என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RajyaSabhaElection"

    • நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
    • நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல்.

    பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற 4 மாதங்களே ஆன நிலையில் பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

    ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் பீகாரின் புதிய அரசிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் முழு மனதுடன் பீகார் மக்களுக்கு பணியாற்றியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணியில் வென்ற நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பொறுப்பேற்றார்.

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின் நிதிஷ் குமார் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில்,"தொடக்கத்தில் இருந்தே சட்டமன்ற, நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. எனவே இம்முறை மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன்" என்றார்.

    இந்நிலையில், அமித்ஷா, நிதின் நபின் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    • தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.
    • அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 போட்டியிடுகிறது.

    தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.

    அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டுகின்றனர்.

    இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    அதன்படி, திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    திமுக கூட்டணி கட்சி தலைவரகளும் வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

     

    • கர்நாடகா, மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
    • மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் சிவசேனா கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது.

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் 10-ந்தேதி (நேற்று) நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    இதில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கார், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் இருந்து 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி விட்டனர்.

    மீதமுள்ள கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

    இதில் கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 4 இடங்களில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் சிரோயா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றது. இந்த மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் முகுல் வாசினிக், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    அரியானா மாநிலத்தில் பாஜக வேட்பாளர் கிஷன்லால் பன்வார் மற்றும் பாஜக-ஜே.ஜே.பி. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த மாநிலத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகி அஜய் மக்கன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கூட்டணி இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தம் உள்ள 6 இடங்களில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. இந்த மாநிலத்தில் போட்டியிட்ட மத்திய மந்திரி பியூஸ்கோயல் வெற்றி பெற்றார். சிவசேனா சார்பில் போட்டியிட்ட சஞ்சய் பவார் தோல்வியடைந்தார்

    ×