மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி

சரவணக்குமார் நாயக்கன் காடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் அவர் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி செட்டிபாைளயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அடுத்த வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனி வாசன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 27).

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். சரவணக்குமார் சத்தியமங்கலம் ஈரோடு ரோடு நாயக்கன் காடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் அவர் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி செட்டிபாைளயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாமாக இறந்தார்.

இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com