search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2.15 கிலோ தங்கம் பறிமுதல்
    X

    2.15 கிலோ தங்கம் பறிமுதல்

    • திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 2.15 கிலோ தங்கம் பறிமுதல்
    • சுங்கத்துறையினரின் தொடரும் அதிரடி வேட்டை

    கே.கே. நகர்,

    திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு இண்டிகோ, மலிந்தோ, ஸ்ரீலங்கன், ஏர் ஏசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர்கதையாகி வருகிறது.

    நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில், வந்த, சென்னையைச் சேர்ந்த சாதிக் அலி(வயது 40), அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் காலணியில் மறைத்து எடுத்து வந்த ரூ.1.08 கோடி மதிப்பிலான 1.872 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

    இதேபோன்று கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்து வந்த, புதுக்கோட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன்(வயது 37) என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 61.21 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களில் மட்டும், திருச்சி விமான நிலையத்தில் 2.15 கிலோ கடத்தல் தங்கம், வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×