search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valliyoor"

    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மற்றும் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.
    • முகாமை கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மற்றும் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகாமை கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அணி மற்றும் ஐ.கி.யூ.ஏ.சி. இணைந்து செய்து இருந்தது.

    • பணியாளர்கள் அனைவரும் இரவு பணிகள் முடிந்து ஆஸ்பத்திரியை பூட்டிவிட்டு சென்றனர்.
    • அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போயிருந்தது

    நெல்லை:

    வள்ளியூர் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் பல் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு பணிகள் முடிந்து பணியாளர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியை பூட்டிவிட்டு சென்றனர்.

    அதனைத்தொடர்ந்து மறுநாள் காலை வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்தபோது அங்கு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக ஆஸ்பத்திரியின் டாக்டரான குமரி மாவட்டம் ஆலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த முகமது ஹாசன்(வயது 52) வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதிய பஸ் நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், அங்கு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • கடைகளின் முன்பகுதியில் அதிக திறன் கொண்ட கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் சுற்று வட்டாரத்தில் தொடர்ச்சி யாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வள்ளியூர் பகுதி வியாபாரிகள் தங்களது கடைகளின் முன்பகுதிகளிலும் கடையின் உள்பகுதிகளிலும் உயர் திறன் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    வள்ளியூர் பேரூராட்சியில் உள்ள ராஜரத்தினம் நகர், இ.பி.காலணி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தவிர பகல் நேரத்தில் இருசக்கரவாகன திருட்டுகள் அதிகரித்து வருகிறது. எனவே வியாபாரிகள் தங்களது கடைகளின் முன்பகுதியில் அதிக திறன் கொண்ட கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும்.

    கண்காணிப்பு காமிரா பதிவுகளை சேமித்து வைக்கும் கருவிகளில் சேமிக்கவும் அதனை உறுதி படுத்திக் கொள்ளவும் செய்ய வேண்டும். கண்காணிப்பு காமிராவின் செயல்பாடுகளை தங்களது அலைபேசியில் கண் காணித்துக் கொள்ளுங்கள்.

    மேலும் வள்ளியூர் பேரூராட்சி தற்போது தொழில்நிறுவனங்களாலும், ஜனநெருக்கடியிலும் அதிகரித்து வந்துள்ளது.

    வெளியூர்களில் இருந்து அதிக மக்கள் வள்ளியூரில் குடியேறியுள்ளனர்.

    குறிப்பாக வடமாநி லங்களைச் சேர்ந்த ஆயிரத்தி ற்கும் அதிகமானோர் புதிதாக குடியேறியுள்ளனர். இப்படி வளர்ச்சியடைந்துள்ள வள்ளியூர் காவல்நிலை யத்தில் காவலர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

    குறைவான காவலர்க ளால் வளர்ச்சியடைந்து வரும் வள்ளியூர் பகுதியை கண்காணிக்க சிரமமாக உள்ளது. எனவே வள்ளியூர் காவல்நிலையத்தில் கூடுதலாக காவலர்களை நியமிக்கவேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நெல்லை மாவட்டம வள்ளியூருக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் வந்தது. அதில் பெரிய பார்சல் ஒன்று வந்தது. பார்சலில் முகவரி எழுதப்படாமல் செல்போன் எண்கள் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.
    • போலீசார் அந்த பார்சலை உடைத்து பார்த்த போது அதில் 82 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.

    நெல்லை:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நெல்லை மாவட்டம வள்ளியூருக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் வந்தது.

    அதில் பெரிய பார்சல் ஒன்று வந்தது. பார்சலில் முகவரி எழுதப்படாமல் செல்போன் எண்கள் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால் சந்தேகம் பஸ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர்.

    போலீசார் அந்த பார்சலை உடைத்து பார்த்த போது அதில் 82 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், தனியார் பார்சல் சர்வீஸ் மூலமாக வெளியூரில் இருந்து குட்கா கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கொண்டு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நிகழ்வாக மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
    • வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    வள்ளியூர்:

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நிகழ்வாக மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

    வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி மாணவர்களுக்கு ஓணம் பண்டிகையின் பாரம்பரிய சிறப்பு, கொடுத்தல், பரிமாறுதல், அன்பு செலுத்துதல் ஆகியவற்றை பள்ளியின் முதல்வர் எடுத்து கூறினார். பள்ளி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய உடையணிந்து திருவாதிரை நடனமாடி பள்ளி மாணவர்கள் மகிழ்ந்தனர்.

    • பள்ளியில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடல் எடை, உயரம், கண் பரிசோதனை, பல் பரிசோதனை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
    • அதன்பின் மாணவர்களுக்குஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மற்றும் பழங்கள், காய்கறிகள் உண்பதன் பயன்கள் ஆகியவற்றையும் பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    வள்ளியூர்:

    தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு நேரு நர்ஸ்சிங் கல்லூரியின் சார்பாக கோட்டையடி கிராமம் அருள்யா நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நேரு நர்சிங் கல்லூரியின் முதுகலை மற்றும் இளங்கலை மாணவிகள் பங்கு கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடல் எடை, உயரம், கண் பரிசோதனை, பல் பரிசோதனை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

    அதன்பின் மாணவர்களுக்குஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மற்றும் பழங்கள், காய்கறிகள் உண்பதன் பயன்கள் ஆகியவற்றையும் பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    மேலும், இந்நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்த கல்லூரி முதுகலை பேராசிரியை சுபி ஊக்கமளித்தார்.

    • மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சென்றுவிட்டார்.
    • இரவில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்படுவது போன்ற சத்தம் கேட்டு மாடியில் குடியிருந்தவர் வெளியே வந்து பார்த்துள்ளார்.

    நெல்லை:

    வள்ளியூர் குட் சாமரிட்டன் நகரை சேர்ந்தவர் மணி கண்டன்(வயது 62). இவர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கொள்ளை முயற்சி

    இவரது வீட்டின் மாடியில் அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் வாடகைக்கு குடியிருந்து வருகிறது. மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் அவரது வீட்டில் யாரும் இல்லை. நேற்று முன்தினம் இரவில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்படுவது போன்ற சத்தம் கேட்டு மாடியில் குடியிருந்தவர் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதை பார்த்து அவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

    உடனே மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வள்ளியூர் டி.ஜே.ஆர். நிறுவனத்தின் 10-ம் ஆண்டு விழா வள்ளியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • வாடிக்கையாளர்கள் வரவழைக்கப்பட்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவப்படுத்தப்பட்டனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் டி.ஜே.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் 10-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. வள்ளியூர், நெல்லை மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் கட்டுமான துறையில் உள்ள வள்ளியூர் டி.ஜே.ஆர். நிறுவனத்தின் 10-ம் ஆண்டு விழா வள்ளியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    நிறுவனத்தின் தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கி வரவேற்றார். நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வரவழைக்கப்பட்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவப்படுத்தப்பட்டனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக டி.வி. நடிகை அன்னபாரதி, பின்னணி பாடகி அலைனா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை டி.ஜே.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிறுவன தலைவர் தேவேந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றார்கள்.

    வள்ளியூர்:

    சமூகரெங்கபுரத்தில் இயங்கிவரும் டி.டி.என் கல்வி குழுமத்தின்ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடக்கவிழா நடை பெற்றது.

    இதில் முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வள்ளியூர் பங்குதந்தை ஜான்சன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் கல்லூரியின் சேர்மன் லாரன்ஸ், கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றார்கள்.

    நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய கல்லூரி முதல்வர் டாக்டர்.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    2021-22-ம் கல்வி ஆண்டில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுகளையும் மாணவர்களின் சாதனைகளையும் மெக் கானிக்கல் துறைத்தலைவர் ராம்கி எடுத்துரைத்தார்.

    முதலாம் ஆண்டு துறைத் தலைவர் ஜான் ஜெபஸ் வரவேற்று பேசினார். கல்லூரியின் துணை முதல்வர் விமலா நன்றி தெரிவித்தார்கள்.

    விழாவிற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தற்கொலை செய்த வாலிபர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
    • தற்கொலை தொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள வடக்கு கார் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் முகேஷ்ராஜ்(வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகேஷ்ராஜிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் பெண் தேடி வந்துள்ளனர்.

    சமீபத்தில் அவருக்கு பார்த்த பெண், முகேஷ் ராஜை பிடிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வள்ளியூர் லுத்ரன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பாக்கியம். வள்ளியூர் பேரூராட்சி 3 -வது வார்டு தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார்.
    • காயம் அடைந்த சுரேஷ் பாக்கியம் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் லுத்ரன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பாக்கியம் (வயது40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் வள்ளியூர் பேரூராட்சி 3 -வது வார்டு தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சுதா அதே வார்டில் கவுன்சிலராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் பேரூராட்சியில் பணம் வாங்கிக் கொண்டு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து வார்டு உறுப்பினர்களுடன் சேர்ந்து சுரேஷ் பாக்கியம் மனு கொடுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிலர் நேற்று சுரேஷ் பாக்கியத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றவே அவர்கள் சரமாரியாக சுரேஷ் பாக்கியத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இதில் காயம் அடைந்த சுரேஷ் பாக்கியம் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சகோதரர்களுக்கு இடையே சொத்து தகராறில் கொலை
    • நம்பிராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை

    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள வடக்கு ஆச்சியூரை சேர்ந்தவர் நம்பிராஜன். இவருக்கும், அவரது சகோதரருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 3-ந் தேதி வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது நம்பிராஜனுக்கும் அவரது தம்பி ஆறுமுகவேலுக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகவேல் நம்பிராஜனை கொலை செய்தார். தகராறில் காயம் அடைந்த ஆறுமுகவேலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சூழ்நிலையில் நம்பிராஜனின் கொலையில் அவரது சகோதரர்கள் உள்பட 6 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், நம்பிராஜன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

    என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பிராஜனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து போலீசாரும், அதிகாரிகளும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    ×