search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறுதிக்கட்ட வாக்குப்பதிவு- நிதிஷ்குமார், யோகி ஆதித்யநாத் வாக்களித்தனர்
    X

    இறுதிக்கட்ட வாக்குப்பதிவு- நிதிஷ்குமார், யோகி ஆதித்யநாத் வாக்களித்தனர்

    இன்று காலை தொடங்கிய இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரம்பூரிலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவனிலும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    உத்தர பிரதேசத்தின், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில், சமாஜ்வாதியின் சார்பில், ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.



    மத்திய அமைச்சர், மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச பாஜக தலைவர், மகேந்திர நாத் பாண்டே ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஏழு கட்டத்திலும் தேர்தலை சந்திக்கும், பீகாரில் உள்ள, எட்டு தொகுதிகளில், 157 பேர் போட்டியிடுகின்றனர். இதில், நான்கு மத்திய அமைச்சர்களும் அடங்குவர்.

    இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் முன்னிட்டு இன்று காலை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரம்பூரில் வாக்களித்தார். அதே போல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
    Next Story
    ×