search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல்"

    • மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது.
    • கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.

    அதேபோல் மானாம்பேட்டை சோதனை சாவடியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.

    அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

    இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மானம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது 49), திருச்செங்காட்டங்குடி தெற்கு தெருவை சேர்ந்த தியாகராஜன் (வயது 32) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் திருவாரூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 26-ந் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
    • கிருஷ்ணராஜ் (26)என்பவர் ஆசைவார்த்தை கூறி அனிதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகள் அனிதா (வயது 17). இவர் பண்ருட்டி தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர். வழக்கம்போல கடந்த 26-ந் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து காடாம்புலி யூர் போலீஸ் நிலையத்தில் அனிதாவின் தந்தை அருள் புகார் செய்தார்.

    அதில் பணிக்கன்குப் பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வரும் குறிஞ்சிப்பாடி புலியூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் கிருஷ்ணராஜ் (26)என்பவர் ஆசைவார்த்தை கூறி அனிதாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி கல்லூரி மாணவி அனிதாவை தேடி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சோதனை நடத்தினர்.
    • 32 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சோதனை நடத்தினர்.

    அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 பேரின் பைகளை சோதனை செய்தனர். அதில் 32 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கஞ்சா கடத்தி வந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மூர்த்தி (32), லிங்கேஷ் (28), சந்தானம் (30) என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ரெயில் மூலம் வேலூருக்கு கஞ்சா கடத்தி வந்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து சேலம் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்தி செல்ல இருந்தபோது போலீசில் சிக்கியதும் தெரியவந்துள்ளது. போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீதமுள்ள ரூ.4 லட்சத்தை கவியரசன் திருப்பி கேட்டுள்ளார்.
    • போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசன், தொழில் அதிபர் இவர் தனது நண்பர் தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் என்பவர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த பாலகுமாரன் என்பவரிடம் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    மேலும் ரூ.4 லட்சத்தை கவியரசன் திருப்பி கொடுத்துள்ளார். மீதி தொகையை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

    இந்நிலையில் ஸ்டீபன் செல்வகுமார் தொலைபேசி மூலம் கவியரசனை தஞ்சாவூருக்கு அழைத்துள்ளார்.

    தஞ்சாவூருக்கு சென்ற கவியரசனை பைனான்சியர் பாலகுமாரன் உள்ளிட்டோர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கவியரசனின் மனைவி அனுசியா தேவிக்கு போன் மூலம் வாங்கிய கடன் தொகையை கொடுத்துவிட்டு மீட்டுச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அனுசியா தேவி இது குறித்து திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பைனான்சியர் பாலகுமாரன், அவரது சகோதரர் பாலமுருகன், புதுக்கோட்டை அத்திவெட்டியைச் சேர்ந்த புகழேந்தி, மணிகண்டன், தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் ஆகியோர் தஞ்சாவூர் சென்று கவியரசனை கடத்திச் சென்று புதுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி அய்யனார் கோவில் அருகே அடைத்து வைத்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய புகழேந்தி மற்றும் ஸ்டீபன் செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் தலைம றைவான பைனான்சியர் பாலகுமாரன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முனியப்பன் தனது கூட்டாளிகளுடன் ஆயுதங்களுடன் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்த முயற்சி செய்தனர்.
    • தப்பியோடிய முக்கிய குற்றவாளியான முனியப்பனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே திருக்கனூரை அடுத்துள்ள லிங்காரெட்டி பாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், தமிழக பகுதியான கரசானூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஒரு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. அவர்கள் லிங்கா ரெட்டிபாளையத்தில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த இளம்பெண்ணை, புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முனியப்பன் என்ற தினேஷ் என்பவர் ஒருதலையாய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    திருமணத்திற்கு பிறகும் அந்த இளம்பெண்ணை தன்னுடன் வந்து விடுமாறு முனியப்பன் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்து தனது கணவருடன் தான் வாழ்வேன் என உறுதிபட கூறியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் தனது நண்பர்களான லாஸ்பேட்டையை சேர்ந்த இளஞ்செழியன், அதே பகுதியை சேர்ந்த இளவரசன், ராகுல், அசோக், அய்யப்பன் ஆகியோரை சேர்த்துக்கொண்டு ஆயுதங்களுடன் நேற்று இரவு 7 மணி அளவில் லிங்கா ரெட்டிபாளையம் வந்தார்.

    பின்னர் முனியப்பன் தனது கூட்டாளிகளுடன் ஆயுதங்களுடன் வீடு புகுந்து அந்த இளம்பெண்ணை கடத்த முயற்சி செய்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் காட்டேரிக்குப்பம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையே அந்த இந்த கார் காட்டேரிக்குப்பம் வழியாக சென்ற போது போலீசாரும், பொதுமக்களுடன் இணைந்து காரை வழிமறித்தனர். அப்போது முனியப்பன் தப்பியோடி விட்டார்.

    மேலும் காரில் இருந்து இளஞ்செழியன் உள்பட 5 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 4 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான முனியப்பனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ஆயுதங்களுடன் வீடு புகுந்து புதுப்பெண்ணை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காரை நிறுத்தி சோதனை செய்தபோது பெட்டி,பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன.
    • பள்ளங்குப்பம் பகுதியை சேர்ந்த சிவசங்கர்(38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    செங்கல்பட்டு:

    பாண்டிச்சேரியில் இருந்து செங்கல்பட்டு பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புதுப்பட்டு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது காரை நிறுத்தி சோதனை செய்தபோது பெட்டி,பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து காரில் மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட செய்யூர் அருகே உள்ள பள்ளங்குப்பம் பகுதியை சேர்ந்த சிவசங்கர்(38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 3 ஆயிரம் மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நடப்பு ஆண்டில் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ்கு மார் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    அரசு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு த்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, கொரக்கவாடி, ராமநத்தம், தொழுதூர், வேப்பூர் தாலுக்கா பகுதி களில் நடப்பு ஆண்டில் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 16 வாகனங்கள், 3 மோட்டார் சைக்கிள், ஒரு 3 சக்கர வாகனம் என மொத்தம் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 87 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு சம்பந்தமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணி க்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் முறைகேடுகள் சம்பந்தமாக பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 1800 5995 950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். இத்தகவலை கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ்கு மார் தெரிவித்துள்ளார்.

    • திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 2.15 கிலோ தங்கம் பறிமுதல்
    • சுங்கத்துறையினரின் தொடரும் அதிரடி வேட்டை

    கே.கே. நகர்,

    திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு இண்டிகோ, மலிந்தோ, ஸ்ரீலங்கன், ஏர் ஏசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர்கதையாகி வருகிறது.

    நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில், வந்த, சென்னையைச் சேர்ந்த சாதிக் அலி(வயது 40), அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் காலணியில் மறைத்து எடுத்து வந்த ரூ.1.08 கோடி மதிப்பிலான 1.872 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

    இதேபோன்று கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்து வந்த, புதுக்கோட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன்(வயது 37) என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 61.21 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களில் மட்டும், திருச்சி விமான நிலையத்தில் 2.15 கிலோ கடத்தல் தங்கம், வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

    • சீனிவாசன், தனது நண்பர்கள் உதவியுடன் கதிரவனை கடத்த திட்டமிட்டுள்ளார்.
    • அனுப்பர்பாளையம் போலீசார் அவினாசிக்கு விரைந்து சென்று கதிரவனை மீட்டு, அவரை கடத்திய 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 41). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர், சீனிவாசன் என்பவரிடம் மொத்தமாக அரிசி கொள்முதல் செய்து வியாபாரமும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அரிசி வியாபாரம் செய்த வகையில் பணம் ரூ.17 லட்சத்தை கதிரவன் பல நாட்களாக சீனிவாசனுக்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சீனிவாசன், தனது நண்பர்கள் உதவியுடன் கதிரவனை கடத்த திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 4-ந்தேதி இரவு கதிரவன், திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகர் அருகே உள்ள ஈ.பி.காலனி விநாயகர் கோவில்பக்கம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் காத்திருந்த கடத்தல் கும்பல் கதிரவனை மடக்கி பிடித்து காரில் ஏற்றி கடத்தி சென்றதாக தெரிகிறது. அப்போது காரில் செல்லும் போது சத்தமிட்டால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று கதிரவனை மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள் கதிரவனை உடுமலை செல்லும் வழியில் ஜல்லிப்பட்டி என்ற ஊரில் ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.

    இந்நிலையில் கடத்தல் கும்பலிடம், கதிரவன் எனக்கு அவினாசியை சேர்ந்த ஒருவர் பணம் தருவதாக கூறி உள்ளார். அவரிடம் சென்றால் பணம் வாங்கி கொள்ளலாம் என்று கூறி உள்ளார். இதனை அப்படியே நம்பிய கடத்தல் கும்பல், கதிரவனை அவினாசிக்கு அழைத்து செல்ல முடிவு செய்து, அதன்படி அவினாசி வந்தனர். அங்கு ஒரு டீக்கடையில் அமர்ந்து இருக்கும்போது ஒரு போலீஸ்காரர் டீக்கடைக்கு வந்துள்ளார். உடனே கதிரவன், அவரிடம் தன்னை ஒரு கடத்தல் கும்பல் கடத்தி வந்ததாகவும், தன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றுமாறும் கேட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த போலீஸ்காரர் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரையும் அங்கேயே மடக்கி பிடித்தார். தொடர்ந்து அவினாசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவம் நடந்தது காந்திநகர் என்பதால் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்படி அனுப்பர்பாளையம் போலீசார் அவினாசிக்கு விரைந்து சென்று கதிரவனை மீட்டு, அவரை கடத்திய 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் ( 41) , பிரவீன் ( 26), சதீஸ் ( 24) என தெரியவந்தது. இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் சீனிவாசன் உள்ளிட்ட கடத்தல் கும்பலை, போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது.
    • துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    அபுஜா:

    நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதனையடுத்து துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஒரு கிலோ திமிங்கல உமிழ்நீர் ரூ.1 கோடியாகும். இதன் மொத்த மதிப்பு ரூ.36 கோடி ஆகும்
    • தமிழ்நாட்டில் இதற்கான தனி கடத்தல் கும்பலிடம் கைமாற வந்தபோது பிடிபட்டது.

    குழித்துறை, செப்.30-

    கேரளாவை சேர்ந்த ஒரு கும்பல் திமிங்கலம் உமிழ்நீரை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில், கும்பல் ஒன்றிக்கு விற்பனை செய்ய வந்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீஸ் குழுவினர் கடந்த ஒரு வாரமாக மார்த்தாண்டம் பகுதியில் ரகசியமாக முகாமிட்டு ரகசிய சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று பிற்பகல் மார்த்தாண்டம் விரிகோடு செல்லும் ரோட்டில் ரெயில்வே கிராசிங் அருகே கேரளாவை சேர்ந்த சொகுசு கார் நின்று கொண்டிருந்ததை தனிப்படை போலீசார் கவனித்தனர்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்த போது அதில் 6 பேர் இருந்தனர். போலீசாரின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். எனவே போலீசார் சொகுசு காரையும், 6 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் கொண்டு சென்று விசாரணை செய்தபோது 36 கிலோ திமிங்கலம் உமிழ்நீர் இருப்பது தெரியவந்தது.

    மேலும் இது உண்மையான திமிங்கலம் உமிழ்நீர் தானா என்று சோதனை செய்தனர். இது உண்மையான திமிங்கலம் உமிழ்நீர் என உறுதி செய்யப்பட்டது.

    ஒரு கிலோ திமிங்கல உமிழ்நீர் ரூ.1 கோடியாகும். இதன் மொத்த மதிப்பு ரூ.36 கோடி ஆகும். காரில் இருந்த கேரளா மாநிலம் திருவனந்த புரம் மாவட்டம் வெள்ளார் கோடு வெள்ளையா குதிரைகுளம் விவேகானந்தன் (வயது 49), கொல்லம் மாவட்டம் தலத்தலா உரிமைய நல்லூர் நிஜூ (39), திருவனந்தபுரம் மாவட்டம் காரக்கோணம் திரேசியாபுரம் நெடிய விளைபுத்தன் வீடு ஜெயன் (41), திருவனந்தபுரம் மாவட்டம் காரக்கோணம் குன்னத்துக்காடு திலீப் (26), பாலக்காடு மாவட்டம் ஒற்றை பாலம் பாலகிருஷ்ணன் (50), தனக்காடு குன்னத்து பாவு கோணம் வீரான் (61) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. திமிங்கலம் உமிழ்நீர் மற்றும் 6 பேரும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    திமிங்கல உமிழ்நீர் குறித்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச கடத்தல் கும்பல் கப்பலில் ஆழ்கடல் பகுதியில் பெரிய பயனாக்குலர் மூலம் ஆய்வு மேற்கொள்ளும், அப்போது ஏதாவது ஒரு பகுதியில் திமிங்கலம் வாமிட் செய்த உமிழ்நீர், கடலின் மேற்பகுதியில் மெல்லிய திராவகம் போன்று படிந்து காணப்படும், அதனை கடத்தல் கும்பல் எடுத்து, உலகம் முழுவதும் உள்ள சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தகவல் தெரிவித்து, அது உண்மையானதா என சோதனை செய்து விற்பனை செய்வார்கள், அதாவது இந்திய மார்க்கெட்டின் விலை 1 கிலோ ஒரு கோடி ரூபாய், அது சர்வதேச மார்க்கெட்டில் பல கோடி மதிப்பு எனக்கூறப்படுகிறது. இந்த உமிழ்நீரை மருத்து வத்திற்கும் பயன்படுத்து வதாக கூறப்படுகிறது. அதனை கேப்சூலாக, பவுடராக மாற்றி விற்பனை செய்து பணம் சம்பா திப்பார்கள். மேலும் வாசனை திரவியங்களுடன் பயன்ப டுத்தி, போதைக்கா கவும் பயன்படுத்துவ ணதாக தெரிகிறது. இந்த திமிங்கல உமிழ்நீர் கேப்சூல் சர்வதேச மார்க்கெட்டில் ஒரு லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்ப டுவதாக தெரியவருகிறது.

    இந்த திமிங்கல உமிழ்நீர் மேலேய நாடுகளில் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் தற்போது சில ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகிறது.

    இந்த திமிங்கலம் உமிழ்நீர் கேரளாவில் ஆழ்கடலில் கடத்தல் கும்பல் மூலம் எடுக்கப்பட்டு கை மாறப்பட்டு தமிழ்நாட்டில் இதற்கான தனி கடத்தல் கும்பலிடம் கைமாற வந்தபோது பிடிபட்டது.

    யார் வாங்க வந்தனர். யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. தற்போது இவர்களை களியல் வனச்சரக அதிகாரிகளுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார்.
    • சிறுமியின் தாய் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது 14 வயது மகளுடன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர் குரும்பனூரில் தங்கி இருந்து பாக்கு உறிக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் 14 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடை வில் காதலாக மாறியது.சம்பவத்தன்று சிறுமி அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் கடைக்கு சென்ற மகள் திரும்பி வராததால் அவரை அவரது தாய் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து சிறுமியின் தாய் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது 14 வயது சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது தெரிய வந்தது. தற்போது போலீசார் சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    ×