என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை: கவர்னர் நிறுத்தி வைப்பு
- டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
- கவர்னர் ஆர்.என்.ரவி கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் உள்பட 10 உறுப்பினர் பதவிகளுக்கும் தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு அனுப்பியது.
தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார்.
பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியமாகும்.
கவர்னர் ஆர்.என்.ரவி கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
Next Story






