என் மலர்
உள்ளூர் செய்திகள்

வள்ளியூரில் தி.மு.க. வார்டு செயலாளருக்கு சரமாரி அடி-உதை
- வள்ளியூர் லுத்ரன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பாக்கியம். வள்ளியூர் பேரூராட்சி 3 -வது வார்டு தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார்.
- காயம் அடைந்த சுரேஷ் பாக்கியம் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வள்ளியூர்:
வள்ளியூர் லுத்ரன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பாக்கியம் (வயது40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் வள்ளியூர் பேரூராட்சி 3 -வது வார்டு தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சுதா அதே வார்டில் கவுன்சிலராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பேரூராட்சியில் பணம் வாங்கிக் கொண்டு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து வார்டு உறுப்பினர்களுடன் சேர்ந்து சுரேஷ் பாக்கியம் மனு கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிலர் நேற்று சுரேஷ் பாக்கியத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றவே அவர்கள் சரமாரியாக சுரேஷ் பாக்கியத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் காயம் அடைந்த சுரேஷ் பாக்கியம் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






