search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPSC"

    • குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
    • குரூப் 2 தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிப்பு.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவு வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.

    5446 பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடந்த மெயின் தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவிப்பு

    குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், குரூப் 2 தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்த வேண்டிய சூழல், மிச்சாங் புயலால் விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

     

    • குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு பணியிடங்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
    • 15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி நிரப்பி வருகிறது.

    குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

    இதற்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது. 30 வகையான போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

    • தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்.
    • பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2534 தொடக்க நிலை பணிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல், நகராட்சி நிர்வாகத்துறை மூலமாக நேரடியாக தேந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

    எந்த நோக்கத்திற்காக உள்ளாட்சிகள், பொதுத் துறை அமைப்புகளின் பணியாளர்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதோ, அதற்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும். அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிகளில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், அப்பணிகளுக்கான ஆள்தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு, தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்.

    அதன்படி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு 2534 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகவே நடத்த வேண்டும். இந்த பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தகுதியான வேறு ஒருவரை தேர்வு செய்யும் படி, கவர்னர் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • கவர்னரின் முடிவு குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும் நிராகரித்து உள்ளார். வேறு நபரை பரிந்துரைக்கும்படியும் வலியுறுத்தி உள்ளார்.

    தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூனில் ஓய்வுபெற்றார். அதன்பின், உறுப்பினராக உள்ள முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார்.

    தமிழக டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு, இந்தாண்டு ஜூனில் பணி ஓய்வுபெற்றார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக அவரை நியமனம் செய்வதற்கான பரிந்துரையை, கவர்னர் ரவிக்கு தமிழக அரசு ஜூலை மாதம் அனுப்பியது.

    டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வில், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டதா; தலைவர் தேர்வு எந்த முறையில் நடத்தப்பட்டது என பல்வேறு விளக்கங்களை கேட்டு, பரிந்துரை கடிதத்தை கவர்னர் ரவி, ஆகஸ்டில் திருப்பி அனுப்பினார்.

    இந்த கேள்விகளுக்கு, தமிழக அரசு வாயிலாக விரிவான விளக்கம் அளித்து, மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், சைலேந்திர பாபுவை நியமிக்க வேண்டும் என்ற அரசின் பரிந்துரையை ஏற்காமல், கவர்னர் ரவி நிராகரித்துள்ளார்.

    டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு முறையில் வெளிப்படை தன்மை இல்லை. இந்த பதவியில், 62 வயது வரை உள்ளவர்களை மட்டுமே நியமிக்க முடியும்.

    சைலேந்திரபாபுவை நியமித்தாலும், 6 மாதங்கள் தான் பணியில் இருப்பார். எனவே, தகுதியான வேறு ஒருவரை தேர்வு செய்யும் படி, கவர்னர் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக சிவகுமார் என்பவரை நியமிக்க, தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையையும், கவர்னர் நிராகரித்து உள்ளார்.

    இந்த விவகாரத்தில், தமிழக அரசு மீண்டும் சைலேந்திர பாபுவை பரிந்துரைக்குமா அல்லது வேறு ஒரு நபரை பரிந்துரைக்குமா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

    கவர்னரின் இந்த முடிவு குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்(டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக நேர்மையாளரான முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது.

    சைலேந்திரபாபுவுக்கு அந்தத் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவி நிராகரித்து இருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வாதிகார முடிவு ஆகும்.

    தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக கவர்னருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.
    • தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அவருக்கு பின், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் முனியநாதன் பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாததால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு, தேர்வு முடிவுகள் உள்ளிட்டவைகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவையும், உறுப்பினர்களாக தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து, அதற்கான பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைத்தது.

    இதற்கு பதில் அளித்த ஆளுநர் மாளிகை, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டதா? தலைவர் தேர்வு எந்த முறையில் நடைபெற்றது, உறுப்பினர்கள் தேர்வில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன? என்பது போன்ற விளக்கங்கள் கேட்டு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டதை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • கோப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார் கவர்னர் ஆர்.என். ரவி.
    • கவர்னர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பதவி மற்றும் 8 உறுப்பினர்களின் பதவிகள் பல மாதங்களாக காலியாக உள்ளன.

    இதில் தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு கோப்புகளை அனுப்பி வைத்தது. ஆனால் இதற்கு ஒப்புதல் வழங்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார்.

    இந்த நியமனம் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறி அதை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டார். அந்த கோப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார்.

    கவர்னர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, மீண்டும் அதே பரிந்துரையை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளது.

    • தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும்.
    • கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வருகின்றனர்.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாரதியாரின் கனவு இப்போது நனவாகி உள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்து உள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை.

    உலக நாடுகள் இந்தியாவை கிண்டல் செய்து வந்த நிலையில், தனித்துவமான நாடாக இந்தியா தற்போது உருவாகி உள்ளது.

    இஸ்ரோ விண்வெளி நிறுவனத்துக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது. நாகப்பட்டினம் வரவேண்டிய விண்கல ஏவுதளம், தி.மு.க. அமைச்சர் முயற்சி செய்யாததால் ஹரிகோட்டாவிற்கு சென்றது.

    2-வது விண்கல ஏவுதளத்தை குலசேகர பட்டிணத்தில் அமைக்க வேண்டிய கடமை தி.மு.க. அரசிற்கு உள்ளது.

    தமிழகத்தில் பா.ஜ.க.வின் நடைபயணம் குறித்து பொன்முடி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். அவர்கள் ஏ.சி. அறையில் இருந்து அரசியல் செய்கிறார்கள்.

    23 நாளில் 128 கி.மீ. தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம். 234 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும் முதல் கட்சியாக பா.ஜ.க தான் இருக்கும்.

    தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

    பா.ஜ.க. நடை பயணத்தால் அரசியல் புரட்சி ஏற்பட்டு உள்ளது. எனக்கு நடைபயணத்தின் போது பகவத் கீதையை விட 21 பைபிள், 7 குர்ஆன் புத்தகங்கள் அன்பளிப்பாக வந்தன. அவை தற்போது என் பூஜை அறையில் உள்ளது.

    பா.ஜ.க.வை இந்துத்துவா கட்சி என எத்தனை நாளுக்கு சொல்ல முடியும்? பா.ஜ.க. மீதான பிம்பம் உடைந்து தற்போது அனைவருக்காகவும் உழைக்கும் கட்சியாக உள்ளது.நடைபயணத்தின்போது இஸ்லாமியர், கிறிஸ்துவர்களும் என்னுடன் நடந்து வந்தனர்.

    நீட் மசோதாவில் கவர்னரின் பங்களிப்பு எதுவும் இல்லை. ஜனாதிபதி தான் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும். கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வருகின்றனர்.

    ஆளுநர் தி.மு.க.வின் சவாலை ஏற்று, சொந்த மாநிலமான பீகாருக்கு வரச்சொன்னால் என்ன செய்யலாம்? வாய் உள்ளது என தி.மு.க.வினர் எல்லாவற்றையும் பேசக்கூடாது.

    கவர்னரை சம்மந்தம் இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கவர்னரிடம் அதிகாரம் உள்ளது.

    கவர்னருக்கும், அரசுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து பதில் சொல்ல தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு என்ன உரிமை உள்ளது?.

    காவிரி பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் தான் காரணம். அதனை இவர் தற்போது இடியாப்ப சிக்கலாக்கி ரசித்து வருகிறார்.

    அனைவருக்கும் சாதி அடையாளம் கொடுப்பது அருவருக்கத்தக்க செயல். ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவது தி.மு.க.வின் முதல் கடமையாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதுவும் நடக்காது. காவல்துறைக்கு தான் சிரமம்.

    அ.தி.மு.க மாநாடு அந்த கட்சிக்கு முக்கியமானது.மாநாடு என்றால் ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
    • தமிழக அரசு அனுப்பி வைத்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாத கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த கோப்பில் கையெழுத்திடாமல் கடந்த 1 மாதமாக கிடப்பில் வைத்திருந்தார்.

    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டின் அரசுத் துறைகளுக்கு தேவையான ஊழியர்களை போட்டி தேர்வு நடத்தி நியமனம் செய்து வருகிறது.

    இந்த தேர்வாணையம் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும்.

    அரசு அலுவலகங்களில் உள்ள ஒவ்வொரு பணிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்களை தேர்வு செய்வது டி.என்.பி.எஸ்.சி.யின் முக்கிய பணியாகும். இந்த அமைப்புக்கு தலைவர் பதவி நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது.

    மிக முக்கியத்துவம் வாய்ந்த டி.என்.பி.எஸ்.சி. யில் 4 உறுப்பினர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் (ஐ.ஏ.எஸ். ஓய்வு) டி.என்.பி.எஸ்.சி. பொறுப்பு தலைவராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

    இதையொட்டி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரையும், 8 உறுப்பினர் பதவிகளுக்கு தகுதியான நபர்களின் பெயர்களையும் தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு கோப்புகளை அனுப்பியது.

    தமிழக அரசு அனுப்பி வைத்த இந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாத கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த கோப்பில் கையெழுத்திடாமல் கடந்த 1 மாதமாக கிடப்பில் வைத்திருந்தார்.

    இப்போது சைலேந்திர பாபு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கோப்பை திருப்பி அனுப்பி இருக்கிறார்.

    டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும், பிரகாஷ் சிங் என்பவரது வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வழிகாட்டுதல்களின் படி இந்த நியமனம் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    டி.ஜி.பி.யாக இருந்தபோது சைலேந்திர பாபு ஓய்வுபெற்ற தேதியை பொருட்படுத்தாமல் டி.ஜி.பி.யாக 2 ஆண்டுகள் பதவி வகித்ததால் கடந்த ஜூன் 30-ந்தேதி தனது 61-வது வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    ஆனால் இப்போது நியமிக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி காலம் 6 ஆண்டுகள் என்றாலும், அதிகபட்ச வயது வரம்பு 62 ஆகும்.

    இதை சுட்டிக்காட்டி உளள கவர்னர் ஆர்.என்.ரவி, சைலேந்திரபாபு நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தனக்கு முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இந்த நியமனம் தொடர்பாக அறிவிப்புகள் வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? என்றும் அரசுக்கு கவர்னர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்த நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். எனவே இது தொடர்பான விவரங்களை விளக்கமாக தமக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த பதவிகளுக்கான நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் எவ்வாறு இறுதி செய்யப்பட்டனர் என்பதையும் விளக்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த விவகாரம் அரசுக்கும், கவர்னருக்கும் மீண்டும் மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.

    கவர்னர் குறிப்பிட்டுள்ள விளக்கங்களுக்கு தமிழக அரசு விரிவாக பதில் தயாரித்து வருவதாகவும். விரைவில் அந்த கோப்பு முழு விளக்கங்களுடன் கவர்னருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு இணைய வழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டு கட்டுப்பாட்டு சட்டம் 2022-ன் கீழ் அமைக்கப்பட்ட தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களின் நியமனத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
    • கவர்னர் ஆர்.என்.ரவி கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் உள்பட 10 உறுப்பினர் பதவிகளுக்கும் தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு அனுப்பியது.

    தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார்.

    பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியமாகும்.

    கவர்னர் ஆர்.என்.ரவி கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழகத்தில் குரூப் 1 முதன்மைத் தேர்வு நாளை முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.

    சென்னை:

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இதற்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

    இந்நிலையில், முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் 10-ம் தேதி (நாளை) தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    • டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் பங்கேற்றனர்.
    • தேர்வில் வெற்றி பெற்றாலும் நேர்முகத்தேர்வில் 3:1 என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

    கம்பம்:

    கால்நடை பராமரிப்புத்துறையில் கடந்த 2012-ம் ஆண்டு 747 கால்நடை டாக்டர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். 12 ஆண்டுகளாக பணியாற்றிய இவர்களில் 294 பேர் பணியை நிரந்தரம் செய்யாததால் ராஜினாமா செய்துவிட்டனர்.

    மற்ற 454 டாக்டர்கள் தமிழகம் முழுவதும் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தற்காலிகமாக பணியாற்றி வரும் 454 டாக்டர்கள் பணியிடங்களையும் காலி இடங்களாக அறிவித்தது. இதனால் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கால்நடை டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியபோது டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதுமாறும், 454 பேர்களுக்கும் கருணை அடிப்படையில் 50 மதிப்பெ ண்கள் வழங்கப்படும் என கால்நடைத்துறை இயக்குனரகம் தெரிவித்தது.

    இதை கண்டித்து கால்நடை டாக்டர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். பின்னர் வேறு வழியின்றி டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் பங்கேற்றனர்.

    இதில் தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 13 டாக்டர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் மற்ற மாவட்டங்களில் பலர் தமிழ் தேர்வில்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த தேர்வில் வெற்றி பெ ற்றாலும் நேர்முகத்தேர்வில் 3:1 என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

    அதில் தங்களுக்கு பணியிடம் நிரந்தரமாக்கப்படுமா? என கால்நடை டாக்டர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

    • பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும்
    • பயிற்சியில் சேரும் ஆண்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    குரூப்-4 தேர்வு

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 தேர்வை நடத்துகிறது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படும்.

    10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் (ஓ.சி.) 18 வயது முதல் 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினர் 18 முதல் 42 வயது வரையிலும் எழுதலாம். பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு முடித்த அனைத்து பிரிவினரும் இந்த தேர்வை 60 வயது வரையிலும் எழுதலாம்.

    பயிற்சி வகுப்புகள்

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 எழுத்து தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள், திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி வரை நேரடியாக நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். பயிற்சியின்போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். அனுபவமிக்க வல்லுனர்களால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதில் சேர பயிற்சி கட்டணம் ரூ.7,000 ஆகும். பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகும்.

    விடுதிகள்

    பயிற்சியில் சேரும் ஆண்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. விடுதியில் தங்கிப்படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.7,700 பயிற்சி வகுப்பின் முதல் நாளன்று நேரில் செலுத்த வேண்டும்.

    பயிற்சி வகுப்பில் சேர விரும்புகிறவர்கள் ரூ.7,000-க்கான வங்கி வரைவோலையை (கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி) 'சிவந்தி அகாடமி, திருச்செந்தூர்' என்ற பெயரில் எடுத்து, 'சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம்' என்ற முகவரிக்கு தங்களின் புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களுடன் அனுப்ப வேண்டும்.

    அல்லது சிவந்தி அகாடமி இணையதளத்தின் (https://sivanthiacademy.org/) மூலமாக பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம். அதன் பின்னர் பெயர் பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ரூ.7,000-க்கான ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் sa@aei.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.

    இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரான்சிஸ் ரெஜீலா தெரிவித்துள்ளார்.

    ×