பவானிசாகர் அருகே விவசாயி சாவு

மது அருந்திய கோதண்ட மூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானிசாகர் அருகே விவசாயி சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முடுக்கன் துறை சந்தை பகுதியில் சேர்ந்தவர் கோதண்ட மூர்த்தி (வயது 48). இவரது மனைவி வனிதா (40). இவ ர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வருகின்றனர்.

இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ள னர். கோதண்ட மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சம்பவ த்தன்று மது அருந்திய கோதண்ட மூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை சக்தியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்திய அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோத ண்டமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

பின்னர் இது குறித்து அவரது மனைவி வனிதா பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com