search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur"

    திருவள்ளூரில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் கே.ஜி.பி. நகரில் வசிப்பவர் வர்மா. ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை பொறியாளர். இவர் கடந்த 28-ந் தேதி உடல் நிலை சரியில்லாத மனைவியை சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க சென்று இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த வைரக்கற்கள் பதிக்கபப்ட்ட 60 பவுன் நகை மற்றும் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ரூ. 3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். துணை போலீஸ் சூப்பிரண்டு கங்கா தரன் தலைமையில் தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    பழைய குற்றவாளிகள் குறித்த விவரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையில் ஈடுபட்டது பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சென்னை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிந்தது.

    அவர்கள் 2 பேரையும் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி வேல் ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரையும் போலீசார் திருவள்ளூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருத்தணி அருகே கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம் அடைந்து மாமனாரை உயிரோடு எரித்துக்கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள நெமிலிகாலனி ராஜாத்தி தெருவை சேர்ந்தவர் சபாபதி (வயது 68). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன் (38). இவருக்கும், சென்னை மாதவரத்தை சேர்ந்த சுப்பிரமணி - கலைவாணி தம்பதியின் மகள் காயத்திரி (34) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்குமுன்பு பிரபாகரன் விபத்துக்குள்ளானார். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட குடும்பத்தகராறில் காயத்திரி கணவரை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் பிரபாகரனுக்கு அவரது தந்தை சபாபதி, கடந்த சில மாதங்களுக்குமுன்பு வேறு ஒரு பெண்ணுடன் 2-வது திருமணம் செய்து வைத்தார். இதனை அறிந்த காயத்திரி தன் தாய் கலைவாணியுடன் நெமிலிக்கு வந்து அங்கேயே குடிசை அமைத்து தங்கினார். பின்னர் கணவர் மற்றும் மாமனாருடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் சபாபதி தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அவர் மீது தீப்பிடித்து எரிந்தது. தீயில் கருகிய சபாபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சபாபதி போலீசார் மற்றும் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தபோது மருமகள் காயத்திரியும், அவரது தாயார் கலைவாணியும் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்கள்’ என்று தெரிவித்தார். பின்னர் அவர் இறந்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் திருத்தணி துணை சூப்பிரண்டு சேகர் தலைமையில் கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து காயத்திரி மற்றும் அவரது தாயார் கலைவாணி ஆகியோரை கைது செய்து திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனாரை பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவள்ளூர் அருகே 2 பேரை கத்தியால் வெட்டி பணம்- செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது நண்பர் சதீஷ் , இரண்டு பேரும் தனியார் கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    இருவரும் பெரியகுப்பம் கற்குழாய் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் அவர்களை கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றனர். பணத்தைத் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மாரிமுத்து, சதீசை கத்தியால் வெட்டி 2 சவரன் நகை, ரூபாய் 13,000, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    காயம்அடைந்த இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளூரில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் 60 பவுன் நகை- ரூ.3 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் கேஜிபி நகரை சேர்ந்தவர் வர்மா (65). ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை என்ஜினீயர். இவரது மனைவி சவுதா. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நேற்று மனைவியை பார்க்க வர்மா வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி பீரோவில் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த ரூ.3 லட்சம் பணம், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட கம்மல், வளையல் உள்ளிட்ட 60 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் அருகே போலி பெண் டாக்டரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தில் அமுதா (வயது 48) என்பவர் கிளினிக் திறந்து கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்ப்பதாக கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கிளினிக்குக்கு சென்று அமுதாவிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    திருவள்ளூர்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

    ரொக்கமாக பணம் கொண்டு செல்வதற்கு தேர்தல் கமி‌ஷன் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்- பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த காவல்சேரி அருகே அரக்கோணம் தாசில்தார் முருகானந்தம் தலைமையிலான பறக்கும் படையிளர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 70 இருந்தது. காரில் இருந்த செங்கல்பட்டை அடுத்த கொம்மனாஞ்சேரியை சேர்ந்த கண்ணனிடம் விசாரித்தபோது பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை.

    இதையடுத்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 70-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணம் சமர்ப்பித்து பணத்தைப்பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்ற 3 பெண்களிடம் சோதனை நடத்தினர். அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் லட்சுமி, வனிதா, கன்னியம்மாள் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூரில் மினிலாரியில் 2 டன் ரேசன் அரிசி கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் ரேசன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி திருவள்ளூர் மாவட்டம் வழியாக ஆந்திராவுக்கு பஸ், ரெயில் மற்றும் வாகனங்கள் மூலம் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி ரேசன் அரிசி கடத்தல் கும்பலை கைது செய்து வருகின்றனர். எனினும் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளிலிருந்து பெறப்பட்ட அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கவரப்பேட்டை வழியாக ஆந்திரா நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது.

    இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சிரஞ்சீவி, மணி, தடா பகுதியை சேர்ந்த மதன் அனுப்பப்பட்டு பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 70-வது குடியரசு தினவிழாவில் கலெக்டர் பொன்னையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினர் மரியாதையினை ஏற்றுக்கொண்டார். #RepublicDay
    திருவள்ளூர்:

    திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற 70-வது குடியரசு தினவிழாவில் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன்களை பறக்கவிட்டு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 115 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

    மேலும் விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 34 போலீசாருக்கும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்ரெண்ட் பொன்னி மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் லோகநாயகி, மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் குமார், சுகாதார துறை இணை இயக்குனர் தயாளன்,முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரன், கூடுதல் போலீஸ் சூப்ரெண்ட் சிலம்பரசன், சப்-கலெக்டர் ரத்தினா, திருவள்ளூர் துணை சூப்ரெண்ட் கங்காதரன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியரசு விழா நடைபெற்றது. தேசியக்கொடியை கலெக்டர் பொன்னையா ஏற்றி வைத்து காவல் துறையினர் மரியாதையினை ஏற்றுக்கொண்டார், பின்னர் ஊர்க் காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், சாரண சாரணியர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். பின்னர் உலக அமைதியை குறிக்கும் வகையினில் புறாக்களையும் தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார்.

    பின்னர் முன்னாள் படை வீரர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு திருமண மானிய உதவித் தொகை, விலையில்லா மூன்று சக்கர மற்றும் சக்கர நாற்காலிகள், சலவைப் பெட்டிகள், எம்ப்ராய்டிங் தையல் மிஷின்கள், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் மாவட்ட அளவில் நெல் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் என 35 லட்சத்து 16 ஆயிரத்து 284 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 159 பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப்-கலெக்டர் சரவணன், தாசில்தார் காஞ்சனமாலா, மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். #RepublicDay

    திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 6,861 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #JactoGeo

    திருவள்ளூர்:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்றைக்குள் அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1322 பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களில் பணிக்குவராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடக்கக் பள்ளி ஆசிரியர்கள் 4328 பேருக்கும் இடைநிலை பள்ளி ஆசிரியர்கள் 2533 பேருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார். இதே போல் மாவட்டம் முழுவதும்அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறித்த விவரத்தை மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

    இன்று முதல் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வும் நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.

    ஜாக்டோ - ஜியோ சார்பில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று 4-வது நாளாக திருவள்ளூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் கதிரவன், சவுத்ரி, இளங்கோவன், ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் கடையை மூடிச் சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை டாஸ்மாக் கடையின் சுவரில் பெரிய துளைபோடப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மதுக்கடையில் விற்பனை பணத்தை நேற்று ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டதால் அவை தப்பியது.

    பணம் இல்லாததால் கடையில் இருந்த சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம கும்பல் சுருட்டி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அடிக்கடி நடந்து வந்தது. இது குறித்து திருவள்ளூர் டவுண் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் டோல் கேட் அருகே டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கேடசன் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகிக்குமாரி, ராஜேந்திரன் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி விசாரித்த அவர்கள் கடம்பத்தூரை சேர்ந்த பாபு (30), சுகுமார்(34) என்பதும் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரிந்தது.

    அவர்கள் கொடுத்த தகவலின்படி 5 திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் ஆகும்.

    கைதான இருவரும் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து திருவள்ளூர் சிறையில் அடைத்தனர்.

    ×