விபத்தில் பெண் சாவு

சம்பவத்தன்று செல்வி ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.
விபத்தில் பெண் சாவு
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் புது காலனியை சேர்ந்தவர் துரைராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (47).

சம்பவத்தன்று செல்வி ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த செல்வியை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com