என் மலர்

  செய்திகள்

  யோகி ஆதித்யநாத்
  X
  யோகி ஆதித்யநாத்

  காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அவர்களது ஆட்சி காலத்தில் வன்முறையை தூண்டின - யோகி ஆதித்யநாத்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் உத்திரபிரதேச மாநிலத்தில் எந்த வன்முறையும் நடைபெறவில்லை, விவசாயிகள் தற்கொலை இல்லை, பசி பட்டினியால் யாரும் உயிரிழக்கவில்லை என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
  லக்னோ:

  403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.

  இந்நிலையில், அம்மாநிலத்தின் மைஜாபூர் நகரில் 450 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். 

  அந்த நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காக இது போன்ற திட்டங்களே முன்னறே தொடங்கி இருக்கலாம். 

  ஆனால், முந்தைய அரசுகள் ஒருசார்பாக செயல்பட்டு மக்களை தவறாக வழிநடத்தின. காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்றவற்றை யார் தடுத்தது. திட்டங்களை செயல்படுத்த அவர்களுக்கு முழுமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்களது ஆட்சி காலத்தில் அவர்களின் குடும்பம், உறவினர்கள், சாதி, மதத்திற்கான பணிகள் நடைபெற்றதே தவிர வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றவில்லை.

  காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி

  காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அவர்களது ஆட்சி காலத்தில் வன்முறையை தூண்டின. அவர்களது ஆட்சி காலத்தில் நேர்மையின்மை, லஞ்சம், வன்முறைகள் நடைபெற்றன. 

  பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் மாநிலத்தில் எந்த வன்முறையும் நடைபெறவில்லை, விவசாயிகள் தற்கொலை இல்லை, பசி பட்டினியால் யாரும் உயிரிழக்கவில்லை என்றார்.

  Next Story
  ×