search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் மீது"

    • வேன் ஒன்று ராமசாமி ஓட்டி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
    • அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறச்சலூர்:

    அறச்சலூர் அருகே உள்ள பச்சாகுட்டையை சேர்ந்தவர் ராமசாமி (55). விவசாயி.

    இவர் தனது ஊரான பச்சாக்குட்டையில் இருந்து பள்ளியூத்து செல்லும் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு மண்கரட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று ராமசாமி ஓட்டி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.

    இந்த சம்பவத்தில் ராமசாமிக்கு பலத்த அடிபட்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி இறந்தார். இச்சம்பவம் குறித்து அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.
    • பூங்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    டி.என்.பாளையம்:

    கோபி அருகே உள்ள கூகலூர் கிரீன் நகரை சேர்ந்தவர் மணி (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (50).

    இன்று காலை மணி தனது மனைவியுடன் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூருக்கு வேலைக்காக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். பூங்கொடி இரு சக்கர வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து வந்தார்.

    இதை தொடர்ந்து அவர்கள் டி.என்.பாளையம் கொன்னகொடிக்கால் என்ற பகுதியில் சென்றனர். அப்போது அங்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் பின்னால் சென்றது.

    அந்த வேனை கூகலூர் அருகே உள்ள தாழைக்கொம்புதூர் கொன்னமடையை சேர்ந்த இளையகுமார் (30) ஓட்டினார். திடீரென மணி மற்றும் அவரது மனைவி பூங்கொடி சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மணியின் மனைவி பூங்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் தூக்கி வீசப்பட்ட மணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயம் அடைந்த மணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    டி.என்.பாளையம் அருகே இன்று காலை கணவர் கண் முன்னே மனைவி விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விஜயகுமார் பஸ் சக்கரத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை கேட், விநாயகா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விஜயகுமார் (29) பி.எஸ்சி. அக்ரி படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது வெல்டிங் பட்டறை வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை 7.45 மணியளவில் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மொண்டிபாளையம்-சிங்கம்பேட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    மேட்டூர் மெயின் ரோட்டில் இணைய முயன்ற போது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விஜயகுமார் பஸ் சக்கரத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விஜயகுமார் உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • தங்கராஜ் தனது மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • நெடுஞ்சாலை ரோட்டை கடந்த போது ஒரு கார் திடீரென இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பெருந்துறை:

    சென்னிமலையை அடு த்துள்ள எக்கட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 61).

    இவர் சம்பவத்தன்று தனது மனைவி தனலட்சுமியுடன் (வயது 55) பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் ரோடு சின்னாத்தாள் கோவிலில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் ரோடு நெடுஞ்சாலை ரோட்டை கடந்த போது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு கார் திடீரென இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த அடிபட்ட 2 பேரையும் அக்கம்பக்க த்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தனலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

    படுகாயம் அடைந்த தங்கராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம்- கோவை பைபாஸ் ரோடு வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
    • இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இட த்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள நசியனூர் கவுண்டன்பாளை யம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்து என்கிற பூரணசாமி (58). இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், மேனகா, சுதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    சமையல் வேலை செய்து வரும் முத்து நசியனூர் மாரியம்மன், மதுர காளியம்மன், கருப்பராயன், கன்னிமார் கோவிலில் பூஜை செய்து வந்தார்.

    இவரது தங்கை புஷ்பா (49). இந்த நிலையில் முத்து மற்றும் அவரது தங்கை புஷ்பாவும் மோட்டார் சைக்கிளில் நசியனூர் மேற்கு புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிளில் சேலம்- கோவை பைபாஸ் ரோடு நசியனூர் சாமி கவுண்டன் பாளையம் பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இட த்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ஆத்தூரை சேர்ந்த சற்குணம் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சதீஸ் நிலை தடுமாறி சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக விழுந்தார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அய்யன் சாலை பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (வயது 38). இவர் அருகே உள்ள தட்டப்பள்ளி க்கு உணவு வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த வழியாக பவானிசாகர் பகுதியை சேர்ந்த சரவணன் (32) என்பவர் அன்னூரில் இருந்து மோட்டார் சைக்கி ளில் வந்து கொண்டு இரு ந்தார். சரவணன் தட்ட ப்பள்ளி அருகே வந்தார். அப்போது சதீஸ் நிலை தடுமாறி சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக விழுந்தார். இதில் அவர்கள் இருவரும் கீேழ விழுந்தனர்.

    இதில் சதீசுக்கு கால் உள் பட பல்வேறு இடங்களில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சு மூலம் சதீசை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சதீசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு காலில் பலத்த அடிப்பட்ட தால் ஸ்கேன் எடுப்பதற்காக அவரை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு செல்லுமாறு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் அங்கு செல்லாமல் சத்திய மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சென்றார்.

    இதையடுத்து அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை காலை வருமாறு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இதை க்யடுத்து அவர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் சதீஸ் வீட்டில் திடீரென இறந்து விட்டார். இது குறித்து போலீசாருக்கு அவரது உறவினர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ் பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சரவணக்குமார் நாயக்கன் காடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் அவர் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.
    • இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி செட்டிபாைளயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனி வாசன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 27).

    இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். சரவணக்குமார் சத்தியமங்கலம் ஈரோடு ரோடு நாயக்கன் காடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் அவர் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி செட்டிபாைளயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெரியசாமி, கண்ணம்மாள் இருவரும் மொபட்டில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே கண்ணம்மாள் துடிதுடித்து இறந்தார். கணவர் பெரியசாமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள வெள்ளோட்டம் பரப்பு பகுதியை சேர்ந்த பெரியசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 55). இருவரும் விவசாயம் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மாலை பெரியசாமி, கண்ணம்மாள் இருவரும் மொபட்டில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கண்ணம்மாளின் தலையில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கண்ணம்மாள் துடிதுடித்து இறந்தார். கணவர் பெரியசாமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணம்மாவின் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெரியசாமியை சிகிச்சை க்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் கண் முன்னால் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் சோளக் காளிபாளையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள பெரிய வட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (52). இவரது மனைவி லட்சுமி (47). கணவன்-மனைவி இருவரும் கொடுமுடி கடை வீதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் சோளக் காளிபாளையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பழனிசாமி, லட்சுமி நிலை தடுமாறி கிழே விழுந்தனர். இதில் லட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாகமாக இறந்தார்.

    இதில் பழனிசாமி படு காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் பழனிசாமியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரி விக்க ப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் லட்சுமி உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டது.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×