கெடிலம் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி நடந்து சென்ற விவசாயி சாவு

அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணவன், மனைவி மீது மோதியது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெடிலம் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி நடந்து சென்ற விவசாயி சாவு
Published on

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநாவலூர் செஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 41). விவசாயி. நேற்று இரவு மழை பெய்த போது இவரும், இவரது மனைவி ஜெயாவும் குடை பிடித்தவாறு நடந்து சென்றனர். அப்போது கெடிலம் கூட்ரோடு அருகே சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணவன், மனைவி மீது மோதியது. இதில் வேலாயுதம் பலத்த காயங்களுடன் கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த அவர் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com