search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதிய தேனி மாவட்ட கால்நடை டாக்டர்கள் 13 பேரும் தேர்ச்சி
    X

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதிய தேனி மாவட்ட கால்நடை டாக்டர்கள் 13 பேரும் தேர்ச்சி

    • டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் பங்கேற்றனர்.
    • தேர்வில் வெற்றி பெற்றாலும் நேர்முகத்தேர்வில் 3:1 என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

    கம்பம்:

    கால்நடை பராமரிப்புத்துறையில் கடந்த 2012-ம் ஆண்டு 747 கால்நடை டாக்டர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். 12 ஆண்டுகளாக பணியாற்றிய இவர்களில் 294 பேர் பணியை நிரந்தரம் செய்யாததால் ராஜினாமா செய்துவிட்டனர்.

    மற்ற 454 டாக்டர்கள் தமிழகம் முழுவதும் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தற்காலிகமாக பணியாற்றி வரும் 454 டாக்டர்கள் பணியிடங்களையும் காலி இடங்களாக அறிவித்தது. இதனால் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கால்நடை டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியபோது டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதுமாறும், 454 பேர்களுக்கும் கருணை அடிப்படையில் 50 மதிப்பெ ண்கள் வழங்கப்படும் என கால்நடைத்துறை இயக்குனரகம் தெரிவித்தது.

    இதை கண்டித்து கால்நடை டாக்டர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். பின்னர் வேறு வழியின்றி டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் பங்கேற்றனர்.

    இதில் தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 13 டாக்டர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் மற்ற மாவட்டங்களில் பலர் தமிழ் தேர்வில்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த தேர்வில் வெற்றி பெ ற்றாலும் நேர்முகத்தேர்வில் 3:1 என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

    அதில் தங்களுக்கு பணியிடம் நிரந்தரமாக்கப்படுமா? என கால்நடை டாக்டர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

    Next Story
    ×