மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.விஜயகுமார் பஸ் சக்கரத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி
Published on

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை கேட், விநாயகா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விஜயகுமார் (29) பி.எஸ்சி. அக்ரி படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது வெல்டிங் பட்டறை வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 7.45 மணியளவில் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மொண்டிபாளையம்-சிங்கம்பேட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

மேட்டூர் மெயின் ரோட்டில் இணைய முயன்ற போது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விஜயகுமார் பஸ் சக்கரத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விஜயகுமார் உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com