search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman dies"

    • பூங்கொடி (வயது 39) .இவர் தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து சென்றபோது, குறுக்கில் மாடு ஒன்று வந்ததால், தேவதாசன் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் .மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்த பூங்கொடி நிலை தடுமாறி கீழே விழுந்தார்,
    • தலையில் பலத்த காயமடைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே பலியானார்.,

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே சங்கிலிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார் மனைவி பூங்கொடி (வயது39) . நேற்று பிற்பகல் இவருடைய தம்பி தேவதாசன் (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்தவாறு எதப்பட்டு கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். செக்கடிக்குப்பம் அருகே சென்றபோது குறுக்கில் மாடு ஒன்று வந்துள்ளது. அப்போது தேவதாசன் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி பின்னால் உட்கார்ந்திருந்த பூங்கொடி கீழே விழுந்தார்.

    இதனால் தலையில் பலத்த காயமடைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.
    • பர்வதம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் துரைசாமி (67). இவரது மனைவி பர்வதம் (55).

    சம்பவத்தன்று இருவரும் மொபட்டில் தனது பேரன் நலனை ஈங்கூர் அருகே செயல்படும் தனியார் பள்ளியில் விடுவதற்காக சென்னிமலை-பெருந்துறை ரோட்டில் பாலப்பாளையம் பிரிவு அருகே செல்லும் போது ரோட்டினை கடப்பதற்காக மொபட்டை திருப்பி உள்ளார்.

    அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் மொபட் மீது மோதியது.

    இதில் துரைசாமி காயமடைந்தார். அவரது மனைவி பர்வதம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பேரன் நலன் காயமின்றி தப்பினார்.

    இது குறித்து சென்னிமலையினை சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமாரிடம் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்கராஜ் தனது மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • நெடுஞ்சாலை ரோட்டை கடந்த போது ஒரு கார் திடீரென இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பெருந்துறை:

    சென்னிமலையை அடு த்துள்ள எக்கட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 61).

    இவர் சம்பவத்தன்று தனது மனைவி தனலட்சுமியுடன் (வயது 55) பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் ரோடு சின்னாத்தாள் கோவிலில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் ரோடு நெடுஞ்சாலை ரோட்டை கடந்த போது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு கார் திடீரென இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த அடிபட்ட 2 பேரையும் அக்கம்பக்க த்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தனலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

    படுகாயம் அடைந்த தங்கராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தரமற்ற உணவால் உயிரிழந்தது தெரியவந்தால், உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை.
    • இறந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    கேரளா:

    நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பிரியாணி சாப்பிட்டவர் மரணம் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. மேலும் கெட்டுப்போன இறைச்சி விற்பனையும் நடைபெறுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவம் மறைவதற்குள் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

    ஆன்லைனில் குழிமந்தி என்ற பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட அஞ்சு ஸ்ரீபார்வதி(20) என்ற இளம்பெண் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

    பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தரமற்ற உணவால் உயிரிழந்தது தெரியவந்தால், உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    • சாலையின் குறுக்கே வந்த நாய் மீது பைக் மோதி விபத்து
    • கன்னியாகுமரியை சேர்ந்தவர்

    வந்தவாசி:

    கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டத்துக்குட்பட்ட கல்லக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை போவாஸ் . இவரது மனைவி அஜந்தா (வயது 48). இவர் வந்தவாசியில் உள்ள தனது மகள் கிரேஸ்லினை பார்க்க கன்னியாகுமரியில் இருந்து பஸ்சில் மேல்மருவத்தூருக்கு நேற்று முன்தினம் காலை வந்தார். அவரை அங்கிருந்து மருமகன் ரமேஷ் மோட்டார்சைக்கிளில் அழைத்துக் கொண்டு வந்தவாசிக்கு வந்து கொண்டிருந்தார்.

    வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில், சாலவேடு கிராமம் அருகே செல்லும்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் அஜந்தா நிலைத்தடு மாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து துரை போவாஸ் அளித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்த துணிகளை காய வைப்பதற்காக மெத்தைக்கு எடுத்து சென்றார்.
    • இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் புகார்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு ராஜேந்திரன் இவருடைய மனைவி சரோஜா (வயது 53). இவர் இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்த துணிகளை காய வைப்பதற்காக மெத்தைக்கு எடுத்து சென்றார். அப்பொழுது படிக்கட்டில் இருந்த மின்சார எர்த் ஒயர் மீது கால் பட்டு மின்சாரம் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தார் உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் புகார்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கல்யாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
    • காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், கூடலூா் பாடந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் கல்யாணி (56). இவா் புளியம்பாறை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சனிக்கிழமை காலை சென்றாா்.

    அப்போது அங்கு வந்த காட்டு யானை தாக்கியதில் கல்யாணி சம்பவ இடத்திலேயே பலியானாா். தகவலின்பேரில் புளியம்பாறை பகுதிக்கு விரைந்து வந்த வனத் துறையினா் கல்யாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    இதேபோல கூடலூா், தேவாலா வாளவயல் பகுதியில் கடந்த நவம்பா் 19 ஆம் தேதி காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து தேவாலா பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இதனைத் தொடா்ந்து அந்தப் பெண்ணை தாக்கிய பிஎம் 2 அரிசி ராஜா என்கிற காட்டு யானையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

    இந்நிலையில் கூடலூா் பாடந்துறை கிராமத்தில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கல்யாணியைத் தாக்கி கொன்றது ஏற்கெனவே தேடப்பட்டு வரும் பி.எம் 2 அரிசி ராஜா காட்டு யானையா அல்லது வேறு யானையா என்ற கோணத்தில் வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

    • சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி வெள்ளத்தாய்
    • தகவலறிந்த சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி இறந்து போன வெள்ளத்தாய் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி வெள்ளத்தாய் (வயது 45). இவர் ராயகிரி சாலையில் உள்ளார் தளவாய்புரத்திற்கு நடந்து செல்லும் போது வீராச்சாமி மடம் அருகே அடையாளம் தெரியாத அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி இறந்து போன வெள்ளத்தாய் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சிவகிரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் தங்கமாரி செல்வம். கூலித்தொழிலாளி.
    • இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலெட்சுமி இன்று காலை உயிரிழந்தார்

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் தங்கமாரி செல்வம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலெட்சுமி (வயது 42). தங்கமாரிசெல்வத்திற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளதாக தெரிகிறது.

    இதனால் அவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று தங்கமாரிசெல்வம் மதுகுடித்து விட்டு வந்துள்ளார்.

    இதனால் கணவன் - மனைவிக்கிடையே வாக்கு–வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கமாரிசெல்வம் மனைவியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதுதொடர்பான புகாரின்பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமாரி–செல்வத்தை கைது செய்தனர்.

    இந்நிலையில் மருத்துவ–மனையில் சிகிச்சை பெற்று வந்த தனலெட்சுமி இன்று காலை உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கொலை வழக்காக போலீசார் மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று செல்வி ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் புது காலனியை சேர்ந்தவர் துரைராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (47).

    சம்பவத்தன்று செல்வி ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த செல்வியை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
    • படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராஜபாளையம்,

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஜீவாநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காதர்ஒலி. இவரது மனைவி பஜ்ராள் பீவி (வயது 52). பஜ்ராள் பீவியின் தங்கை ரசீதா பீவி புளியங்குடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    உடல்நிலை பாதித்திருந்த அவரை பார்ப்பதற்காக தனது மகன் முகமது அப்சல்கானுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றார்.அவரை பார்த்துவிட்டு மாலையில் தங்களின் வீட்டுக்கு இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    தென்காசி-ராஜபாளை யம் தேசிய நெடுஞ்சாலையில் தேவிபட்டினம் விலக்கு அருகே வந்து கொண்டி ருந்தபோது தனக்கு தலை சுற்றுவதாக மகனிடம் பஜ்ராள் பீவி கூறியுள்ளார்.இதையடுத்து முகமது அப்சல்கான் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றுள்ளார்.

    ஆனால் அதற்குள் பஜ்ராள் பீவி ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகி றார்.

    • செல்வ நாயகம் நேற்று வீட்டின் முன்பு நின்று துணி களை துவைத்து கொண்டு இருந்தார்.
    • தாயார் தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கோவை,

    பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி செல்வநாயகம் (வயது 52).இவர்களது மகன் செந்தில்குமார் (32).செல்வ நாயகம் நேற்று வீட்டின் முன்பு நின்று துணி களை துவைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி அருகில் இருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.

    வீட்டிற்குள் இருந்த அவரது மகன் செந்தில்குமார் ஏதோ சத்தம் வருவதை கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது தாயார் தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் தண்ணீர் தொட்டியில் இருந்து செல்வ நாயகத்தை மீட்டார். பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்சில் வந்த டாக்டர் செல்வநாயகத்தை பரிசோதனை செய்து பார்த்தார். அவர் செல்வநாயகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வநாயகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×