search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராய வழக்கு"

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
    • அ.தி.மு.க. ஆட்சி தான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.

    மதுரை:

    முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், அமைப்புகளும் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது பெருமையாக உள்ளது., பெருந்தலைவர் காமராஜர் சிலையை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மாவட்ட செயலாளர் என்ற முறையில் எனது தலைமையில் ரூ.5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது.

    தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் மரணம், கொலை, கொள்ளை என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதில் எப்படி தி.மு.க.வினர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியும்.?

    சட்ட ஒழுங்கு இவ்வளவு சீர்கேட்டு இருக்கும்போது சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்து கொண்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.வை தவிர வேறு யாராலும் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியாது என கூறுகிறார். இது எந்த விதத்தில் நியாயம்.?

    பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொண்டு வந்தது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவர்களின் இரு பெரும் ஆட்சியை நிலைநாட்டியது ஜெயலலிதா தான். அ.தி.மு.க. ஆட்சி தான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வேகாத வெயிலில் ஓட்டு கேட்டோம்.! ஓட்டு கேட்டதில் ஏதேனும் குறை இருந்ததா.? குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர்.

    சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர் இதில் அ.தி.மு.க.வினர் நாங்கள் அடிபட்டு விட்டோம். பல இடங்களில் நாங்கள் தோல்வியை தழுவினோம், பல இடங்களில் 2-வது இடம் பெற்றோம். இது தொடர்பாக சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொது செயலாளர் ஆலோசனை தான் வழங்கினாரே தவிர வேறு ஒன்றும் இல்லை.

    மதுரை அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது என்பது எங்களுக்கு தெரியும், இப்போது தோல்வியை தழுவியது எங்களுக்கு மன உளைச்சல் தான்.! மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மதுரையில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மோடிக்கு வாக்களித்தனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு ரூ.. 8000 கோடிக்கு மேல் நிதியை வழங்கினோம். ஆனால் மதுரை மக்கள் ஏன் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடவில்லை என தான் எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் கேட்டார்.

    நாங்க என்ன காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவா? நாங்களும் கூவி கூவித்தான் ஓட்டுக் கேட்டோம். வேகாத வெயிலில் சரவணனுக்காக ஓட்டு கேட்டோம், கழகத்தினர் பம்பரமாக வேலை பார்த்தார்கள். இதற்கு மேல் எப்படி வேலை பார்க்க முடியும்?

    குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்தியாவை யார் ஆள வேண்டும் என்ற அடிப்படையில் மோடிக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். சிறுபான்மையினர் ராகுலை விரும்பினார்கள். இதற்கு இடையில் நாங்கள் அடிபட்டுவிட்டோம்.

    மதுரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தான் வாக்கு குறைந்துள்ளது. சிறுபான்மை மக்கள் இன்னும் எங்களை நம்பவில்லை"

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு சென்ற திருவேங்கடத்திற்கு கை விலங்கு போடவில்லை. தப்பி ஓடினார் என்பதற்காக என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார் என காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள். இது போன்ற களங்கம் ஸ்டாலின் ஆட்சியில் தான் ஏற்படும்., கள்ளச்சாராயம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 79 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர், கடந்த 18, 19-ந் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவம னையில், 229 பேர் சேர்க்கப்பட்டனர்.

    கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால், நேற்று இரவு வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி மருத்துவமணையில் 40 பேர், சேலம் 11 பேர், விழுப்புரத்தில் 2 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். தற்போது கள்ளக்குறிச்சியில் 48 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 9 போர், விழுப்புரத்தில் 2 பேர், சேலத்தில் 19 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 79 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் இருந்த, 77 பேரை அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    • தகவல் அறிந்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்சென்ட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
    • அங்கிருந்த பாலுவின் உறவினர்கள், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து அவர் இறந்துவிட்டார் என்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்தவர் பாலு (வயது 52). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று மாலை மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பக்கத்து நிலத்துக்காரர் பாலுவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். பாலுவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாலு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இத்தகவல் அறிந்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்செ ன்ட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த பாலுவின் உறவினர்கள், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து அவர் இறந்துவிட்டார். எனவே, அது தொடர்பான வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினர்.

    இதையடுத்து போலீசார், வருவாயத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வருவாய்த் துறையினர் முன்னிலையில் பாலுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் எவ்வாறு இறந்தார் என்று தெரிய வரும் என்பதால், சந்தேக மரண வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×