குடும்ப நலன் மற்றும் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறையில் 22,000 பெண்கள் உட்பட 1,50,231 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    45,689 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுதப்படை காவலர்கள், தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கு தொலைபேசி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புகழ்பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் மறைந்தார்.
    • பிரமாண்ட வீணை சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி :

    புகழ்பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் மறைந்தார். அவரது புகழை போற்றும் வகையில் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் சாலை சந்திப்பு ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டு உள்ளது. சரயு நதிக்கரையில் உள்ள இந்த சந்திப்பு லதா மங்கேஷ்கர் சவுராகா என்று இனி அழைக்கப்படும்.

    ரூ.7.9 கோடி செலவில் அந்த சந்திப்பை மேம்படுத்திய மாநில அரசு, அங்கு பிரமாண்ட வீணை சிலை ஒன்றையும் வைத்து இருக்கிறது. 12 மீட்டர் உயரம், 40 அடி நீளம் கொண்ட இந்த சிலை 14 டன் எடை கொண்டது ஆகும்.

    லதா மங்கேஷ்கரின் 93-வது பிறந்த தினத்தையொட்டி இந்த சந்திப்பை மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண் ரெட்டியும் கலந்து கொண்டார்.

    இதுபோன்ற பிரமாண்ட இசைக்கருவி நிறுவப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல் இடம் என மாநில அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். சுற்றுலா பயணிகள் மற்றும் இசை ஆர்வலர்களை கவரும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • ராமர் கோவில் கட்டப்படும் ராம ஜென்ம பூமியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இந்தக் கோவில் உள்ளது.
    • தனது மக்கள் நலப்பணிகளால், கடவுள் நிலையை எட்டியுள்ளார் யோகிஜி

    அயோத்தி :

    தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர், அபிமான நட்சத்திரத்துக்கு தொண்டரோ, ரசிகரோ கோவில் கட்டுவது நம் நாட்டில் வழக்கம்தான். அந்தவகையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அந்த ஊர்க்காரரான பிரபாகர் மவுரியா, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கோவில் கட்டியுள்ளார்.

    இங்கு தலைக்குப் பின் ஒளிவட்டம், வில்-அம்புடன் யோகி ஆதித்யநாத்தின் ஆளுயர சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. காவி ஆடையும் அணிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்தக் கோவிலில் காலை, மாலை இருவேளை பூஜையுடன், 'பக்தர்களுக்கு' பிரசாதமும் வினியோகிக்கப்படுகிறது.

    பைசாபாத்-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையையொட்டி பாரத்குண்ட் என்ற இடத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. வனவாசம் சென்ற ராமருக்கு அவரது சகோதரர் பரதன் இங்குதான் விடை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ராமர் கோவில் கட்டப்படும் ராம ஜென்ம பூமியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இந்தக் கோவில் உள்ளது. கோவிலை கட்டியுள்ள பிரபாகர் மவுரியா, 'தனது மக்கள் நலப்பணிகளால், கடவுள் நிலையை எட்டியுள்ளார் யோகிஜி. அதனால்தான் அவருக்கு கோவில் கட்டும் எண்ணம் எனக்கு வந்தது. ராமர் கோவில் கட்டும் அவருக்கு நான் கோவில் கட்டியுள்ளேன்' என்கிறார். ராமரை தான் வழிபடுவதைப் போலவே தினமும் யோகி ஆதித்யநாத்தை மந்திரம் சொல்லி வழிபடுவதாக மவுரியா கூறுகிறார்.

    மவுரியாவுக்கு நிரந்தர வேலையோ, நிலமோ இல்லை. அப்படியானால், இந்தக் கோவில் கட்டுவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால்...

    'பஜனைகள், பக்திப் பாடல்களை நான் யூடியூப்பில் வெளியிட்டு மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன். அந்தப் பணத்தில்தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கிறேன்' என்று விளக்கம் அளிக்கிறார்.

    இதற்கிடையில் 'யோகி ஆதித்யநாத் கோவில்' பற்றி கேள்விப்பட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரு பூடகமான டுவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

    பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் உத்திரபிரதேச மாநிலத்தில் எந்த வன்முறையும் நடைபெறவில்லை, விவசாயிகள் தற்கொலை இல்லை, பசி பட்டினியால் யாரும் உயிரிழக்கவில்லை என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
    லக்னோ:

    403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.

    இந்நிலையில், அம்மாநிலத்தின் மைஜாபூர் நகரில் 450 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். 

    அந்த நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காக இது போன்ற திட்டங்களே முன்னறே தொடங்கி இருக்கலாம். 

    ஆனால், முந்தைய அரசுகள் ஒருசார்பாக செயல்பட்டு மக்களை தவறாக வழிநடத்தின. காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்றவற்றை யார் தடுத்தது. திட்டங்களை செயல்படுத்த அவர்களுக்கு முழுமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்களது ஆட்சி காலத்தில் அவர்களின் குடும்பம், உறவினர்கள், சாதி, மதத்திற்கான பணிகள் நடைபெற்றதே தவிர வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றவில்லை.

    காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி

    காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அவர்களது ஆட்சி காலத்தில் வன்முறையை தூண்டின. அவர்களது ஆட்சி காலத்தில் நேர்மையின்மை, லஞ்சம், வன்முறைகள் நடைபெற்றன. 

    பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் மாநிலத்தில் எந்த வன்முறையும் நடைபெறவில்லை, விவசாயிகள் தற்கொலை இல்லை, பசி பட்டினியால் யாரும் உயிரிழக்கவில்லை என்றார்.

    வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் மீட்கப்பட்ட அன்னபூர்ணா சிலையை வைத்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சிறப்பு பூஜைகள் செய்தார்.
    வாரணாசி :

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பெண் கடவுள் அன்னபூர்ணா சிலை இருந்தது. இது, 18-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான சிலை ஆகும்.

    ஆனால், 108 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலை திருடப்பட்டது. அதை கொள்ளையர்கள் கனடாவுக்கு கடத்திச் சென்றனர். சட்ட போராட்டம் மூலம் அது 108 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டு வரப்பட்டுள்ளது.

    அந்த சிலையை மீண்டும் நிறுவும் பணி, காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று நடந்தது. இதற்காக 2 நாள் பயணமாக, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், நேற்று முன்தினம் வாரணாசிக்கு வந்தார். வெள்ளி பல்லக்கில் சிலையை வைத்து கோவிலுக்கு கொண்டு வந்தார்.

    கோவிலின் வடகிழக்கு மூலையில், அன்னபூர்ணா கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அங்கு அன்னபூர்ணா சிலையை வைத்து யோகி ஆதித்யநாத் சிறப்பு பூஜைகள் செய்தார். வேத மந்திரங்கள் முழங்க சிலை நிறுவப்பட்டது.

    மேலும், கோவிலின் மறுசீரமைப்பு பணிக்காக அப்புறப்படுத்தப்பட்ட வேறு 5 சாமி சிலைகளும் மீண்டும் வைக்கப்பட்டன.

    இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிகள், 30 ஆண்டுகளுக்கு முன் ஜெய் ஸ்ரீராம் என்று கூறினாலே குற்றமாக பார்த்தன. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் இறுதியாக ராமர் கோவிலுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
    அயோத்தி :

    தீபாவளியையொட்டி அயோத்தியில் தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடந்தது. இதில் பங்கேற்ற உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-

    மாநிலத்தில் இதற்கு முன் ஆண்ட அரசுகள் மக்களின் பணத்தை கப்ரிஸ்தானுக்காக (கல்லறைகள்)செலவிட்டன. ஆனால், பா.ஜனதா அரசு மக்களின் பணத்தை கோவில்களின் மறுகட்டமைப்புக்காக செலவிடுகிறது. மதத்தின் மீதும் கலாசாரத்தின் மீது பற்றுள்ளவர்கள், இதை மக்கள் வாழ்க்கையை உயர்த்த பயன்படுத்துவார்கள்.

    இங்கு மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களும் உத்தரபிரதேசத்தில் நடந்து வருகின்றன. ஏறக்குறைய 300 திட்டங்களின் பணிகள் அடுத்த 2 மாதங்களில் முடிக்கப்படும்.

    இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிகள், 30 ஆண்டுகளுக்கு முன் ஜெய் ஸ்ரீராம் என்று கூறினாலே குற்றமாக பார்த்தன. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் இறுதியாக ராமர் கோவிலுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    30 ஆண்டுகளுக்கு முன் உங்களை எதிர்த்தவர்கள், இன்று உங்கள் முன், உங்கள் வலிமையின் முன் பணிந்துவிட்டார்கள். ராமர் ஒவ்வொருவரையும் ஒன்று சேர்ப்பார், இதுதான் ராமரின் சக்தி. 2023-ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டுமானம் முடிக்கப்படும், இதைத் தடுக்க உலகில் யாராலும் முடியாது.

    இந்த உலகின் முன் அயோத்தி நகரம் கலாசார நகரமாக மாறிவிட்டது, அடுத்துவரும் நாட்களில் இன்னும் வளர்ச்சித்திட்டங்கள் வரும். உலகளவில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை இந்த நகரம் ஈர்க்கும். எனவே இது சுற்றுலா தல நகரமாக மாறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உத்தர பிரதேச அமைச்சரவையில் இருந்து சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ராஜ்பர் நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரையின்படி கவர்னர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் இடம்பெற்றிருந்தது. அந்த கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அக்கட்சியைச் சேர்ந்த மேலும்  சில எம்எல்ஏக்கள் இணை அமைச்சர்களாக பொறுப்பில் இருந்தனர்.

    இந்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பர் சமீபகாலமாக பாஜகவை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பாஜக உறுப்பினர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என சமீத்தில் பேசினார். அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும் கூறி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.



    இந்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பரை தனது அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி ஆளுநருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பரிந்துரை செய்தார். இதேபோல் இணை அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவிகளில் இருக்கும், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் உடனடியாக நீக்க பரிந்துரை செய்தார்.

    இந்த பரிந்துரையை கவர்னர் ராம் நாயக் ஏற்றுக்கொண்டு, ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இதேபோல் அக்கட்சியின் பிற உறுப்பினர்களும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
    இன்று காலை தொடங்கிய இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரம்பூரிலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவனிலும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    உத்தர பிரதேசத்தின், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில், சமாஜ்வாதியின் சார்பில், ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.



    மத்திய அமைச்சர், மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச பாஜக தலைவர், மகேந்திர நாத் பாண்டே ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஏழு கட்டத்திலும் தேர்தலை சந்திக்கும், பீகாரில் உள்ள, எட்டு தொகுதிகளில், 157 பேர் போட்டியிடுகின்றனர். இதில், நான்கு மத்திய அமைச்சர்களும் அடங்குவர்.

    இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் முன்னிட்டு இன்று காலை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரம்பூரில் வாக்களித்தார். அதே போல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறிய சர்ச்சைக்குரிய பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் கடந்த 5-ந்தேதி வெளியிட்டு இருந்தார். மேலும் மாநிலம் முழுவதும் பிரசாரத்தின் போதும் இந்த கருத்தை அவர் தெரிவித்து வந்தார்.

    இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர், ஆதித்யநாத்தின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரியை பதிவை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் வழங்கியது. இதை ஏற்றுக்கொண்ட டுவிட்டர் நிறுவனம், ஆதித்யநாத்தின் பதிவை நேற்று நீக்கியது.

    முன்னதாக தனது பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்த யோகி ஆதித்யநாத்துக்கு 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague 
    ஆங்கிலேயர் ஆட்சிக்கும், உ.பி முதல்வர் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #YogiAdityanath #PChidambaram
    காரைக்குடி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.



    இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பேசியது தொடர்பாக   யோகி ஆதித்யநாத்க்கு அம்மாநில தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியிருந்தது. யோகி தரப்பில் எந்த பதிலும் இல்லை. இதனையடுத்து தேர்தல் ஆணையம், 16ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு யோகி ஆத்தியநாத் பிரசாரம் செய்யக்கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இது குறித்து   முன்னாள் மத்திய நிதி மந்திரி  ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தன்னுடைய பேச்சால், தன்னுடைய நடவடிக்கையால் யோகி பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறார். ஆங்கிலேயர் ஆட்சிக்கும், உத்தரபிரதேசம் முதல்வர் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது. முதன்முறையாக ஒரு முதல்வருக்கு இது போன்ற தண்டனை கிடைத்திருக்கிறது. கொஞ்சம் தன்மானம் உள்ளவராக இருந்தால் உடனடியாக யோகி பதவியை விட்டு விலக வேண்டும்' என கூறினார். #YogiAdityanath #PChidambaram


    உத்தரபிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியதால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. #ECNotice #ModelCodeofConduct
    புது டெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் சகரன்பூர் பகுதியில் உள்ள டியோபாண்ட் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஏப்ரல் 7ம் தேதி  மாயாவதி பேசுகையில் , 'முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்.  இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்' என பேசினார்.

    மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீருட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்குபலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.



    இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பேசியது தொடர்பாக   யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு அம்மாநில தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் இருவரும்  24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் தரப்பில் எந்த பதிலும் அனுப்பப்படாததால், தேர்தல் ஆணையம் இன்று சாட்டையை சுழற்றியது.

    16ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு யோகி ஆத்தியநாத் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேப்போல் முன்னாள் முதல்வர் மாயாவதியும் 16ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், பொதுக்கூட்டங்களில் பேசுவது மட்டுமின்றி தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தல், பத்திரிக்கை செய்தியாளர்களை சந்தித்தல் ஆகியவற்றிற்கும்  இந்த தடை பொருந்தும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #ECNotice  #ModelCodeofConduct




    உத்தரபிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியதால், 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #ECNotice #ModelCodeofConduct
    புது டெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த ஏப்ரல் 7ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசுகையில் , 'முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்.  இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்' என பேசினார்.

    மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.



    இந்நிலையில் 2017ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, சாதி மற்றும் மதத்தினை தேர்தல் பிரசாரங்களில் உபயோகிக்க தடை விதித்துள்ளது.

    இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பிரசாரத்தில் பேசியதாக  நேற்று தேர்தல் ஆணையம் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு, 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  #ECNotice #ModelCodeofConduct




    ×