search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் மினிலாரியில் 2 டன் ரேசன் அரிசி கடத்தல் - 4 பேர் கைது
    X

    திருவள்ளூரில் மினிலாரியில் 2 டன் ரேசன் அரிசி கடத்தல் - 4 பேர் கைது

    திருவள்ளூரில் மினிலாரியில் 2 டன் ரேசன் அரிசி கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் ரேசன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி திருவள்ளூர் மாவட்டம் வழியாக ஆந்திராவுக்கு பஸ், ரெயில் மற்றும் வாகனங்கள் மூலம் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி ரேசன் அரிசி கடத்தல் கும்பலை கைது செய்து வருகின்றனர். எனினும் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளிலிருந்து பெறப்பட்ட அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கவரப்பேட்டை வழியாக ஆந்திரா நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது.

    இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சிரஞ்சீவி, மணி, தடா பகுதியை சேர்ந்த மதன் அனுப்பப்பட்டு பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×