search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uniform Civil Code"

    • ஜார்க்கண்ட் மக்கள் சிறப்பாகவும், எளிமையாகவும் வாழ்கின்றனர்.
    • இந்தியாவிலேயே அதிக தாது சுரங்கம் ஜார்க்கண்டில் தான் இருக்கிறது.

    திருப்பூர்:

    பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். தற்போது சொந்த ஊரான திருப்பூருக்கு வந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜார்க்கண்ட் மக்கள் சிறப்பாகவும், எளிமையாகவும் வாழ்கின்றனர்.பெரிதாக ஆசைப்படுவதில்லை.ஆசைப்படாததால் மகிழ்ச்சிகரமாக வாழ்கின்றனர். சிறு, குறு தொழில்கள் அங்கு குறைவு. பெரிய இரும்பு ஆலைகள் இருந்தும், சுரங்கம் இருந்தும் மக்கள் பின்தங்கியுள்ளனர்.மரங்களை தெய்வமாக வணங்கும் உயர்ந்த கலா சாரம் உள்ளது. மரங்களுக்காக பெரிய பண்டிகை கொண்டாடுவதை பார்த்து அசந்து போனேன்.

    இந்தியாவிலேயே அதிக தாது சுரங்கம் ஜார்க்கண்டில் தான் இருக்கிறது. தங்கம், வைர சுரங்கம் தவிர மற்ற சுரங்கங்கள் அதிகம் உள்ளன.அனைவருக்கும் இந்தி தெரிந்துள்ளது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு குழு மக்களுக்கும் தனித்தனி மொழி இருக்கின்றன.

    தி.மு.க.,வை பொறுத்த வரை, பல்வேறு நிலையில், பலவகை நிலைப்பாட்டை எடுக்கும் கட்சி. மது இல்லாத தமிழகம் இருந்தால் மாநில வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. மதுவிலக்கால் 6 மாதம் அல்லது ஓராண்டு மட்டும் அரசுக்கு சிரமமாக இருக்கும். அதன்பின் ஜி.எஸ்.டி., வரி வருவாய் வாயிலாக நிலைமை சீராகி விடும். மது பழக்கத்தால் சாதாரண மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. சாராய ஆலை அதிபர்கள் மட்டுமே பயனடைகின்றனர்.

    பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற சிந்தனையை நோக்கி ஒன்றுப்பட்டு உழைக்க வேண்டும். பெண்களுக்கு சரியான உரிமை கிடைக்க பொது சிவில் சட்டம் அவசியம். குறிப்பாக பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க கூறியது மத்திய அரசு
    • பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டம் கொண்டு வர எதிர்ப்பு

    இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த மாதம் 14-ந்தேதி முதல் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து பிரதமர் மோடி பேசியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப் பொருளாகி உள்ளது. இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் பொதுசிவில் சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக, சட்டம் மற்றும் நீதிக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது.

    அரவிந்த் கெஜ்ரிவால், மாயாவதி பொதுசிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க. பேன்ற உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி இன்னும் தனது நிலைப்பாட்டை கூறவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் மவுனம் குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ''போது சிவில் சட்டத்தில் காங்கிரஸ் தெளிவான நிலையை கொண்டிருக்கிறதா? அவர்களுடைய சந்தேகத்திற்குரிய மவுனம் வஞ்சகமானது. இந்தியாவின் பன்முகத்தன்மை மீது சங் பரிவார் தாக்குதல் நடத்தும்போது, அதை தடுப்பதற்கு காங்கிரஸ் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தயாராக உள்ளதா?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதை பொறுத்து மேகதாது அணை பிரச்சினை குறித்து இங்கு உள்ளவர்கள் பேசுகிறார்கள்.
    • முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் சில குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் கூறுவது போல எதுவும் இல்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அரிகேசவநல்லூரில் உள்ள அரியநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நெல்லை வந்தார்.

    அவருக்கு வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் மாநகர காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே சமூக நீதி. பல்வேறு மதங்கள் உள்ள இந்த நாட்டில் சமூக நீதி தேவை என்பதற்காகவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இந்த சட்டமானது ஒரு சமூகத்திற்கு எதிரான சட்டம் என சிலரால் தோற்றுவிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் 4 நபர்கள் இருந்தால் தனித்தனியாக அவர்களுக்கு சட்டம் இருக்க முடியாது. அதனாலேயே அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். சரத் பவார் போன்றோர் கூட இந்த சட்டத்தை விமர்சனம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர். இந்த கால கட்டத்திற்கு இந்த சட்டம் அவசியமானது. எல்லோரும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ள முத்தலாக் சட்டத்தை கூட சிலர் அரசியல் ஆக்கி வருகின்றனர். ஆன்மீகம் இந்தியாவை வளர்க்கிறது. ஆன்மீகம் என்பதில் அனைத்து மதமும் அடங்கும். எல்லா மத நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

    கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதை பொறுத்து மேகதாது அணை பிரச்சினை குறித்து இங்கு உள்ளவர்கள் பேசுகிறார்கள்.

    எதிர்க்கட்சிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில் மகாராஷ்டிராவில் 40 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறிய சம்பவம் முற்றிலும் அரசியல் சார்ந்த கேள்வி. எனவே இது குறித்து நான் பதில் அளிக்க முடியாது.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் என்ற பொறுப்பில் இருக்கும் எனக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளது. அதற்கு உட்பட்டு நான் செயல்படுகிறேன். முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் சில குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் கூறுவது போல எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகிக் கொண்டே தான் இருக்கிறது என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

    முன்னதாக அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் கோரிக்கை ஒன்றை நான் பார்த்தேன். அதில் ஒரு மதம் சார்ந்த திருவிழாவிற்கு, அதிக பஸ் மற்றும் ரெயில்களை விட வேண்டும் என்று கோரிக்கை விட்டிருந்தார். ஒருவேளை என் கண்ணில் அது மட்டும் தான் பட்டதா என்று தெரியவில்லை. இங்கு திருச்செந்தூர் உள்பட ஏராளமான வழிபாட்டு தலங்கள் உள்ளது. அவர் எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் கோரிக்கை விட்டிருந்தால் அது மகிழ்ச்சி.

    ஒருவேளை அவர் அப்படி அனைத்து மதத்தினருக்கும் சேர்த்து கோரிக்கை விடாமல் விட்டிருந்தால் ஏற்றத்தாழ்வு பாரபட்சம் இருக்கக் கூடாது. தமிழகத்தில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களையோ, விழாக்களையோ பேசுவதே தவறு என்ற எண்ணம் இருக்க கூடாது. முதல்வரே இந்து மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது. ஆக, இந்த பாரபட்சம் இல்லாத ஆன்மீக நிலை இருக்க வேண்டும்.

    செய்தித்தாள்களில் வந்த வேடிக்கையான செய்தியை பார்த்தேன். கஞ்சாவை இளைஞர்கள் சாப்பிட்டு பார்த்து இருக்கிறோம். இப்போது தமிழகத்தில் கஞ்சாவை எலிகள் சாப்பிட தொடங்கி இருப்பதாகவும், கஞ்சாவை தேடி போலீஸ் நிலையத்திற்கு வரும் எலிகளின் போதையை தடுப்பது எப்படி என்றும், போலீஸ் நிலையத்தில் இருக்கும் கஞ்சாவுக்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது... எலிகளின் போதையை எப்படி தடுப்பது என்ற ஒரு பெரிய பிரச்சினை தமிழகத்தில் ஓடிக்கொண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு மதங்களையும், வெவ்வேறான நம்பிக்கைகளையும் கொண்ட மக்களை ஒருங்கிணைக்கும் ஒரே இணைப்புச் சக்தியாக மதச்சார்பின்மை விளங்குகிறது.
    • அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-ம் பிரிவுகளுக்கு அ.தி.மு.க. உரிய மதிப்பளிக்கிறது.

    சென்னை:

    எடப்பாடி பழனிசாமியிடம் இன்று நிருபர்கள் மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறி உள்ளோம்" என்றார்.

    அ.தி.மு.க. ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறி இருந்த தகவல் வருமாறு:-

    பல்வேறு மதங்களையும், வெவ்வேறான நம்பிக்கைகளையும் கொண்ட மக்களை ஒருங்கிணைக்கும் ஒரே இணைப்புச் சக்தியாக மதச்சார்பின்மை விளங்குகிறது. ஒவ்வொரு நபரும் அவரின் விருப்பத்திற்குரிய மதத்தைப் பின்பற்றுவதற்கும், மற்றும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதற்கும் உரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-ம் பிரிவுகளுக்கு அ.தி.மு.க. உரிய மதிப்பளிக்கிறது.

    இந்திய நாட்டின் சிறுபான்மையினரின் மதம் மற்றும் மனித உரிமைகளை பறிக்கின்ற வகையில், ஒரே சீரான உரிமையியல் விதித் தொகுப்பிற்காக, அரசமைப்புச் சட்டத்தில் எவ்விதத் திருத்தங்களையும் கொண்டுவர வேண்டாம் என மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது.
    • 3 மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது.

    விழுப்புரம்:

    ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஓமந்தூர் சார்பில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்-விழுப்புரம் ஜி.எஸ்.டி. சாலை திண்டிவனம் கோர்ட்டு வளாகத்தின் அருகே உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில் இன்று காலை 10.15 மணி முதல் 11.45 மணி வரை தனித்தனியாக 39 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமணத்தை தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

    முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையை ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும், பா.ஜ.க. பிரமுகரும், ஓமந்தூர் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி செயலாளருமான ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். பின்னர் 39 ஜோடி மணமகன்கள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து, மணமகள்கள் பட்டு புடவையுடன் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கு முன்பாக அந்தணர்கள் யாகம் நடத்தி, பிரபல தவில் வித்வான்கள் மற்றும் நாதஸ்வர வித்வான்களின் மங்கல இசையுடன் திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கும் 4 கிராம் தங்க திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    இந்த திருமண ஏற்பாடுகளை ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும், பா.ஜ.க. பிரமுகரும், ஓமந்தூர் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி செயலாளருமான ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேலும் கூடுதலாக 3 திருமண ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர். இங்கு நடந்த திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, பொது சிவில் சட்டம் அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம். தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது. மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. 3 மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தினால், தமிழக பாஜக துணை நிற்கும் என கூறினார்.

    திருமண நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சம்பத், பிரச்சார செயலாளர் விநாயக மூர்த்தி, தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாவட்ட தலைவர்கள், கலிவரதன், ராஜேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்கின்ற ரகுராமன், புதுச்சேரி எம்.எல்.ஏ. அசோக் பாபு மற்றும் பா.ஜ.க. மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்றினோம்.
    • இன்று மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி மட்டும்தான் கொடுக்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயார் ஆகி வரும் நிலையில் அ.தி.மு.க.வை தயார்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு உள்ளார்.

    அடுத்த மாதம் மதுரையில் மாநாடு நடத்தி அ.தி.மு.க. தொண்டர்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று (புதன்கிழமை) அவர் சென்னையில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார்.

    சென்னை ராயப்பேட்டை தலைமை கழகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    இதையடுத்து அவர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கட்சியினர் எத்தனையோ வித்தைகளை அரங்கேற்றினார்கள். அத்தனையும், கழக தொண்டர்கள், நிர்வாகிகள் மூலம் தகர்த்தெறியப்பட்டது.

    இந்த ஓராண்டு காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்தோம். அ.தி.மு.க. 3 ஆக, 4 ஆக போய் விட்டது. அதில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைந்து போய் விட்டது என்று எதிரிகள் விமர்சனம் செய்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற விதமாக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த பணியை எழுச்சியோடு மேற்கொண்டு ஒன்றரை மாத காலத்தில் 1 கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து சரித்திரம் படைத்து இருக்கிறோம்.

    இனி அ.தி.மு.க. வெற்றிடம் கொண்டது அல்ல என்பதை நிரூபித்துள்ளோம். இனி அந்த வார்ததையை யாரும் பயன்படுத்த வேண்டாம். தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.தான். வேறு எந்த கட்சியிலும் இவ்வளவு உறுப்பினர்கள் கிடையாது.

    அதுவும், இளைஞர்கள், சகோதரிகள், கழக உடன்பிறப்புகள் நிறைந்த இயக்கம் அ.தி.மு.க.தான். இது தொண்டர்கள் நிறைந்த கட்சி.

    சில பேர் இந்த இயக்கத்தை முடக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள். தி.மு.க.வுக்கு 'பி' அணியாக இருந்து செயல்பட்டார்கள். அவர்களுக்கு இந்த 75 நாட்களில் கழக தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அற்புதமாக செயல்பட்டு அ.தி.மு.க. உடையவும் இல்லை, சிந்தவும் இல்லை. சிதறவும் இல்லை, கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை இந்த உறுப்பினர் சேர்க்கையின் மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் அடுத்து வருகின்ற தேர்தலுக்கு அடித்தளமாக எங்களுடைய வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தினார். அவரது வழியில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றது.

    அந்த தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று எங்களுடைய எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் 22 நாட்கள் குரல் கொடுத்தோம். 22 நாட்களும் பாராளுமன்ற அவை ஒத்தி வைக்கப்பட்டது. இது சரித்திர சாதனை.

    அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் காவிரியில் நமக்கு எவ்வளவு பங்கு நீர் கிடைக்குமோ அதை கொடுத்தனர். இப்போது காங்கிரசும் தி.மு.க.வும் இணைந்து இருக்கின்றன. ஒரே கூட்டணியில் உள்ளன. முதலமைச்சர் ஏன் காவிரி நீரை திறந்து விடுமாறு வற்புறுத்தக்கூடாது.

    இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பேன் என்று சொல்லும் முதலமைச்சர், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் முதல்-மந்திரியை தொடர்பு கொண்டு பேசி நமக்கு ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய 9 டி.எம்.சி. தண்ணீரை ஏன் பெறவில்லை? இது விவசாயிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி.

    கர்நாடகா மாநிலம் அமைதியாக இருக்கிறது. அதை சீர்குலைப்பதற்காக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் மேகதாது பற்றிய செய்தியை வெளியிடுகிறார் என்று நான் கருதுகிறேன்.

    மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை பற்றி எங்களின் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ துறை சிறப்பாக இருந்தது. 10 ஆண்டு காலம் பொற்கால ஆட்சி நடத்தினோம். மருத்துவ துறையில் சாதனை படைத்தோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தொடர்ந்து 3 ஆண்டு காலம் முதன்மையாக இருந்து விருதுகளை பெற்றோம்.

    இன்று 4-வது இடத்துக்கு சென்று விட்டது என்று நினைக்கிறேன். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்றினோம்.

    இன்று மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி மட்டும்தான் கொடுக்கிறார். அவரிடம் நிர்வாக திறமை இல்லை. 2 ஆண்டு காலத்தில் மருத்துவ துறை சீரழிந்து விட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற குழந்தையின் கை அகற்றப்பட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்தன. இது வேதனையான விஷயம். ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாய்க்குதான் அதன் கஷ்டம் தெரியும். அந்த குடும்பத்தினருக்கு தான் வலி தெரியும். அதை இந்த அரசு உணர வேண்டும். உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் குழந்தைக்கு கையை அகற்றும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது.

    கடலூரில் சளி இருப்பதாக சிகிச்சைக்கு சென்றவர்களுக்கு நாய்க்கடி ஊசி போடுகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியில் 2 கையும் இல்லாத ஒருவருக்கு 2 கையும் பொருத்தி சாதனை படைத்தோம். இது போன்ற சாதனையை அ.தி.மு.க. ஆட்சியில்தான் பார்க்க முடியும். அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். தி.மு.க. ஆட்சியில் ஸ்டான்லி மருத்துவமனையை கூட சரியாக பராமரிக்கவில்லை. இனியாவது தி.மு.க. அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும்.

    பருவமழை இன்று சரியாக பெய்யாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல ஏற்கனவே நடவு செய்த பகுதிக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. கடைமடை பகுதிக்கு சுத்தமாக தண்ணீர் போகவே இல்லை.

    மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது. கர்நாடக அரசிடம் கேட்டால் அவர்கள் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்கிறார்கள். இதை பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் விரைந்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் எப்படி தண்ணீர் திறந்தீர்களோ அதே போல விவசாயிகளுக்கு தேவையான நீரை வழங்குவதும் இந்த அரசின் கடமை.

    சரியாக செயல்பட்டால்தான் குறுவை சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

    மக்களின் நன்மை கருதி இந்த ஆட்சியில் மக்கள் படும் அல்லல்கள், துயரங்கள், துன்பங்கள், வேதனைகள், கஷ்டங்களை முதலமைச்சரிடம் ஊடக நண்பர்கள் கேள்வியாக கேட்டு அதன் மூலமாவது இந்த அரசு மக்களுக்கு நன்மை செய்யட்டும். முதலமைச்சரிடம் கேள்வி கேட்க பயப்படாதீர்கள்.

    தக்காளி 1 கிலோ ரூ. 160-க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் போய் விட்டது. இது மட்டுமல்ல பூண்டு, துவரம் பருப்பு உள்ளிட்ட எல்லா மளிகைப் பொருட்களும், ஏழை எளிய மக்கள் அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் உணவு பொருட்கள் அனைத்தும் 70 சதவீதம் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதை பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை. அப்படி இருக்கும் போது மாமன்னன் படம் எப்படி ஓடுகிறது என்று கேட்கிறீர்கள்.

    விலைவாசியை பற்றி கேளுங்கள். மாமன்னன் திரைப்படத்தின் மூலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சி பெறும் வகையில் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அப்போதைய சபாநாயகர் தனபால் நான் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்ற கூட்டத்தை கூட்டினார்.

    நான் நிரூபிக்கின்ற போது அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை இருக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளி மைக், பெஞ்சை உடைத்து ரகளையில் ஈடுபட்டுஅவரது இருக்கையில் தி.மு.க.வினர் அமர்ந்தனர். இதை மறந்து விடாதீர்கள். இவர்களா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வார்கள்?

    எங்களின் உள்கட்சி பிரச்சினையை வெளியில் பேச முடியாது. கழகத்தை பலப்படுத்தி வருகிறோம். விரைவாக கழகத்தின் அனைத்து பணிகளும் நிரப்பப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. தேர்தல் வருகின்ற போது நிச்சயமாக உங்களை அழைத்து எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று சொல்வோம்.

    ஏற்கனவே நாங்கள் பா.ஜனதா பற்றி சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தில் எப்படி கூட்டணி அமைத்தார்களோ அதே போல் காலம் கனிந்து வரும் போது நேரம் வரும் போது நிச்சயமாக எல்லாம் வெளிப்படையாக பேசுவோம். தேர்தலுக்கு ஓராண்டு இருப்பதால் கூட்டணி பற்றி பேச இப்போது அவசியம் இல்லை. பா.ஜனதாவுடன் உறவு எப்படி இருக்கிறது என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    அதன் பிறகும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பா.ஜ.க. அரசு முயன்று வருகிறது.
    • பொது சிவில் சட்டத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    சென்னை:

    திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு, பாதுகாவலர் போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன.

    அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

    அதேவேளையில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'இருவிதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்' என்றார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சு, எதிர்க்கட்சிகள் மத்தியில் மீண்டும் சூட்டை கிளப்பி உள்ளது.

    இதுபோன்ற சூழ்நிலையில், 22-வது இந்திய சட்ட ஆணையம், நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை பயன்படுத்தும் வகையிலான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கோரி உள்ளது.

    இதுதொடர்பாக இந்திய சட்ட ஆணையம் வெளியிட்டு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் 22-வது இந்திய சட்ட ஆணையம் ஒரே மாதிரியான சட்டத்தை பயன்படுத்தும் வகையிலான பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. ஏற்கனவே செயல்பட்ட 21-வது இந்திய சட்ட ஆணையமும் இதுகுறித்து ஆய்வு செய்தது. மேலும், பொதுமக்களிடமும் கருத்து கோரியது.

    அதன்படி 21-வது சட்ட ஆணையம், குடும்ப சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூறியது. பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவு மற்றும் இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இதுதொடர்பாக மீண்டும் ஆய்வு செய்வது என 22-வது இந்திய சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி, 22-வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடமும், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடமும் இருந்து கருத்துகளையும், யோசனைகளையும் பெற தீர்மானித்துள்ளது.

    எனவே, இந்த சட்டம் தொடர்பாக கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்க விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதிக்குள் membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

    அதுமட்டுமல்லாமல், 'உறுப்பினர் செயலர், இந்திய சட்ட ஆணையம், 4-வது தளம், லோக் நாயக் பவன், கான் மார்க்கெட், புதுடெல்லி-110 003' என்ற முகவரிக்கும் தபால் மூலம் கருத்துகளை அனுப்பிவைக்கலாம்.

    https://lawcommissionofindia.nic.in/ என்ற இணையதளத்துக்கு சென்றால் 'பொது சிவில் சட்டம்-பொது அறிவிப்பு' என்ற தலைப்பில் 'லிங்க்' இருக்கும். இதனை கிளிக் செய்தால் வியூ எனப்படும் பைல் இருக்கும்.

    இதனை பதிவிறக்கம் செய்யும்போது பொது சிவில் சட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதில் 'கிளிக் கியர்' என இருப்பதை பயன்படுத்தி தங்களது பெயர், செல்போன் எண், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, சொந்த மாவட்டம், மாநிலம் போன்றவற்றை பதிவு செய்து தங்களது கருத்துகளை எழுத்து வடிவில் பி.டி.எப். பைலாக 2 எம்.பி. அளவுக்கு மிகாமல் பதிவேற்றம் செய்யலாம்.

    இல்லாதபட்சத்தில் அங்கேயே தங்களது கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்யலாம். தேவைப்பட்டால், தனிப்பட்ட விசாரணை அல்லது கலந்துரையாடலுக்கு எந்தவொரு தனிநபரையும் அல்லது அமைப்பையும் ஆணையம் அழைக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிலைக்குழு கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
    • பொது சிவில் சட்டம் தேவையில்லை என 21வது சட்ட கமிஷன் கூறியிருக்கிறது.

    இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த மாதம் 14-ந்தேதி முதல் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து பிரதமர் மோடி பேசியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப் பொருளாகி உள்ளது. இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் பொதுசிவில் சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக, சட்டம் மற்றும் நீதிக்கான பாராளுமன்ற நிலைக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, அதிமுக, உள்பட நாட்டின் பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக கட்சிகளிடம் ஆலோசித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தன.

    பொது சிவில் சட்டம் தேவையில்லை என 21வது சட்ட கமிஷன் கூறிய நிலையில், மத்திய அரசு அதை கொண்டு வருவதற்கான நோக்கம் என்ன? என காங்கிரஸ் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சட்டம் மாநில உரிமைகளை பறிக்கும் என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் கூறியிருக்கிறார்.

    • பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் கடந்த மாதம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடின.
    • எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தயாராகி வருகிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மோடியை வீழ்த்த தயாராகி வருகின்றன.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் கடந்த மாதம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடின.

    இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, சிவசேனா (உத்தவ்தாக்கரே) உள்பட 15 கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வருவது அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் மேலும் கட்சிகளை தங்கள் அணியில் சேர்ப்பது, கூட்டணிக்கு தனியாக செயல்திட்டங்கள் வகுப்பது பற்றி விவாதிக்க இருக்கிறார்கள்.

    எதிர்க்கட்சிகள் கூட்டணியை பலமாக்கி தேர்தலை சந்தித்தால் மோடிக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    இதற்கிடையில் டெல்லியில் பா.ஜனதா பொதுச் செயலாளர்கள் கூட்டம் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

    ஏற்கனவே மாநில வாரியாக பா.ஜனதா உறுதியாக வெற்றிபெறும் தொகுதிகள், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைந்தால், எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு என்பது உள்ளிட்ட தகவல்களை சேகரித்துள்ளார்கள்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 350 தொகுதிகளை இலக்காக வைத்து தேர்தல் பணியாற்ற திட்டமிட்டுள்ளார்கள்.

    ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தேர்தல் களத்தில் நெருக்கடி வரும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூட்டணியை திணறடிக்கும் வகையில் வியூகங்களை அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாகவே பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    பா.ஜனதாவின் முக்கிய அஜன்டா காஷ்மீருக்கு தனி அந்தஸ்தை ரத்து செய்வது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது ஆகியவை தான்.

    இதில் 2 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டது. 3-வது வாக்குறுதி பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதுதான். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கொண்டுவந்து நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    முக்கியமாக இந்த சட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் கூட்டணியையும் திணறடிக்க முடிவு செய்தே தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த ஆயுதத்தை கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    பா.ஜனதாவின் வியூகத்துக்கு கைமேல் பலன் கிடைப்பது போல் இந்த சட்டத்தை ஆதரிக்கப் போவதாக ஆம்ஆத்மியின் கெஜ்ரிவாலும், உத்தவ் தாக்கரேயும் அறிவித்துள்ளார்கள். டெல்லி, மராட்டியத்தில் பெரும் பான்மையினரின் வாக்குகள் முக்கியம் என்பதால் இந்த கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

    இதேபோல் காங்கிரஸ் இருக்கும் அணியில் இடம் பெற போவதில்லை என்பதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவும், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியும் உறுதியாக இருக்கிறார்கள்.

    கேரளாவில் காங்கிரஸ்-கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைக்கப்போவதில்லை. மாநிலம் வாரியாக திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் வெற்றியை அறுவடை செய்ய முடிவு செய்துள்ளன.

    அதேநேரத்தில் மாநில அரசியலுக்கு ஏற்ப எதிர்க் கட்சிகளையும் பிரித்து மோத வைக்க மோடியும் வியூகம் அமைத்துள்ளார்.

    • தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்துவிட்டு பிரதமர் பேச வேண்டும்.
    • வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.

    சென்னை:

    தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்லத் திருமணம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்கள் செ.அஸ்வினி-க.பிரவீன் குமார் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அமைச்சர் காந்தி ஒரு வேண்டுகோள் வைத்தார். அவருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சொல்ல வேண்டி உள்ளது.

    இன்றைக்கு நல்லதைகூட ஜாக்கிரதையாக ஒருமுறைக்கு பலமுறை யோசித்து தான் செய்ய வேண்டி உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த போது கூட உடனுக்குடன் எதையும் செய்து விட முடியும். ஆனால் இப்போது அப்படி அல்ல. நாம் ஆட்சியில் இருப்பதால் ஒவ்வொன்றையும் யோசித்து செய்ய வேண்டி உள்ளது.

    இதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கே கட்சிக்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பவர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தி.மு.க. முப்பெரும் விழாவில் அவருக்கு கலைஞர் விருது வழங்கி கவுரவித்தோம்.

    தலைவர் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுத்தும் தூய தொண்டனாக விளங்குபவர் கும்மிடிப்பூண்டி வேணு.

    ஆனால் பிரதமராக இருக்க கூடிய மோடி 2 நாட்களுக்கு முன்பு தி.மு.க. பற்றி ஒரு உரையாற்றி இருக்கிறார்.

    தி.மு.க. குடும்ப அரசியலை நடத்துகிறது. தி.மு.க. வெற்றி பெற்றால் அவர்களது குடும்பம்தான் வளர்ச்சி அடையும் என்று பேசி இருக்கிறார். ஆமாம் தி.மு.க. ஒரு குடும்பம் தான்.

    இவ்வாறு சொன்னதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால் அவர் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க. குடும்பம் குடும்பமாக அரசியல் நடத்தி வளர்ச்சி அடைந்து வருவதாக பேசி உள்ளார்.

    நாட்டின் பிரதமராக இருக்கும் மோடிக்கு வரலாறு தெரியவில்லை. பேரறிஞர் அண்ணா கட்சி தொடங்கிய போது தம்பி தம்பி என்று தொண்டர்களை அழைப்பார். கலைஞர் பேசும் போது அனைவரையும் உடன்பிறப்பே என்று அழைத்தார்.

    அது அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும் அக்காவாக இருந்தாலும் தங்கையாக இருந்தாலும் அத்தனை பேரையும் உடன்பிறப்பே என்றுதான் அழைப்பார். ஆக இது உள்ளபடியே குடும்ப அரசியல்தான்.

    தி.மு.க. பல்வேறு மாநாடுகளை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி இருக்கிறோம். அப்படி 3, 4 நாள் மாநாடு நடத்தும் போது குடும்பம், குடும்பமாக வாருங்கள் என்றுதான் கலைஞர் அழைப்பார்.

    அதேபோல்தான் தி.மு.க.வினர் குடும்பம் குடும்பமாக கைக்குழந்தையுடன் வருவார்கள். பந்தலில் கைக்குழந்தைகளை தொட்டிலில் ஆட்டுவார்கள். மாநாடு மட்டுமல்ல போராட்டங்களுக்கும் கூட குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்று சிறை செல்வார்கள். இது தி.மு.க.வில் உள்ள வழக்கம்.

    ஆனால் பிரதமர் மோடி பேசும் போது தி.மு.க.வுக்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் வளர்ச்சி அடையும் என்கிறார். ஆம் கருணாநிதி குடும்பம் என்றால் இந்த தமிழ்நாடுதான்-தமிழர்கள்தான்.

    50 ஆண்டு காலமாக திராவிட ஆட்சிதான் தமிழகத்தில் இருந்திருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்துவிட்டு பிரதமர் பேச வேண்டும்.

    இன்று திராவிட மாடல் ஆட்சியாக கலைஞர் வழியில் நின்று ஆட்சி நடத்தி வருகிறோம். இதற்கு முன்பு ஒரு வருடம் மிசாவில் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில் அவர்களை குடும்பத்தினர் சென்று பார்ப்பது வழக்கம்.

    ஆனால் சென்னை சிறையில் அப்போது 2 மாதம் அனுமதியே தரவில்லை. உடனே தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டார். அனுமதி தராவிட்டால் சிறைவாசலில் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார்.

    அதற்கு பிறகுதான் அனுமதி தந்தனர். அப்போது சிறையில் இருந்த எனக்கு தான் முதல் அனுமதி கிடைத்தது. ஆனால் அவர் என்னை உடனே வந்து பார்க்கவில்லை.

    காரணம் என்னை மட்டும் அவர் மகனாக கருதவில்லை. சிறையில் உள்ள அனைவரையும் மகனாக கருதி அனைவரையும் பார்த்து விட்டு என்னை சந்திப்பதாக கூறினார்.

    எனவே தி.மு.க. குடும்பம் என்று பிரதமர் மோடி பொருத்தமாகத்தான் கூறி உள்ளார். இப்போது அவருக்கு ஒரு அச்சம் ஏற்பட்டு உள்ளது.

    கடந்த 23-ந்தேதி பாட்னாவில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி ஒரு தேர்தல் வியூகம் அமைக்க முதற்கட்டமாக முயற்சி எடுத்து அந்த கூட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டார்.

    அதன் பிறகு ஏற்பட்ட அச்சம்தான் பிரதமர் இறங்கி வந்து இப்போது பேசுவதற்கு காரணம்.

    மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்கிறது. அங்கு கடந்த 50 நாட்களாக நடந்து வரும் வன்முறையால் தீப்பற்றி எரிகிறது. 150 பேர் வரை பலியாகி இருப்பார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    ஆனால் இவ்வளவு கலவரம் நடந்தும் இதுவரை பிரதமர் அந்த பக்கமே போகவில்லை. நீண்ட நாளுக்கு பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை உள்துறை மந்திரி அமித்ஷா நடத்தி உள்ளார்.

    இப்போது பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் கூறி வருகிறார். நாட்டில் 2 விதமான சட்டம் இருக்க கூடாது என்று பிரதமர் கூறுகிறார்.

    நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து மத குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். ஆனால் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.

    நான், தமிழக மக்களை கேட்க விரும்புவது நீங்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். அதில் உறுதியாக இருக்க வேண்டும்.

    தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி கொண்டிருக்கும் அரசு எப்படி தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி உருவாக காரணமாக இருந்தீர்களோ அதேபோல் மத்தியில் ஒரு ஆட்சி உருவாக நீங்கள் தயாராக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் காந்தி, கும்மிடிப்பூண்டி கி.வேணு, மாவட்டச் செயலாளர் கோவிந்த் ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

    • பொது சிவில் சட்டத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆதரவை தெரிவித்து உள்ளது.
    • சிவசேனா கட்சியும் பொது சிவில் சட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிரமாக தயாராகி வருகிறது.

    இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த 14-ந்தேதி முதல் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் அவசியம் என்று கூறினார். நாட்டில் இரு விதமான சட்டங்களால் நிர்வாகம் செய்ய இயலாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்பதால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

    இதற்கு நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்று முன்தினம் இரவே காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி தனது எதிர்ப்பை வெளியிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து உள்ளன.

    இதற்கிடையே பொது சிவில் சட்டத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆதரவை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. சந்தீப் பதக் கூறுகையில், ' கொள்கை அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி ஆதரிக்கிறது. என்றாலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.

    சிவசேனா கட்சியும் பொது சிவில் சட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம், தி.மு.க ஆகிய கட்சிகள் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளன. பெரும்பாலான கட்சிகள் இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வருகின்றன.

    பொது சிவில் சட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறி இருப்பதாவது:-

    நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறி இருப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கமாக உள்ளது.

    நாட்டில் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர விரும்பினால் முதலில் அதை இந்து சமுதாயத்திடம் இருந்து தொடங்க வேண்டும். இந்து சமுதாயத்தில் இன்னமும் பல்வேறு மாறுபாடுகள் உள்ளன.

    இந்துக்கள் பல ஊர்களில் கோவில்களில் நுழையும் உரிமை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாமி கும்பிடும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. அவர்கள் பூஜை செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை.

    அனைத்து இந்துக்களும் சாதி மாறுபாடுகளை கடந்து, அனைத்து கோவில்களிலும் பூஜைகள் செய்ய, வழிபாடுகள் நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். முதலில் இந்துக்களிடம் இந்த ஒற்றுமை உருவாகட்டும்.

    இவ்வாறு தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

    பொது சிவில் சட்டம் குறித்து இதுவரை அ.தி.மு.க. தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை. பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க அ.தி.மு.க. தலைவர்களும் தயங்குகிறார்கள். என்றாலும், இந்த விஷயத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கருத்தில் கொண்டு அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இது தொடர்பாக கேட்டபோது, 'பொது சிவில் சட்டம் குறித்து கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய முடிவு எடுப்பார். இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம். எனவே அவர் முடிவை எடுத்து அறிவிப்பார்' என்றார்.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் கடுமையாக எதிர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பொது சிவில் சட்டத்துக்கு அ.தி.மு.க.வும் தனது எதிர்ப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பொது சிவில் சட்டம் என்பது ஒரே மதம், ஒரே மொழி இருக்கும் தேசத்திற்கு மட்டுமே பொருந்தும்.
    • ஆம் ஆத்மி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தற்போது நடைபெற்று முடிந்த கூட்டத்தில் பங்கேற்றனர் அவ்வளவுதான்.

    கும்பகோணம்:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ரெயில் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. மறைமுகமாக பேசிக்கொண்டிருந்த பொது சிவில் சட்டத்தை பிரதமர் மோடி வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். இந்தியாவை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு பொது சிவில் சட்டம் சரியாக வராது. பிரச்சனைகளை தான் உருவாக்கும். பொது சிவில் சட்டம் என்பது ஒரே மதம், ஒரே மொழி இருக்கும் தேசத்திற்கு மட்டுமே பொருந்தும்.

    இந்த தேசத்தில் ஒரே சிவில் சட்டம் கொண்டு வரப் போகிறேன் என்று மோடி கூறுகிறார். அவருடைய தேர்தல் பிரச்சாரம் அது தான். இதை கூறினால் நாட்டில் மக்கள் பல்வேறு விதமாக பிரிந்து செல்வார்கள், சண்டையிட்டுக் கொள்வார்கள். அதுதான் அவர்களுக்கு தேவை.

    மணிப்பூரில் மலைவாழ் மக்களுக்கும், நகரத்தில் வாழும் மக்களுக்கும் பிரச்சனையை தோற்றுவித்து, கடந்த ஆறு மாத காலமாக அந்த மாநிலம் தீப்பற்றி எரிகிறது. தற்போது வலிமையான ராணுவம் உள்ள நிலையில் மோடி நினைத்திருந்தால் 24 மணி நேரத்தில் கலவரத்தை அடக்கி இருக்க முடியும். ஆனால் அந்த கலவரத்தை உருவாக்கியவர்களே அவர்கள் தான்.

    ஆம் ஆத்மி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தற்போது நடைபெற்று முடிந்த கூட்டத்தில் பங்கேற்றனர் அவ்வளவுதான். கூட்டணி என்பது பல்வேறு கருத்துக்களை உடையவர்கள் சேர்வது தான். அவர்கள் இன்னும் கூட்டணியில் உறுதியாக வரவில்லை .

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×