என் மலர்

  செய்திகள்

  ஆங்கிலேயர் ஆட்சிக்கும், உ.பி முதல்வர் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது - ப.சிதம்பரம் தாக்கு
  X

  ஆங்கிலேயர் ஆட்சிக்கும், உ.பி முதல்வர் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது - ப.சிதம்பரம் தாக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆங்கிலேயர் ஆட்சிக்கும், உ.பி முதல்வர் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #YogiAdityanath #PChidambaram
  காரைக்குடி:

  உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

  அந்த வகையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.  இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பேசியது தொடர்பாக   யோகி ஆதித்யநாத்க்கு அம்மாநில தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியிருந்தது. யோகி தரப்பில் எந்த பதிலும் இல்லை. இதனையடுத்து தேர்தல் ஆணையம், 16ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு யோகி ஆத்தியநாத் பிரசாரம் செய்யக்கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

  இது குறித்து   முன்னாள் மத்திய நிதி மந்திரி  ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தன்னுடைய பேச்சால், தன்னுடைய நடவடிக்கையால் யோகி பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறார். ஆங்கிலேயர் ஆட்சிக்கும், உத்தரபிரதேசம் முதல்வர் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது. முதன்முறையாக ஒரு முதல்வருக்கு இது போன்ற தண்டனை கிடைத்திருக்கிறது. கொஞ்சம் தன்மானம் உள்ளவராக இருந்தால் உடனடியாக யோகி பதவியை விட்டு விலக வேண்டும்' என கூறினார். #YogiAdityanath #PChidambaram


  Next Story
  ×