என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மேல்மலையனூர் அருகே  மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து பெண் சாவு
    X

    மேல்மலையனூர் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து பெண் சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூங்கொடி (வயது 39) .இவர் தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து சென்றபோது, குறுக்கில் மாடு ஒன்று வந்ததால், தேவதாசன் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் .மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்த பூங்கொடி நிலை தடுமாறி கீழே விழுந்தார்,
    • தலையில் பலத்த காயமடைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே பலியானார்.,

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே சங்கிலிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார் மனைவி பூங்கொடி (வயது39) . நேற்று பிற்பகல் இவருடைய தம்பி தேவதாசன் (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்தவாறு எதப்பட்டு கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். செக்கடிக்குப்பம் அருகே சென்றபோது குறுக்கில் மாடு ஒன்று வந்துள்ளது. அப்போது தேவதாசன் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி பின்னால் உட்கார்ந்திருந்த பூங்கொடி கீழே விழுந்தார்.

    இதனால் தலையில் பலத்த காயமடைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×