search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவந்தி ஆதித்தனார்"

    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, ஆன்மீகம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 11-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், பொருளாளர் ராமநாதன், முன்னாள் பேரூராட்சி தலைவர் செந்தமிழ் சேகர், நிர்வாகிகள் பில்லா ஜெகன், மாமன்னன், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை உள்பட பலர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    வேப்பங்காடு சி.பா. சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி செயலாளரும், லெட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.ஆதிலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் - தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி

    வேப்பங்காடு சி.பா. சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளி செயலாளரும், லெட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.ஆதிலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் - தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி


    ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் அதன் மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜி ஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் தனலட்சுமி (பொறுப்பு), டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய சீசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குழு செல்வி, சிவந்தி அகடாமி ஒருங்கிணைப்பாளர் ரெஜூலா பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பில் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ஹெக்டேவர் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன், அவரது மகன் ரகுராமன் மற்றும் பேரன் சிதம்பர ஈஸ்வர் ஆகியோருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராசு நாடார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் செல்வின், துணைத்தலைவர்கள் அழகேசன், முருகன், துணைச்செயலாளர்கள் சத்தியசீலன், பார்த்திபன், நிர்வாகிகள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன், கோடீஸ்வரன், ரமேஷ், ஆறுமுக நயினார், பட்டு, மதன், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் மரியாதை.
    • அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி மரியாதை.

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    மேலும், பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும்.
    • சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.

    இதில், கனிமொழி எம்பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.

    இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்த ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும் என திமுக பாராளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனர் பரிந்துரைத்துள்ளார்.

    மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் கடல்சார் பல்கலைக் கழகம், சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வாக்குச்சாட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

    • 88-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
    • காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

    நாகர்கோவில் :

    பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர் சிவபிரபு, டைசன், சீனிவாசன் ஆதிலிங்கபெருமாள் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வக்கீல் அகஸ்தீசன், சரவணன் பீனிக்ஸ் கண்ணன், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள். இதில் மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத்தலைவர் தேவ், கவுன்சிலர்கள் சுனில்குமார், ரோசிட்டா மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், சந்திரசேகரன், ஆர்.எம்.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், சேகர், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, ஜெயகோபால் உள்பட பலர் பங்கேற்றனர். பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மண்டல தலைவர் அன்பு கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளர் தங்கவேல், மாநகர தலைவர் பிரேம், செயலாளர் அனீஸ், துணைத் தலைவர் யூஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்து முன்னணி சார்பில் மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் தியாக ராஜன், பிரதீஸ், மார்த்தாண்டன், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
    • தினத்தந்தி பத்திரிகையில் செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர்.

    சங்கரன்கோவில்:

    ம.தி.மு.க. சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பத்திரிகை உலகில் புரட்சி செய்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மகன் டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் தினத்தந்தி பத்திரிகையை பங்களாவாசி முதல் ஏழை, எளிய மக்கள் வரை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியவர்.

    தினத்தந்தி பத்திரிகையில் தமிழக செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், பொருளாதார செய்திகள் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் கொடுத்தவர்.

    தந்தி டி.வி.யை உருவாக்கிய சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை சங்கரன்கோவிலில் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வாசுதேவ நல்லூர் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலை குமார், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் ரத்ன வேல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "சின்னையா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளை மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.
    • ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கை அளித்ததிலும், ஆன்மிகத் துறையில் சேவையாற்றியதிலும் நிகரற்றவராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் போற்றப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "சின்னையா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளை மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.

    விளையாட்டுத் துறையில் இளைஞர்களை ஊக்குவித்ததிலும், ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கை அளித்ததிலும், ஆன்மிகத் துறையில் சேவையாற்றியதிலும் நிகரற்றவராக அவர் போற்றப்பட்டார்.

    அவரது பெருமைகளை இன்றைய நாளில் நாம் நினைவு கூருவோம். அவரது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு சார்பில் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அரசு சார்பில் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வலிங்கம், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தண்டுபத்து ஜெயராமன் சார்பில் அவரது மகன்கள் ரகுராம், சிவராம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெயராஜ், வக்கீல் சந்திரசேகர், ஆயுட்கால உறுப்பினர் அம்பி கண்ணன், உறுப்பினர்கள் அஜித்குமார், செல்வி, காயாமொழி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் முகதூம் முகைதீன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமையில், செயலாளர்கள் நாராயணராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆதித்தனார் கலைக்கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமி தாஸ், ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்சிலின் ஜிஜி, பத்ம ஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலை குருசெல்வி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய ஜெசிலி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் ஜெயக்குமார் ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், ஹெட்கேவார் ஆதித்தன், பகவதி ஆதித்தன், தேசிகா அறக்கட்டளை நிறுவனர் குமரகுருப ஆதித்தன், சண்முகானந்தன் ஆதித்தன் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

    நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் ஜெயகணேஷ் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, துணை செயலாளர் ராஜ், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், வேல்சாமி, எழில் வண்ணன், ஒன்றிய தலைவர் ரமேஷ் பாலன், இளைஞரணி செயலாளர் சுரேஷ் பெருமாள், இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 10-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
    • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    அவரது 10-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (புதன்கிழமை) கடை பிடிக்கப்பட்டது.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 10-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, தந்தி டி.வி., டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி. பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

     அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

    தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், சிம்லா முத்துசோழன், தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.அருள்காந்த்,

    அ.தி.மு.க. இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர்கள் கே.எஸ்.மலர்மன்னன், இ.சி.சேகர்

    தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் எம்.எஸ்.காமராஜ், தணிகாசலம், ஜி.கே.தாஸ், வர்த்தக பிரிவு தலைவர் தணிகை வேல், பகுதி செயலாளர் பிரபு, சிவாஜிநாதன், மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், மாம்பலம் ராஜேந்திரன்

    பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், நாச்சிக்குளம் சரவணன், வடசென்னை மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜன், துணைத்தலைவர் எஸ்.ஆர்.ராமையா

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், கொட்டிவாக்கம் முருகன், நீலாங்கரை ஆர்.டி.பாஸ்கர்,

    தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் பிரபாகர், மாறன், ஜமுனா, கேசவன், ஏழுமலை, குமார், ஜானகி ராமன், மகஸ்,

    த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பொதுச் செயலாளர் எம்.பி.நாதன், ஆர்.எஸ்.முத்து, தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் மனோகரன்,

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர் கதிர் ராஜேந்திரன், தொழிற்சங்க பேரவை தலைவர் அன்பு தென்னரசன், மாவட்ட செயலாளர் மு.ஆனந்த், மணிகண்டன், அய்யனார்,

    புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், ராஜாராம், ஆர்.முரளி, பழனி, பிரகாஷ், செல்வம், லோகநாதன், ராதா கிருஷ்ணன், சீனிவாசன், ஜானகி ராமன், ரமேஷ், மணி, துரைராஜ், ஜெகன், சேகர், ரவி, சங்கர், நடராஜன், தீர்த்தகிரி, சந்தோஷ்குமார், வினோத்குமார்.

    புரட்சி பாரதம் மாநில தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் ஆலை சிவலிங்கம்,

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், துணை தலைவர் பரமன்குறிச்சி வி.பி.ஜெயக்குமார், சென்னை மாநகர தலைவர் இளங்கோவன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எளிய தமிழில் தினத்தந்தி நாளிதழை வெளியிட்டு, தமிழ்நாட்டு மக்களிடம் பத்திரிகை படிக்கும் பழக்கத்துக்கு வித்திட்டவர் பா.சிவந்தி ஆதித்தனார்.
    • சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து இந்திய விளையாட்டு துறைக்கு சிறப்பு சேர்த்ததுடன், பல்வேறு பள்ளி, கல்லூரிகளை தொடங்கி கல்வி துறையிலும் சிறந்து விளங்கியவர்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    எளிய தமிழில் தினத்தந்தி நாளிதழை வெளியிட்டு, தமிழ்நாட்டு மக்களிடம் பத்திரிகை படிக்கும் பழக்கத்துக்கு வித்திட்ட பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள் இன்று.

    சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து இந்திய விளையாட்டு துறைக்கு சிறப்பு சேர்த்ததுடன், பல்வேறு பள்ளி, கல்லூரிகளை தொடங்கி கல்வி துறையிலும் சிறந்து விளங்கியவர். அன்னாரின் நினைவு நாளில் அவரது சாதனைகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • தமிழ் இதழியல் வரலாற்றில் தந்தை சி.பா. ஆதித்தனாரைப் போலவே சிவந்தி ஆதித்தனாரும் தவிர்க்க முடியாதவர்.
    • பா. சிவந்தி ஆதித்தனார் செய்த மக்கள் பணிகளால் அவர் நமது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பத்தாவது நினைவு நாளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ் இதழியல் வரலாற்றில் தந்தை சி.பா. ஆதித்தனாரைப் போலவே சிவந்தி ஆதித்தனாரும் தவிர்க்க முடியாதவர். இதழியல் துறை அவர் தொட்டதெல்லாம் துலங்கின. அவரது அனைத்து புதிய முயற்சிகளும் வென்றன. அதற்குக் காரணம் அவர் மக்கள் மனங்களை நன்கு அறிந்திருந்தது தான்.

    கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் ஆகிய துறைகளில் அவர் செய்த சாதனைகளும், அவர் அளித்த கொடைகளும் அவரது பெருமையை என்றென்றும் பேசும். பா. சிவந்தி ஆதித்தனார் செய்த மக்கள் பணிகளால் அவர் நமது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது பெருமைகளை இந்த நாளில் நாம் போற்றுவோம். அவரது புகழ் மேலும் பரவட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது நினைவு நாள் இன்று.
    • மக்களுக்கும், சமூகத்திற்கும் பா.சிவந்தி ஆதித்தனார் செய்த கொடைகளையும், சேவைகளையும் அவரது நினைவு நாளில் போற்றுவோம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது நினைவு நாள் இன்று. உழைப்பின் உருவம் அவர். தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் மகன் என்றாலும், தமது இதழியல் பயணத்தை அச்சுக்கோர்ப்பதில் இருந்து தொடங்கி அடுத்தடுத்தக் கட்டங்களை எட்டியவர். அனைத்து நிலைகளிலும் பயணித்தவர் என்பதால் தான் பணியாளர்களின் உழைப்பை உணர்ந்தும், மதித்தும் ஏற்பளித்தார்.

    கல்விக்காகவும், ஆன்மிகத்திற்காகவும் கணக்கின்றி அள்ளி அள்ளிக்கொடுத்தவர். அவரது கொடைகள் தலைமுறைகளையும், நூற்றாண்டுகளையும் கடந்து நினைவு கூரப்படும். அவர் மறைந்து பத்தாண்டுகள் ஆனாலும், அவருடன் பழகிய நினைவுகள் மறக்கவில்லை. மக்களுக்கும், சமூகத்திற்கும் அவர் செய்த கொடைகளையும், சேவைகளையும் அவரது நினைவு நாளில் நாம் போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
    • நாடார் மகாஜன சங்கம் சார்பில் ப.ரா.முத்துச்சாமி நாடார் மகாஜன மேன்ஷனில் கொண்டாடப்பட்டது.

    மதுரை

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நாடார் மகாஜன சங்கம் சார்பில் ப.ரா.முத்துச்சாமி நாடார் மகாஜன மேன்ஷனில் ெகாண்டாடப்பட்டது.

    இதையொட்டி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு நாடார் மகா–ஜன சங்க பொருளாளர் நல்லதம்பி மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாைத செய்தார். இந்த நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்க இணை செயலாளரும், உமா  கேட்டரிங் அதி–ப–ரு–மான ஆனந்–த–கு–மார், நா.ம.ச. காம–ராஜ் தொழில்–நுட்ப கல்–லூரி பரி–பா–லன சபை ெபாரு–ளா–ளர் ஏ.சி.சி.பாண்–டி–யன், நா.ம.ச. சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி தலைவர் மாரீஸ்குமார், நா.ம.ச. அன்னபாக்கியம் ஜெயராஜ் நாடார் பார்மசி கல்லூரி தாளாளர் ஐசக் முத்துராஜ், நா.ம.ச. துணைத்தலைவர்கள் சி.முருகேசன், எஸ்.ஆர்.பார்த்தின், பெரியசாமி, கே.எஸ்.கே.முத்துவேல், டி.மாணிக்கராஜ், நா.ம.ச. செயற்குழு உறுப்பினர்கள் அருஞ்சுணைராஜன், ஐயர்கனி, நா.ம.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிவேல், வேட்டையார், ரவிச்சந்திரன், தெற்கு வாசல் ரமேஷ், நா.ம.சங்க முன்னாள் மேலாளர் அசோகன், நா.ம.சங்க பணியாளர்கள் மாரிச்செல்வன், சரவணக்குமார், ஜஸ்டின், மகேஷ் அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்கள்.

    ×