search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதிஷ்குமார்"

    • வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு - பிரதமர் மோடி
    • 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் - நிதிஷ்குமார்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்.

    வரும் தேர்தலில், 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் என்று நேற்று நிதிஷ்குமார் பேசியது கிண்டலுக்கு உள்ளானது.

    இந்நிலையில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பாஜகவின் முழக்கம் தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில்,

    "இப்போது 400 என்கிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள், அது 250 ஆக குறையும். ஜூன் முதல் வாரத்தில் 175-லிருந்து 200 என்றளவில் இருக்கும். நான் அல்போன்சா மாம்பழத்தின் விலையை குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு செய்தியும் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டியதில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
    • வரும் தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் கூறி வருகிறார்

    பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்டார்.

    அங்கு பேசிய நிதிஷ்குமார், வரும் பாராளுமன்ற தேர்தலில், 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வரும் தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் கூறி வரும் நிலையில், 4000 எம்.பிக்கள் என்று நிதிஷ்குமார் பேசியது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.

    • பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது.
    • பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் எங்கள் அலுவலகத்துக்கு திடீரென வந்த சிலர் சீலிடப்பட்ட கவரை வைத்துவிட்டு சென்றனர். அதனை திறந்துபார்த்தபோது அதில் 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அதனால் யார் எங்களுக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்று ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.

    அதே போல் சமாஜ்வாதி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 10.84 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் அதில், 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பாத்திரங்கள் எங்களுக்கு தபால் மூலமாக வந்தது. ஆதலால் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை என சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

    • நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார்
    • இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார்

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.

    மக்களவை தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் நிதிஷ்குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் இணைந்து முதல்வரானார்.

    பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார். மோடி முன்னிலையில் இனிமேல் ஒருபோதும் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் காலித் அன்வர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "13 கோடி பீகார் மக்களும், பீகாரிகள் என்பதால் எங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) போன்ற எதுவும் தேவைப்படாது என நிதிஷ்குமார் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்" என்று தெரிவித்தார்.

    பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் பீகாரில் குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.

    • நிதிஷ் குமார் அணியை உடைக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணி ஈடுபட்டுள்ளது
    • பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சிராக் பஸ்வான் வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்றும் இறுதி செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நிதிஷ் குமார் அணியை உடைக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணி ஈடுபட்டுள்ளது. சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு பீகாரில் 8 எம்.பி. தொகுதியும், உத்தர பிரதேசத்தில் 2 தொகுதியும் தருவதாக கூறியுள்ளது. பா.ஜனதா கூட்டணியில் இந்த கட்சிக்கு 6 இடங்கள் மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சிராக் பஸ்வான் வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது.

    • இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்.
    • நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரூ.21,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்றுப் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

    நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதல் மந்திரியாக பதவி வகிக்கும் நிதிஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை கூட்டணி மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நிதிஷ்குமார் கருத்துக்கு ராஷ்டிரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நிதிஷ்குமாருக்கு நல்வாழ்த்துக்கள். இந்த முறை தான் இருக்கும் இடத்திலேயே இருப்பேன் என்றார். குறைந்தபட்சம் இந்த முறையாவது அவர் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.

    • பீகாரில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் மோகனியா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பயணித்தனர்.

    தேவ்காளி என்ற கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் முன்னே சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. அதன்பின் ஜீப்பும், பைக்கும் சாலையின் எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது மோதின.

    இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், பீகாரில் நடந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.
    • விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆர்.ஜே.டி. கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி மீண்டும் பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி அமைத்து முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

    இந்தியா கூட்டணியை வலிமையாக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு உரிய ஒத்துழைப்பு இல்லை என்பதால் அதில் இருந்து விலகியதாக நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பீகார் சட்டசபைக்கு வந்தார். அப்போது லாலுவும், நிதிஷ் குமாரும் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கை குலுக்கி கொண்டனர்.

    அப்போது ஆர்.ஜே.டி.- ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் கூட்டணி அமையுமா? என்று லாலுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு லாலு பதில் அளிக்கும்போது, "அவர் (நிதிஷ்குமார்) திரும்பி வரட்டும். பிறகு பார்ப்போம். அவருக்காக எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்து இருக்கும்" என்றார்.

    இதற்கிடையே லாலுவின் கோரிக்கையை நிதிஷ்குமார் நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.

    இந்தியா கூட்டணியில் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். வேறு ஏதோ மனதில் இருந்ததால் கூட்டணிக்கு இந்த பெயரை கூட நான் ஆதரிக்கவில்லை. கூட்டணி முறிந்து நீண்ட நாட்களாகிவிட்டது. தற்போது பீகார் மக்களுக்காக உழைக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன்.

    இவ்வாறு நிதிஷ்குமார் கூறி உள்ளார்.

    • பீகாரில் பா.ஜ.க. மற்றும் ஜனதா தளம் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.
    • மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    பாட்னா:

    மாநிலங்களவை தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற இருக்கிறது.

    இதற்கிடையே, பீகாரில் 6 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நிதிஷ்குமாரின் ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கிறது.

    இதற்கிடையே, பீகாரில் பா.ஜ.க. சார்பில் தர்மஷீலா குப்தா மற்றும் பீம் சிங் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பீகாரில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் சஞ்சய் குமார் ஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கட்சி தலைவர் நிதிஷ்குமார் அறிக்கை விடுத்துள்ளார்.

    • நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பாஜக 78, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
    • நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று மதியம் நடந்த விருந்துக்கு வரவில்லை.

    பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் மெகா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து அவர் ஆட்சி நடத்தி வந்தார். துணை முதல்-மந்திரியாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி இருந்தார்.

    இந்த நிலையில் சமீபத்தில் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் அமைந்திருந்த மெகா கூட்டணியை முறித்துக் கொண்டார். அங்கிருந்து விலகி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார்.

    மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமார் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பீகார் சட்டசபையில் நாளை (திங்கட்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

    பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். தனித்து ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் 121 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

    நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 127 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. பெரும்பான்மை பலத்தை விட இந்த கூட்டணிக்கு கூடுதலாக 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

    எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 77 எம்.எல்.ஏ.க்கள், லெனின் கம்யூனிஸ்டுக்கு 12 எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல். ஏ.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் என 93 எம்.எல்.ஏ.க்கள் பலமே உள்ளது. இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆளும் கட்சி வரிசையில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியானது.

    இதையடுத்து பா.ஜனதா கட்சி தனது எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளது. அதுபோல நிதிஷ்குமாரும் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை கண்காணித்து வருகிறார். அவர்களும் தனி இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று மதியம் நடந்த விருந்துக்கு வரவில்லை. அவர்கள் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் குதிரை பேரம் நடப்பதாக குற்றச் சாட்டுகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து ஓட்டெடுப்பின்போது அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும்.

    நிதிஷ் குமார் தொடர்பான விசயங்களுக்க ஆதரவு அளிக்க வேண்டும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி செயல்பட்டார் எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும் என கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஐந்து பேரில் இருவரும் நாங்கள் பீகார் மாநிலத்திற்கு வெளியில் இருப்பதாகவும், ஒருவர் உடல் நலக்குறைவால் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக தேஜஸ்வி கூறுகையில், "நாங்கள் விளையாட்டை இன்னும் தொடங்கவில்லை. ஆனால் விளையாட்டை நாங்கள்தான் முடித்து வைப்போம்" என்றார். இதனால் அவர் நாளைய நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் நிஜன்ராம் மாஞ்சியை இந்திய கம்யூனிஸ்டு தலைவர் ரகசியமாக சந்தித்து பேசினார். இதனால் நிதிஷ் குமாருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்குமா? என்பதில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் 4 எம்.எல்.ஏ.க்களும் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகதான் வாக்களிப்பார்கள் என்று மாஞ்சி உறுதி அளித்துள்ளார். என்றாலும் பீகார் அரசியலில் கடைசி நிமிட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நாளை காலை பீகார் சட்டசபையில் ஓட்டெடுப்பு நடக்கும்போது நிதிஷ்குமாருக்கு இருக்கும் பெரும்பான்மை பலம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.

    • பா.ஜ.க. ஆதரவுடன் பீகாரின் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார்.
    • 9-வது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்ற அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தில் ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் திடீரென விலகினார். அதன்பின், ஆளுநரைச் சந்தித்த நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, பா.ஜ.க. ஆதரவுடன் பீகாரின் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

    இதற்கிடையே, 9-வது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக்கூறிய பிரதமர் அலுவலகம் மாநிலத்துக்கு தேவையான நிதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர் என தெரிவித்தது.

    • கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன்.
    • கூட்டணிக்காக மிகவும் முயற்சித்தேன். ஆனால் அவர்கள் ஒன்றுகூட செய்யவில்லை என்றார் நிதிஷ்குமார்.

    பீகார்:

    பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். ஆனால் அவர்கள் ஏற்கனவே அதை முடித்து விட்டார்கள்.

    கூட்டணிக்காக நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன். ஆனால் அவர்கள் ஒன்று கூட செய்யவில்லை.

    எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இன்று வரை முடிவு செய்யவில்லை. இதனாலேயே நான் அவர்களை விட்டுவிட்டு முதலில் யாருடன் இருந்தேனோ அவர்களுடன் திரும்பி விட்டேன். நான் பீகார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.

    ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடந்தது என்பதை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா?

    9 கட்சிகள் முன்னிலையில் நடத்தினேன். 2019-2020ல் சட்டசபை முதல் பொதுக்கூட்டம் வரை எல்லா இடங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றி பேசினேன் என தெரிவித்தார்.

    ×