search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Main Exam"

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முதன்மைத்தேர்வு- திருப்பூரில் 26-ந் தேதி நடக்கிறது.
    • தேர்வு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாக தேர்வுக்கு அறிக்கை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையில் நிலைய அலுவலர் பணிக்கான முதன்மை தேர்வு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் காந்திநகர் அங்கேரிப்பாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குமார் நகர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

    தமிழ்மொழித்தேர்வு மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்வு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாக தேர்வுக்கு அறிக்கை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் குரூப் 1 முதன்மைத் தேர்வு நாளை முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.

    சென்னை:

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இதற்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

    இந்நிலையில், முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் 10-ம் தேதி (நாளை) தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    ×