search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaiko"

    • தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் வெற்றிகரமாக நடைபெறுகிறது.
    • இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய இடத்தில் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது.

    சென்னை:

    சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சுதந்திர இந்தியாவில் நெருக்கடி நிலையைவிட மோசமான சட்டங்களை பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கிறது.

    * எதிர்க்கட்சிகள் உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணி, மக்கள் சக்தியைத் திரட்டி மோடி அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றும்.

    * தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் வெற்றிகரமாக நடைபெறுகிறது.

    * இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய இடத்தில் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது.

    * கோவிலையும் இந்து மதத்தையும் காட்டி தமிழ்நாட்டில் பாஜகவால் ஓட்டு வாங்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.
    • தமிழக தென்மாவட்டங்களில் மத்திய நிதியமைச்சர் ஆய்வு செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மதுரை:

    பெரியாரின் 50-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரை சின்ன சொக்கிக்குளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூகநீதியின் வடிவமாக தந்தை பெரியார் திகழ்கிறார். தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். சமீப காலமாக தந்தை பெரியார் சிலை அவமதிப்பு அதிகளவில் நடைபெறுவது வேதனைக்குரியது.

    தந்தை பெரியார் சிலையை திட்டமிட்டு ஒரு கூட்டம் அவமதிப்பு செய்கிறது. அதற்கு தகுந்த பதிலடியை நாங்கள் கொடுத்துள்ளோம். வெளிப்படையாக பெரியார் சிலையை அவமதிப்பு செய்வோம் என கூறி விட்டு யாராவது ஒருவர் அவமதிப்பு செய்தால் அவர்கள் கை இருக்காது.

    தமிழக தென்மாவட்டங்களில் மத்திய நிதியமைச்சர் ஆய்வு செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அமைச்சர்கள் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால், நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது.
    • தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்தில் பொருளாதார நிலைகுறித்த விவாதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

    2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிச்சாங் புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பேரழிவை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களின் படகுகளும் வலைகளும் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ளநீர் விளை நிலங்களில் தேங்கியுள்ளதால், விவசாயிகள் பயிர்களை இழந்துள்ளனர்.

    கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால், நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கி தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது. இருந்தாலும், மீட்புப் பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.

    எனவே, மத்திய அரசு நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை தமிழக அரசிற்கு வழங்கி, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உதவி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமலாக்கத்துறை குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிய வேண்டும்.
    • பா.ஜனதா அரசு நடத்தி வரும் மிரட்டல் அரசியல் கடும் கண்டனத்துக்குரியது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மிகத் திறமையாகச் செயல்பட்டு, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை பிடித்தது பாராட்டுக்குரியதாகும்.

    பா.ஜனதா அரசு, தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத் துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரியின் கைது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    மாநில அரசின் அனுமதி இன்றி இந்த அமலாக்க துறையை தலைமை செயலகத்துக்குள் ஏவி விட்டு தி.மு.க. அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்த பா.ஜனதா அரசு முனைந்தது.

    தற்போது மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு உள்ளே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை நுழைந்து சோதனை நடத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

    மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலங்களிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.


    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 30-ந் தேதி, 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.

    அப்போது ஏலச்சீட்டு மோசடி விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யாமல் இருக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் ரூ. 15 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று குற்றவாளி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் பணத்தை வாங்கிய போது அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேரையும் கையும் களவுமாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் கைது செய்த நிகழ்வு நடைபெற்றிருந்தது.

    தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டதன் மூலம் ஒன்றிய பா.ஜனதா அரசின் அரசியல் கருவியான அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டது.

    அமலாக்கத்துறை குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிய வேண்டும்.

    அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜனதா அரசு நடத்தி வரும் மிரட்டல் அரசியல் கடும் கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முழு நேர களப் பணியாளராக உஞ்சை அரசன் தொண்டாற்றினார்.
    • உஞ்சை அரசனின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் அனைவருக்கும் பேரிழப்பாகும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் கவிஞர் உஞ்சை அரசன் திடீர் மறைவு செய்தி கேட்டு, ஆறா துயர் அடைந்தேன்.

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள உஞ்சைவிடுதி எனும் சிற்றூரில் ஆசிரியராக அரசுப் பணியில் ஈடுபட்டு, பணி நிறைவுக்கு முன்பாகவே விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முழு நேர களப் பணியாளராக உஞ்சை அரசன் தொண்டாற்றினார்.

    உஞ்சை அரசனின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் அனைவருக்கும் பேரிழப்பாகும். இவரது பிரிவால் துயரத்தில் இருக்கும் இவரின் வாழ்க்கைத் துணைவியார் மற்றும் குடும்பத்தினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன், அந்தக் கட்சியின் தோழர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உண்மையிலேயே பிரிந்துவிட்டார்களா? அல்லது நாடகமா? என்பது காலப்போக்கில் தான் தெரியும்.
    • சுப்ரீம் கோர்ட்டும் தண்ணீர் கொடுக்க தீர்ப்பு சொல்லிவிட்டது. ஒழுங்காற்று குழுவும் சொல்லி விட்டது. அவங்களுக்கு வேறு வழியில்லை.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

    சுமார் 20 நிமிட நேர சந்திப்புக்கு பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கே: தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொடருகிறதா?

    ப: தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறேன்.

    கே: அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியில் சிறு சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறதே?

    ப: இங்கு எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. அமைதியாக எந்த சலசலப்பும் இல்லாமல், நீரோடை போகிற மாதிரி செல்கிறது.

    கே: அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ப: அவர்கள் உண்மையிலேயே பிரிந்துவிட்டார்களா? அல்லது நாடகமா? என்பது காலப்போக்கில் தான் தெரியும்.

    கே: வர இருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் துரை வைகோ போட்டியிட வாய்ப்புள்ளதா?

    ப: அதுபற்றி நாங்கள் இன்னும் பேசவே இல்லை.

    கே: தொகுதி மறுவரையறை செய்யும்போது தமிழ் நாட்டின் எம்.பி. தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதா?

    ப: மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் நமக்கு 8 எம்.பி. குறையலாம். ம.பி., உ.பி. மாநிலங்களில் அதிகமாகக் கூடும்.

    அப்படி வரும்போது, இந்தியாவின் மொத்த வரைபடத்தில் நம்முடைய எண்ணிக்கை குறையும்போது, அதனுடைய விளைவுகள் இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் விரோதமாக இருக்கும்.

    இந்தியா என்கிற ஒரு அமைப்பு ஒரு நாடு இன்றைக்கு இருக்கக்கூடிய நினைப்பு போய்விடும். அதனுடைய விளைவுகள் எல்லா மாநிலங்களிலும் எதிர்விளைவுகள் ஏற்படும். மிகப்பெரிய சோதனையில் போய் முடியும்.

    கே: காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் உள்பட எல்லாருமே ஒன்று சேர்ந்து தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களே?

    ப: சுப்ரீம் கோர்ட்டும் தண்ணீர் கொடுக்க தீர்ப்பு சொல்லிவிட்டது. ஒழுங்காற்று குழுவும் சொல்லி விட்டது. அவங்களுக்கு வேறு வழியில்லை. அதனால் ரோட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    கே: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை அங்கு அவமரியாதை செய்கிறார்களே?

    ப: நாம் அமைதியாக இருக்கிறோம். நம் பக்கம் நியாயம் இருக்கிறது. நம் பக்கம் சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. அதனால் அமைதியாக இருக்கிறோம்.

    கே: 'இந்தியா' கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் தமிழ்நாட்டில் தொடருதா?

    ப: ஆமாம். கூட்டணியில் தொடருகிறோம்.

    கே: திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக கூட்டணியில் இருக்கிறார்களா?

    ப: எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

    கே: திருமாவளவனுக்கு அ.தி.மு.க. தரப்பில் தூது விடுவதாக சொல்கிறார்களே?

    ப: அதுமாதிரி இல்லை. தமிழ்நாட்டை பொருத்தவரை இந்த கூட்டணியில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
    • தினத்தந்தி பத்திரிகையில் செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர்.

    சங்கரன்கோவில்:

    ம.தி.மு.க. சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பத்திரிகை உலகில் புரட்சி செய்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மகன் டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் தினத்தந்தி பத்திரிகையை பங்களாவாசி முதல் ஏழை, எளிய மக்கள் வரை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியவர்.

    தினத்தந்தி பத்திரிகையில் தமிழக செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், பொருளாதார செய்திகள் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் கொடுத்தவர்.

    தந்தி டி.வி.யை உருவாக்கிய சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை சங்கரன்கோவிலில் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வாசுதேவ நல்லூர் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலை குமார், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் ரத்ன வேல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

    • ஒருவர் தன் வீட்டில் மதவழிபாடு செய்வது என்பது அவருடைய சொந்த விருப்பத்தை பொறுத்தது.
    • கிறிஸ்தவ மத வழிபாட்டில் தலையிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் தன் வீட்டில், உறவினர், நண்பர்களோடு ஜெபம் நடத்துவது வழக்கம். இதை அறிந்த சிலர் கடந்த 17-ந்தேதி, யாரும் அங்கு ஜெபம் செய்யக்கூடாது என்று வந்தவர்களை மிரட்டி இருக்கின்றனர். அச்சம் காரணமாக அனைவரும் திரும்பிப் போய்விட்டனர்.

    ஆனால் ஜான் பீட்டர் மட்டும் தன் குடும்பத்தினருடன் வீட்டிற்குள் ஜெபம் செய்துள்ளார். அப்போது 30 பேர் கும்பல் கைகளில் கம்பு தடியோடு வாசலிலேயே காத்திருந்தனர். ஜெபம் முடிந்து 6பேர் வெளியில் வந்தனர். அப்போது அவர்கள் மீது தாக்குதலை நடத்தி உள்ளனர்.

    கிறிஸ்தவ மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஜான் பீட்டர் குடும்ப உறவினர்களை தாக்கியவர்கள் இந்து முன்னணியினர் என்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    ஒருவர் தன் வீட்டில் மதவழிபாடு செய்வது என்பது அவருடைய சொந்த விருப்பத்தை பொறுத்தது. அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது.

    கிறிஸ்தவ மத வழிபாட்டில் தலையிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் திட்டமிட்டு மத கலவரத்தை ஏற்படுத்தி, அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்ற மதவெறி அமைப்புகளின் அரசியல் நோக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
    • மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

    மதுரை:

    முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 115-வது பிறந்தநாளையொட்டி மதுரை வலையங்குளத்தில் மாநாடு நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கின. மதுரையில் முகாமிட்ட வைகோ மாநாட்டு பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

    மேலும் இந்த மாநாடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்றும், மதுரை மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் கூறினார்.

    இந்த மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

    அதன்படி மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. முன்னிலையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. மாலை 4 மணி வரை நெல்லை அபுபக்கர், ஒரத்தநாடு கோபு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு திடலில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மொழிப்போர் தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    மாநாட்டில் வரவேற்பு குழு தலைவர் பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமை தாங்குகிறார். மாநாட்டில் இந்துத்துவ பாசிசம் வேரறுப்போம், இந்தியாவின் எதிர்காலம், சமூக நீதி காப்போம், திராவிட இயக்கத்தின் சாதனைகள், அண்ணாவின் மாநில சுயாட்சி, சுற்றுச்சூழல் சவால்கள், அண்ணா ஏற்படுத்திய அறிவுச்சுடர்,

    திராவிட இயக்கத்தில் பெண்கள், மொழி உரிமைப் போராட்டம், நதிநீர் உரிமை போரில் வைகோ, பாராளுமன்றத்தில் வைகோ, முழு மதுவிலக்கே நமது இலக்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையரங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், செல்வராகவன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், மனோகரன், பி.கே. சுரேஷ், துணைப்பொது செயலாளர்கள் ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், டாக்டர் ரொஹையா, ராஜேந்திரன், ஆட்சிக்குழு கிருஷ்ணன் மற்றும் வந்தியதேவன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், ஆசைத்தம்பி, காரை செல்வராஜ், புலவர் அரங்க நெடுமாறன், மல்லிகா தயாளன், வழக்கறிஞர் செந்தில் செல்வன், பாஸ்கர் சேதுபதி, பால சசிகுமார் என்.எஸ்.அழகிரி ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் செந்திலதிபன், துரை வைகோ, மல்லை சத்யா, கணேச மூர்த்தி, சதன் திருமலை குமார், சின்னப்பா எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. மாநாடு நிறைவு உரையாற்றுகிறார்.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், அடிப்படை வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    • மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளபடி மருத்துவ காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளது.
    • வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாநில மாநாடு நடத்த உள்ளோம்.

    மதுரை:

    பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளபடி மருத்துவ காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதாரங்கள், அடிப்படை காரணங்கள் இல்லாமல் எதையும் கூறியிருக்க மாட்டார். இந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதால்தான் கூறியிருப்பார்.

    வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாநில மாநாடு நடத்த உள்ளோம். அந்த இடத்தினை ஆய்வு செய்வதற்காக தான் தற்போது மதுரை வந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் மண்டல ம.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசினார்.
    • தமிழ்நாட்டில் பா.ஜனதாவை நுழையவிடாமல் தடுக்க திராவிட இயக்கங்களை பாதுகாக்க வேண்டும்.

    மதுரை

    அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15-ந்தேதி மதுரையில் நடக்கிறது. இதனையொட்டி, மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று, தெப்பக்கு ளம் நோட்புக் அரங்கில் நடைபெற்றது.

    பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலா ளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு ஆலோச னைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    கலிங்கப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த போது நான் ஒரு அரசியல் கட்சி தொடங்குவேன் என்றோ, இத்தனை ஆண்டு கள் இயக்குவேன் என்றோ கனவு கூட கண்டதில்லை. அண்ணா மீது கொண்ட பற்றின் காரணமாக உயிரை யும் கொடுக்க துணிந்துதான் தி.மு.க.வில் பணியாற்றி னேன். பிரிட்டிஷ் காலத்தை போல ஒரு கவர்னரை தமிழகத்திற்கு நியமித்து, திராவிட இயக்கங்களை அழித்துவிட முயற்சிக்கி றார்கள்.

    ம.தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது? என்று கேட்கிறார்கள். ஸ்டெல் லைட், நியூட்ரினோ வராமல் தடுத்தோம், முல்லை பெரி யாறு அணையை பாதுகாத் தோம், தஞ்சைக்கு மீத்தேன் வராமல் தடுத்தோம். இப் படி எவ்வளவோ செய்துள் ளோம். 10 ஆண்டுக ளுக்கு முன்னால் பா.ஜ.க. என்றால் யாருக்காவது தெரியுமா?

    ஆனால், தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என மோடி, அமித்ஷா கூறுகி றார்கள். அந்த தைரியம் எப்படி வந்தது? தமிழ் நாட்டை காக்க வேண்டும் என்றால், இந்துத்துவா, சனாதன சக்திகள் ஊடுருவ விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்து கொள்வோம்.

    விமர்சனங்கள் எவ்வ ளவோ வரலாம். அதைப் பற்றி கவலைப்பட வேண்டி யதில்லை. பா.ஜ.க.வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு திராவிட இயக்கங் களை பாதுகாக்க வேண்டும்.

    நான் இதுவரை 7 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டி ருக்கிறேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை, தாமிரபரணி முதல் சென்னை வரை என பல முறை நடைபயணம் செய்தி ருக்கிறேன். அன்று நடைபய ணம் செய்த போது ஊடக ஆதரவு கூட கிடையாது. எல்லா இடத்திற்கும் நடந்து தான் செல்வேன். மக்களு டன் மக்களாக இருப்பேன். சாலையோரங்களில் ஓய்வெ டுப்பேன். எங்கும் அறை போட்டு தங்கவில்லை. இதனை யாரையும் ஒப்பிடுவ தற்காக கூறவில்லை.

    ஆனால், இன்று நடை பயணம் மேற்கொள்ளும் சிலருக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக போராடி கொண்டிருக்கிறேன். ம.தி.மு.க. தியாகத்தால் உருவான கட்சி. தொண்டர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். மதுரை யில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில தொண்டரணி துணை செயலாளர் பச்சைமுத்து, தணிக்கை குழு உறுப்பினர் பாண்டியன், மதுரை மாநகர் தொண்டரணி துணை செயலாளர் சண்முகவேல், சிம்மக்கல் பகுதி செயலாளர் பாஸ்கர், 44-வது வார்டு திட்டகுழு உறுப்பினர் தமிழ்செல்வி, 100-வது வார்டு உறுப்பினர் முத்து லட்சுமி, சுருதிரமேஷ், அன்னமுகமது, பாஸ்கர சேதுபதி, சுப்பையா, பச்சமுத்து.சண்முகவேல் புகழ்முருகன், வக்கீல்நாக ராஜன், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.
    • கூட்டத்தில் 14-ந்தேதி வைகோ பேசுகிறார்.

    மதுரை

    மதுரையில் வருகிற 14-ந்தேதி நடைபெறும் ம.தி.மு.க. மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வைகோ எம்.பி. சிறப்புரையாற்றுகிறார்.

    இது தொடர்பாக மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15 -ந் தேதி மதுரையில் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வருகிற 14-ந்தேதி

    (திங்கள்கிழமை) மாலை 5 மணி அளவில் தெப்பக்குளம் நோட்புக் அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன், தேனி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ராமநாத புரம் மாவட்ட செயலாளர் சுரேஷ், சிவகங்கை மாவட்ட செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரையாற்று கிறார். மேலும் தலைமை கழக நிர்வாகிகள் அவை தலைவர் அர்ச்சுனராஜ், பொருளாளர் செந்தில திபன், முதன்மை செயலா ளர் துரை வைகோ, துணை பொதுசெயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், ரொஹையா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    முடிவில் மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா நன்றி கூறுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×