என் மலர்
நீங்கள் தேடியது "farmer dies"
- உடல்நலக் குறைவால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அருகே உள்ள இளங்காடு கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50) விவசாயி.
இவர் 2 ஆண்டுகளாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் நெல் பயிருக்கு வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சி கிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- திருமணமான ஒரு ஆண்டில் பரிதாபம்
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்க ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் தசரதன் (வயது 35). விவசாயியான இவர் பொக்லைன் எந்திரமும் வைத்துள்ளார்.
அதில் பாலாஜி என்பவரை டிரைவராக பணியமர்த்தி உள்ளார். இவருக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் டிரைவர் பாலாஜி வந்தவாசிக்கு மோட்டார்சைக்கிளில் தசரதனை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.
முதலூர் கிராமம் அருகில் வந்தபோது நான் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டேன். பிழைக்க மாட்டேன் இப்படியே என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று வீடு என்று கூறியுள்ளார்.
தசரதன் உடல்நிலை மோசமானதால் அவரை வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் முதலுதவி செய்து தீவிர சிகிச்சை அளித்தனர் சிகிச்சைபலனின்றி தசரதன் இறந்தார்.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய தம்பி அமலேஷ் கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த வேடல் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 39), விவசாயி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 31-ந்தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் சிவலிங்கம் விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- பேத்திக்கு நீச்சல் கற்றுகொடுத்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 60). விவசாயி.
இவர் வழக்கம் போல் தனது மாடுகளை விவசாய நிலம் அருகில் மேய்ப்பது வழக்கம்.
இந்நிலையில் நீச்சல் கற்று கொடுக்க அருகே உள்ள கிணற்றுக்கு பூங்காவனம் பேத்தியுடன் சென்றார். தாத்தாவும் , பேத்தியும் கிணற்றின் படிக்கட்டு வழியாக இறங்கி கொண்டு இருந்தனர். அப்போது நிலை தடுமாறி பூங்காவனத்தின் பேத்தி விழுந்தார். பேத்தியை காப்பாற்றுவதற்காக பூங்காவனம் கிணற்றில் குதித்தார்.
உடனே அருகில் இருந்த உறவினர் ஒருவர் பூங்காவனத்தின் பேத்தியை கிணற்றில் இருந்து காப்பாற்றினார்.
நீண்ட நேரம் ஆகியும் பூங்காவனம் கிணற்றில் இருந்து வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர் கூச்சலிட்டு அக்கம் பக்கம் உள்ள கிராம மக்களை வர வழைத்தார். அவர்கள் கிணற்றில் விதித்து பூங்காவனத்தை தேடினர். பூங்காவனம் கிடைக்காததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி வெகு நேரம் தேடியும் பூங்காவனம் கிடைக்கவில்லை.
பின்னர் ராட்சத மோட்டார் பம்ப் மூலமாக கிணற்று நீரை இறைத்து 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பூங்காவனத்தின் உடலை மீட்டனர்.
இறந்து போன பூங்காவனத்திற்கு தனக்கோட்டி என்ற மனைவியும் ஜெயபால் என்ற மகனும் மகேஸ்வரி தேவி என்ற 2 மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ் கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேத்திக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்று கிணற்றில் குதித்து பூங்காவனம் உயிரிழந்த சம்பவம் கீழ் வில்லிவலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- விபத்தில் விவசாயி பலியானார்
- வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அருகே உள்ள முதுகுளம் பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் (வயது 52), விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை கந்தர்வகோட்டையில் வாங்கி கொண்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நமச்சிவாயம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மேமாளூர் கிராமத்தை சேர்ந்தவர் சி உத்திரியநாதன்(வயது40). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லவாடி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே செங்கணாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த ஆதிசங்கர்(34) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உத்திரியநாதனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சை க்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
படு காயம் அடைந்த ஆதிசங்கர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.
- இவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்தார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே மண்டக மேடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் விவசாயி. இவர் கடந்த 23-ந் தேதி கடலூர், சித்தூர் சாலையில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரை மீட்டு முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் இன்று காலை இறந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
- போலீசார் விசாரணை
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. மகன் முனுசாமி (வயது 45). விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த சில வருடங்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையையும் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நோயின் தீவிர தாக்கத்தால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம் பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சமுதாயம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (48) விவசாயி.
இவர் சூளமேனி அருகே செங்கரையில் உள்ள காட்டு செல்லி அம்மன் கோவிலுக்கு செல்ல ஊத்துக்கோட்டை வந்தார். இங்கிருந்து புறப்பட்ட ஆட்டோவில் ஏறினார்.
சூளமேனி கிராம எல்லையில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவிலிருந்து தவறி கீழே விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்து விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து ஆந்திராவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (69). கூலி தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் கூலி வேலை செய்வதற்காக சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் மோதியது.
இதில் படுகாயம்அடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் அனுமந்து விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள செங்காத்தாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவர்தனன் (வயது 40) விவசாயி .
இவர் தனது நிலத்தில் போர் போடுவதற்காக கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆறாவதுமையில் என்ற இடத்தில் உள்ள மேஸ்திரியிடம் பணம் கொடுத்துவிட்டு நேற்று காலை ஆரணி வழியாக பெரியபாளையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
ஆரணியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். கோவர்தனன் அப்பெண் மீது மோட்டார் சைக்கிளை மோதி விட்டு நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கோவர்தனன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவர்தனன் பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த பெண் ஆரணி இருளர் காலனியை சேர்ந்த ரமிஜா (வயது 40) என்று தெரியவந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது அலி மற்றும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் அருகே விளமல் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் செல்வராஜன் (வயது 65). விவசாயி.
இவர் நேற்று திருவாரூர் பஸ் நிலையம் கடைவீதிக்கு சென்று விட்டு பழைய தஞ்சை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வராஜன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றி திருவாரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக அலிவலம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கருணாகரனை போலீசார் கைது செய்தனர்.