search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில்  நடப்பு ஆண்டில் 42 டன் ரேஷன் அரிசி பறிமுதல்:91 வழக்குகளில் 87 பேர் கைது
    X

    கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 42 டன் ரேஷன் அரிசி பறிமுதல்:91 வழக்குகளில் 87 பேர் கைது

    • நடப்பு ஆண்டில் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ்கு மார் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    அரசு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு த்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, கொரக்கவாடி, ராமநத்தம், தொழுதூர், வேப்பூர் தாலுக்கா பகுதி களில் நடப்பு ஆண்டில் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 16 வாகனங்கள், 3 மோட்டார் சைக்கிள், ஒரு 3 சக்கர வாகனம் என மொத்தம் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 87 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு சம்பந்தமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணி க்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் முறைகேடுகள் சம்பந்தமாக பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 1800 5995 950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். இத்தகவலை கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ்கு மார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×