மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி

தங்கராஜ் தனது மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.நெடுஞ்சாலை ரோட்டை கடந்த போது ஒரு கார் திடீரென இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி
Published on

பெருந்துறை:

சென்னிமலையை அடு த்துள்ள எக்கட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 61).

இவர் சம்பவத்தன்று தனது மனைவி தனலட்சுமியுடன் (வயது 55) பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் ரோடு சின்னாத்தாள் கோவிலில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் ரோடு நெடுஞ்சாலை ரோட்டை கடந்த போது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு கார் திடீரென இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த அடிபட்ட 2 பேரையும் அக்கம்பக்க த்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தனலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

படுகாயம் அடைந்த தங்கராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com