விஷம் குடித்து விவசாயி சாவு

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
விஷம் குடித்து விவசாயி சாவு
Published on

செய்யாறு:

செய்யாறு அடுத்த பண்ணையெச்சூர் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

பிரகாஷிற்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கடந்த 17-ந் தேதி பிரகாசுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விவசாயத்திற்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பிரகாஷ் இறந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com