கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது.சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி அருகே  மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே உள்ள வானவரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பார்த்திபன் (வயது 28) விவசாயி, சம்பவத்தன்று இவரது மின் மோட்டாருக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் அதே கிராமத்தில் நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது மின் கம்பியில் தவறுதலாக கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கி பார்த்திபன் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தீபன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com