search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணம்"

    • ஆப் சீசனில்' பயணம் செய்வது பல விதங்களில் பணத்தை சேமிக்க உதவும்.
    • ஒரே பையுடன் பயணம் செய்வது லக்கேஜ்ஜுக்கு ஏற்படும் செலவுகளை தவிர்க்க உதவும்.

    பயணத்திக்காக பலரும் பல்வேறு வழிகளில் பணத்தை சேமிப்பார்கள். ஆனால், பயணத்தின்போது பணத்தை சேமிப்பதை இழந்துவிடுவார்கள். அப்படி பயணத்தின்போது சேமிக்க சில ஆலோசனைகள் இங்கே..

    எப்போதும் ஆப் சீசனில்' பயணம் செய்வது பல விதங்களில் பணத்தை சேமிக்க உதவும். குறுகிய கால பொது விடுமுறை உள்ள நாட்களை பயணத்துக்காக தேர்ந்தெடுத்தால், பயணத்துக்கான செலவு, தங்குமிடம், உணவு பொருட்கள், நினைவுப் பொருட்கள் என அனைத்தும் மலிவாக கிடைக்கும்.

    வருடத்தில் சில மாதங்கள் அல்லது சில நாட்களில் எந்த சீசனும் இருக்காது. அப்படிப்பட்ட நாட்களை தேர்வு செய்து பயணத்துக்கான டிக்கெட்டுகளை குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யுங்கள். குறைவான கட்டணத்தில் சிறந்த தள்ளுபடியுடன் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

    நீண்ட தூர பயணத்தின்போது தொடர்ச்சியாக செல்லக்கூடிய ஒரு வழி பயணத்தை தேர்ந்தெடுப்பது சலிப்பை ஏற்படுத்தினாலும், பயனத்துக்கான செலவை குறைக்கும்.

    பயண காலத்துக்கு ஏற்றவாறு நாமே உணவு, தின்பண்டங்கள், தண்ணீர் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சேமிப்புடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது. அதேநேரம் உணவு மற்றும் தேவையான பொருட்களை கொண்டு செல்ல தனி பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, ஒரே ஒரு பையுடன் பயணத்தை மேற்கொள்வது லக்கேஜ்ஜுக்கு ஏற்படும் செலவுகளை தவிர்க்க உதவும்.

    அதுமட்டுமில்லாமல், பயணத்தின்போது தேவையின்றி வாங்கக்கூடிய பொருட்களின் மீதுள்ள நாட்டத்தை குறைத்து பணத்தை மிச்சப்படுத்தலாம். தேவைக்கேற்ப நாம் தங்கும் இடங்களை நாள் கணக்கில் பதிவு செய்வதை விட, மணிக்கணக்கிற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் முன்பதிவு செய்வது செலவை குறைக்க சிறந்த வழி.

    பயண நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் உணவுக்கான செலவை கட்டுப்படுத்த நீங்கள் உண்ணும் உணவின் தன்மையை தெளிவாக முடிவு செய்யுங்கள். பயணத்தின்போது பொரித்த எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதையும். சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். அவை அதிக செலவை ஏற்படுத்துவதுடன், ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

    பயணத்தின்போது நாம் பொதுவாக செய்யும் மற்றொரு தவறு. சுற்றுலா சென்ற இடத்தில் நாம் பயன்படுத்தும் லோக்கல் வாகனங்கள். சுற்றுலாவின்போது நமக்கென தனியாக வாகனங்களை' பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது வீண் செலவை குறைப்பதுடன், சுற்றுலா செல்வதன் அசல் உணர்வை உணரும்படியான புதிய அனுபவத்தை பெறவும், சுய ஒழுக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.

    • ராஜ்மார்க் யாத்ரா என்ற செயலி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • அவசர உதவிகள் தேவைப்படும் போது, எளிதில் தொடர்பு கொள்ள ஏதுவாக இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    தொடர்ந்து தொலைதூரம் பயணிக்கும் டிரைவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல தகவல்களுடன் ராஜ்மார்க் யாத்ரா என்ற செயலி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, ஓடிபி கொடுத்து, இ-மெயில் ஐ.டி, இருப்பிடம், வாகன விபரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் அருகே உள்ள சாலையின் வகை, விபரம், பயணிக்கும் தூரத்தில் உள்ள சுங்கச்சாவடி, அதன் கட்டண விபரம், ஒப்பந்த நிறுவனம் மற்றும் அவர்களது தொலைபேசி எண், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், குறிப்பிடத்தக்க இடங்கள் குறித்த விபரத்தை வாகன ஓட்டிகள் அறியலாம்.

    தேசிய நெடுஞ்சாலை திட்ட அதிகாரி பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம். பயணிக்கும் வழியில் உள்ள வானிலை நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் வசதி மற்றும் பயண அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்ய வசதியுள்ளது.அதே நேரம் குறிப்பிட்ட கால அளவு, விதிமுறை மீறி வாகன ஓட்டிகள் பயணித்தால், ஜி.பி.எஸ்., வாயிலாக கண்காணிக்கப்பட்டு டிரைவர்களுக்கு எச்சரிக்கையும் சிக்னல்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இது குறித்து போக்குவரத்து துறையினர் கூறுகையில், நீண்ட தூரம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, அவசர உதவிகள் தேவைப்படும் போது, எளிதில் தொடர்பு கொள்ள ஏதுவாக இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    தேவையிருப்பின் இச்செயலி வாயிலாக நெடுஞ்சாலை ஆணைய அவசர கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளவும் முடியும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் சென்று ஐரோப்பிய எம்.பி.க்களுடன் ராகுல்காந்தி உரையாடுகிறார்.
    • 9-ந் தேதி பாரீசில் நடை பெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    புதுடெல்லி:

    ஜி 20 உச்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ந் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. வெளிநாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு நடைபெறும் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி 5 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், நார்வேக்கு செல்கிறார்.

    செப்டம்பர் 7-ந் தேதி அவர் பாரீஸ் செல்கிறார். அங்கிருந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் சென்று ஐரோப்பிய எம்.பி.க்களுடன் ராகுல்காந்தி உரையாடுகிறார்.

    செப்டம்பர் 8-ந் தேதி அவர் பாரீஸ் நகரில் மாணவர்கள் மத்தியில் பேசுகிறார். 9-ந் தேதி பாரீசில் நடை பெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 10-ந் தேதி ராகுல்காந்தி நார்வே செல்கிறார். அங்கு இந்திய வம்சாவளியினரை சந்திக்கிறார். அதோடு நிருபர்களையும் சந்திக்கிறார்.

    • கார் மூலம் திருச்சி செல்லும் முதல்-அமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
    • முதல்-அமைச்சரின் 4 நாள் பயணம் நாளையுடன் நிறைவடைகிறது.

    திருவாரூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு 4 நாள் பயணமாக வந்துள்ளார்.

    நேற்று திருக்குவளையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், நேற்று மாலை நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆய்வு செய்தார்.

    இன்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு திருவாரூர் வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்குகிறார்.

    மாலையில் சிறிது ஓய்வெடுக்கும் முதலமைச்சர் நாளை (27.8.23) திருவாரூர் அருகில் உள்ள பவத்தரமா ணிக்கத்தில் நடைபெறும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

    அதனைத் தொடர்ந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற நான்கு நாள் பயணம் நாளையுடன் நிறை வடைகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை ஒட்டி திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது. மேலும் நாளை மாலை வரை திருவாரூர் பகுதியில் டிரோன்கள் பறக்க கூடாது என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

    • பயணத்தின் போது அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் அவர் சந்தித்துப் பேச உள்ளார்.
    • பாரீஸ் பல்கலைக்கழகத்தில் 8-ந் தேதி உரையாற்றுகிறார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இந்தியா ஒற்றுமை யாத்திரையை சில மாதங்களுக்கு முன்பு நடத்தி முடித்தார்.

    அடுத்தகட்டமாக அவர் நாட்டின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் ராகுல் கடந்த சில நாட்களாக லடாக் பகுதியில் பயணம் மேற்கொண்டு பொது மக்களுடன் கலந்துரையாடி விட்டு டெல்லி திரும்பினார்.

    முன்னதாக, லடாக் பயணத்தை முடித்துக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்வார் எனத் தகவல் பரவியது. இந்நிலையில் ராகுல்காந்தியின் ஐரோப்பிய பயணம் தற்போது உறுதியாகி உள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந் தேதி டெல்லியில் இருந்து புறப்படுகிறார். ராகுல், 5 நாள் பயணமாக பெல்ஜியம், பிரான்ஸ், நார்வே ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். பயணத்தின் போது அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் அவர் சந்தித்துப் பேச உள்ளார்.

    தற்போதைய பயணத்தின் படி செப்டம்பர் 7-ந் தேதி யன்று பெல்ஜியத்தின் பிரஸ்செல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராகுல் சந்திக்க உள்ளார். இதையடுத்து, பாரீஸ் பல்கலைக்கழகத்தில் அவர் 8-ந் தேதி உரையாற்றுகிறார்.

    9-ந் தேதியன்று பிரான்ஸ் தொழிலாளர் சங்க பிரதிநிதிகளை சந்திக்கிறார். பயணத்தின் இறுதி நாளான 10-ந் தேதி நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு அவர் செல்கிறார்.

    இதனிடையே பல்வேறு செய்தியாளர் சந்திப்பிலும் ராகுல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் 9,10 ஆகிய தேதிகளில் ராகுல் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது அரசியல் களத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

    ஏற்கனவே அமெரிக்காவில் இந்திய ஜனநாயகம் குறித்து விமர்சித்து ராகுல் பேசியதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் என இரு முறை சென்றும் லடாக் பகுதிக்கு செல்லவில்லை.
    • ராகுல்காந்தி அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், நார்வே, பிரான்சுக்கு செல்கிறார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.

    அதன்பின்னரும் தான் செல்லாத பகுதிகளுக்கு சென்று மக்களிடம் பேசி வருகிறார். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் என இரு முறை சென்றும் லடாக் பகுதிக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக இன்று காலை காஷ்மீர் புறப்பட்டு சென்றார். லடாக் மற்றும் அங்குள்ள லே பகுதிகளுக்கு அவர் செல்கிறார். இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், நார்வே, பிரான்சுக்கு செல்கிறார்.

    • போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
    • இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கோவை.

    வருகிற 15-ந் தேதி 76-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.76-வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் கோவை மாநகர போலீஸ் சார்பில் பொது மக்களுடன் இணைந்து 76 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் இன்று நடந்தது.

    போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பயணம் புறப்பட்டது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்ததுடன், தானும் சைக்கிளில் பயணம் செய்தார். இந்த பயணமானது செல்வபுரம், பேரூர், மாதம்பட்டி, ஆலந்துறை, காருண்யா நகர், ஈஷா வழியாக 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கிறது.

    இதில் போலீஸ் கமி ஷனர் பாலகிரு ஷ்ணன், துணை போலீஸ் கமிஷனர்கள் சந்தீஷ், மதிவாணன், சுகாசினி மற்றும் காவல்துறை அதிகாரிகளும், போலீ சாரும், பொதுமக்களும் இதில் பங்கேற்றனர். 4 மணி நேரம் இந்த சைக்கிள் பயணம் நடந்தது.

    இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • அரசு பஸ்கள் பராமரிப்பில் தொடர்ந்து நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
    • கண்ணாடி இல்லாத இருக்கையில் அமர்ந்து செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

    உடுமலை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உடுமலை கிளை மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்கள் ,கூலித்தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் அரசு பஸ்கள் பராமரிப்பில் தொடர்ந்து நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதும் தொடர்கதையாக உள்ளது. உடுமலையில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் முழுமையாக இல்லை. இதனால் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணித்து வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏழை,எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு பஸ்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளது. அதன் மூலமாக பல்வேறு அடிப்படை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம். ஆனால் அரசு பஸ்களை முறையாக முழுமையாக பராமரிப்பதற்கு உடுமலை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.

    அந்த வகையில் ஏராளமான பஸ்கள் ஜன்னல் கண்ணாடிகள் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கண்ணாடி இல்லாத இருக்கையில் அமர்ந்து செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழலும் உள்ளது. பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தரவேண்டிய அதிகாரிகள் பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொள்ளாதது வேதனை அளிக்கிறது.

    இதனால் உடுமலைப் பகுதியில் இயங்குகின்ற அரசு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் பொருத்துவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பஸ்களை பராமரிப்பதற்காக அளிக்கப்படுகின்ற தொகை முழுமையாக செலவிடப்படுகிறதா என்றும் மாவட்டஅனைத்து பஸ்களும் முறையாக கிராமத்துக்கு இயக்கப்படுகிறதா என்றும் நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். 

    • நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இதனால் காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு புகார்கள் சென்றது.

    ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ராமன் புதூர் பகுதியில் பஸ்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் கேப் ரோடு பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் நோக்கி வந்த பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தனர். உடனடியாக அந்த பஸ்களை போக்கு வரத்து பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    படியில் பயணம் நொடியில் மரணம். எனவே மாணவர்கள் கவனமாக பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் உங்களை படிப்பதற்காக கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கி றார்கள். நீங்கள் பஸ்களில் வீட்டிற்கு செல்லும் போதும் பள்ளிக்கு வரும்போதும் படிக்கட்டில் பயணம் செய்யாமல் பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்வது நல்லதாகும் என்று அறிவு ரைகளை கூறினார்கள்.

    ஒரு சில பஸ்களில் கூட்டம் அதிகமாக இரு ந்ததையடுத்து மாணவர்களை அந்த பஸ்சிலிருந்து இறக்கி பின்னால் வந்த பஸ்களில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • காலை 10.45 மணிக்கு பதிலாக 55 நிமிடங்கள் முன்னதாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.
    • பகல் 12.30 மணிக்கு பதிலாக 50 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு முன்பதிவு இல்லா விரைவு ரெயில் (வண்டி எண்: 06880) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை முதல் ( திங்கள் கிழமை ) திருச்சியிலிருந்து வழக்கமாக காலை 10.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 55 நிமிடங்கள் முன்னதாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.

    இந்த ரெயில் காரைக்காலுக்கு பிற்பகல் 3 மணிக்குப் பதிலாக, 2.05 மணிக்கு சென்றடையும்.

    அதேபோல காரைக்காலில் இருந்து தஞ்சாவூருக்கு இயக்கப்படும் முன்பதிவு இல்லா விரைவு ரெயில் (வண்டி எண்: 06457) நாளை ( திங்கள் கிழமை) முதல் வழக்கமாக பகல் 12.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும்.

    மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 7 குழந்தைகளின் உயிரை பணயம் வைத்ததற்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
    • காவல் துறையினர் குழந்தைகளை ஆபத்தான வகையில் அழைத்துச் சென்ற அந்த நபரை கைது செய்தனர்.

    மும்பை:

    மும்பையைச் சேர்ந்த நபர் மோட்டார் சைக்கிளில் 7 குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வீடியோ டுவிட்டரில் வைரலானது.

    மோட்டார் சைக்கிள் முன்பக்கத்தில் 2 குழந்தைகளும், பின்பக்கத்தில் 3 குழந்தைகளும, மேலும் 2 குழந்தைகள் நின்று கொண்டு பயணிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

    இது குறித்து அந்த டுவிட்டர் பயனாளர் "பொறுப்பற்ற பித்துப் பிடித்த நபர் 7 குழந்தைகளுடன் சவாரி செய்கிறார். 7 குழந்தைகளின் உயிரை பணயம் வைத்ததற்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    இந்த குழந்தைகளின் பெற்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். போக்குவரத்து காவல் துறையினர் குழந்தைகளை ஆபத்தான வகையில் அழைத்துச் சென்ற அந்த நபரை கைது செய்தனர்.

    மேலும் அந்த நபர் மீது அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் சென்று உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • மாடலாக முடிவெட்டி இருந்தால் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறுவோம் என விழிப்புணர்வு செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் பள்ளி செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யாதிருத்தல் மற்றும் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்து போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர்.

    புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் சாலையில் வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் போலீசார் சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வர வேண்டும். படிக் கட்டில் பயணம் செய்யக் கூடாது. ஸ்டைலாக முடி வைக்க கூடாது. பெற்றோருக்கும், பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் நோக்கில் நன்கு படிக்க வேண்டும்.

    உலகில் ஒருவருக்கு பெரிய சொத்து என்பது கல்விதான். எனவே கல்வியை நன்றாக கற்க வேண்டும்.

    மாடலாக முடிவெட்டி இருந்தால் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறுவோம் என விழிப்புணர்வு செய்தனர். போலீசாரின் இந்த முயற்சிக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாராட்டினர்.

    ×