மொபட் மீது கார் மோதி பெண் பலி

பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.பர்வதம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
மொபட் மீது கார் மோதி பெண் பலி
Published on

சென்னிமலை:

சென்னிமலை அடுத்துள்ள 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் துரைசாமி (67). இவரது மனைவி பர்வதம் (55).

சம்பவத்தன்று இருவரும் மொபட்டில் தனது பேரன் நலனை ஈங்கூர் அருகே செயல்படும் தனியார் பள்ளியில் விடுவதற்காக சென்னிமலை-பெருந்துறை ரோட்டில் பாலப்பாளையம் பிரிவு அருகே செல்லும் போது ரோட்டினை கடப்பதற்காக மொபட்டை திருப்பி உள்ளார்.

அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் மொபட் மீது மோதியது.

இதில் துரைசாமி காயமடைந்தார். அவரது மனைவி பர்வதம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பேரன் நலன் காயமின்றி தப்பினார்.

இது குறித்து சென்னிமலையினை சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமாரிடம் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com