என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நினைவு இல்லத்தில் ‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
12-வது ஆண்டு நினைவு தினம் - டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் தலைவர்கள் மரியாதை
- போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
- பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை:
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
அவரது 12-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (சனிக்கிழமை) கடை பிடிக்கப்பட்டது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 12-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
மாலதி சிவந்தி ஆதித்தன், அனிதா குமரன், ஜெயந்தி அம்மாள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
தினத்தந்தி, மாலைமலர், தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி. பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-
தெலுங்கானா, புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், மனிதநேய அறக்கட்டளை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, விஜய் வசந்த் எம்.பி., தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம்,
தி.மு.க. இளைஞர் அணி மாநில துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், வர்த்தக அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம், மயிலை பாலு, தாமோதரன், மகேந்திரன், விஜயராஜ், தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.அருள் காந்த், மகளிர் அணி அமைப்பாளர் ஷகிலா
அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர்மன்னன்,
காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.கே.தாஸ், தென்சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் சிவாஜிநாதன், கொட்டிவாக்கம் முருகன், வினோத், எம்.எஸ்.காமராஜ், தணிகாசலம்,
பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், நிர்வாகிகள் கிரி, காளிதாஸ், சி.ராஜா, மாரியப்பன், வன்னியராஜா, ராமையா,
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி, நிர்வாகிகள் ஆடிட்டர் அர்ஜுன் ரவி, அதிபன், தி.நகர் அரி,
த.மா.கா. வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, பொதுச்செயலாளர் சண்முகவேல், சிவபால்
பா.ம.க. பொருளாளர் திலகபாமா, நிர்வாகிகள், முத்துக்குமார், சிவராமன், சிவகுமார், ஜெயராமன், ஜனார்த்தனன்,
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் தி.நகர் அப்புனு, தாமு, சபரிநாதன், நிர்வாகிகள் காந்தி, தர்மா, தேவா, அனிதா, மரகதவல்லி, முத்து, லட்சுமிதேவி,
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மாநில பொருளாளர் வக்கீல் கண்ணன், ஆர்.கே.நகர் பகுதி கழக செயலாளர் ராஜேஷ், வட சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மாசிலாமணி, ராயபுரம் பகுதி பொருளாளர் சங்கர பாண்டியன், 38-வது வட்டக் கழக செயலாளர் சண்முகசுந்தரம்,
அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக தலை வர் முத்துராமன், சிங்கப் பெருமாள், செயலாளர் விஸ்வநாதன்,
இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், பொருளாளர் எட்வர்ட் ராஜா, துணை செயலாளர்கள் திரவியம், ரவிராஜன், லட்சு
மணன், திருச்சி அவனியாப்பூர் நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் கமல்நாதன், துணைத்தலைவர் ராஜேந்திரன், நெல்லை வாழ் முக்கூடல் நாடார் சங்கத் தலைவர் ஆர்.சி.சிதம்பரம், மாடம்பாக்கம் நாடார் சங்கத் தலைவர் பொன்னம்பலம், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் என்ஜினீயர் டி.விஜயகுமார், பொதுச் செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் அழகுராஜ்,
நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க பூந்தமல்லி தொகுதி தலைவர் ராம்ராஜ், தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவாஜிராஜன், மாநில செயலாளர் சைமன் பொன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், நிர்வாகிகள் வீரகுமார், பாஸ்கர், முருகவேல், நாகராஜ், கலையரசு,
நெல்லை தட்சணமாற நாடார் சங்க சென்னை கிளை தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் கணேசன், நிர்வாகிகள் வேலுமணி, அன்புசெழியன், ஏ.பி.துரை, லட்சுமணன், சென்னை வாழ் இனாம்கரிசல் குளம் நாடார் சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார்,
திருவள்ளூர் மாவட்ட நாடார் பேரவை தலைவர் சுரேஷ், செயலாளர் சுபாஷ்,
நாடார் பேரவை வட சென்னை மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன், மாவட்ட பொருளாளர் கே.சுடலைமணி, மாவட்டத் துணைத் தலைவர் வெள்ளைச் சாமி, துணைச் செயலாளர் ராஜ்குமார், ஆர்.கே.நகர் பகுதி செயலா ளர் எஸ்.பாக்யராஜ், வட சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் தாஸ், துணைச் செயலாளர் சதீஷ், மணலி டேணிஷ்குமார்,
நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க நிர்வாக செயலாளர் பி.சந்திரசேகர், நிர்வாகிகள் சதானந்தம், கல்வி கமிட்டி உறுப்பினர்கள் வெள்ளத் துரை, எட்டுராஜ், சண்முக வேல்,
தமிழ்நாடு வணிகர் பேரவை பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன், வெள்ளையன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் சண்முகம், செல்வராஜ், மத்திய சென்னை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் மாரிமுத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா மற்றும் நிர்வாகிகள் சதுக்கத் துல்லா, ஷேக் முகைதீன், சத்தியசீலன், பஷீர் அகமது,
தமிழ்நாடு டாக்டர் சி.பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், பொருளாளர் நசீர் அகமது, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பத்திரப்பதிவு துறை ஐ.ஜி. ஆறுமுக நயினார், காயல் ஆர்.எஸ்.இளவரசு, மும்பை நற்பணி மன்ற தலைவர் ரசல் நாடார், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் பொன்னு, நிர்வாகிகள் சிவன் பாண்டியன், பெனியேல், செல்வன், நெல்லை மாவட்ட நற்பணி மன்ற துணைச் செயலாளர் செல்லத்துரை,
சேலம் மாவட்ட நற்பணி மன்ற தலைவர் வேலாயுத ரவீந்திரன், மத்திய சென்னை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் எழுத்தாளர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், வடசென்னை கிழக்கு மாவட்ட நற்பணி மன்ற துணைத் தலைவர் எட்வர்ட்ராஜா,
திருச்சி அணியாப்பூர் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம் மற்றும் காமராஜ், கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், அயன்புரம் கிளை நிர்வாகிகள் பிரபு, சவுந்தர் முருகன், சச்சிதானந்தம், பார்வதி செல்வன், ஜஸ்டின், பாலகிருஷ்ணன், அருள்குமார், வடசென்னை மாவட்ட நற்பணி மன்ற தலைவர் துரைபழம், துணைத் தலைவர் ராமையா, துணை செயலாளர் வன்னியராஜன், கடலூர் மாவட்ட நற்பணி மன்ற கிளை தலைவர் அமுதன் வளர்மதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.






