search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்சில்"

    • சென்னையில் இருந்து நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று சேலத்தை நோக்கி புறப்பட்டது.
    • பஸ்சில் இருந்த 24 வயது இளம்பெண்ணுக்கு அருகில் இருந்த வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று சேலத்தை நோக்கி புறப்பட்டது. இன்று அதிகாலை ஊத்தங்கரை அருகே வந்து கொண்டிருந்தபோது அந்தப் பஸ்சில் இருந்த 24 வயது இளம்பெண்ணுக்கு அருகில் இருந்த வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தன்னுடன் பயணித்த சகநண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை கண்டித்த பெண்ணின் நண்பர்கள் பஸ் சேலம் புதிய பஸ் நிலையம் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • ஒரு மாதத்தில் மட்டும் 35 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் ஓடும் பஸ்சில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி நட வடிக்கை மேற்கொண்டு வரு கிறார். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பெண்களிடம் பெண் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பெண் கொள்ளை யர்கள் கூட்டம் நெரிசல் அதிகமாக உள்ள பஸ்களில் கைவரிசை காட்டிவிட்டு உடனடியாக வெளியூர்க ளுக்கு தப்பி செல்வது தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையில் ஈடுபடும் பெண்கள் கை குழந்தைக ளுடன் டிப்டாப் உடையில் வந்து கொள்ளையை அரங்கேற்றுவதும் தெரி யவந்துள்ளது. கொள்ளை கும்பலை பிடிக்க பஸ் நிலையங்களில் கண் காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

    வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்தில் மப்டி உடையில் பெண் போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யட்டுள்ளது. மேலும் பஸ்களிலும் சந்தேகப்ப டும்படியாக பெண்கள் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் வழிப்பறி திருட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. தற்பொழுது பஸ்களில் செயின் திருட்டு, செயின் மாயம் போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கும்பல் கைவரிசை காட்டுகிறார்கள். இவர் களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீ சார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கொள்ளை சம்பவங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது. தற்பொழுது நாகர்கோவிலில் அந்த கருவி மூலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலை தொடர்ந்து கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்- டிவிஷனலுக்குட்பட்ட பகுதிகளிலும் அபராதம் விற்பதற்கு நவீன கருவி வாங்க நடவடிக்கை எடுக் கப்படும். இந்த கருவியின் மூலமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரும் வாகனங் களை கண்காணிக்க முடியும். 400 மீட்டர் தொலைவில் அந்த வாகனம் வரும்போது அந்த வாகனத்தில் பதிவு எண் இந்த கருவியில் பதிவாகி விடும். ஹெல்மட் அணியாமல் வருபவர்களை யும் இந்த கருவி மூலமாக கண்டறிந்து அபராதம் விதிக்கலாம். செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டு பவர்களை கண்ட றிந்தும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவ-மாணவிகளை இறக்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட பஸ் ஒன்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட பஸ் ஒன்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ் கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பு அருகே உள்ள திருப்பத்தில் திரும்பும் போது பஸ்சின் முன்பக்க என்ஜின் பகுதியில் "திடீர்" என்று"டமார்" என்ற சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து அந்த என்ஜின் பகுதியில் "திடீர்"என்று தீப்பிடித்து ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.

    உடனே அந்த பஸ்சை டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தினார். அந்த பஸ்சில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். அதன்பிறகு அந்த பஸ்சின் டிரைவர் அந்த பஸ்சில் இருந்த தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கிடையில் இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் கன்னியா குமரி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பால கிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் பஸ்சின் முன் பகுதியில் பிடித்த தீயை டிரைவரும் பொதுமக்களும் சேர்ந்து முழுமையாக அணைத்து விட்டனர். இருப்பினும் மேலும் அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.

    இதனால் தீ அணைக்கும் படை வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருப்பதற்காக தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த சம்பவத்தின் போது மாணவ-மாணவிகள் பஸ்சில் இருந்து தப்பி வெளியே ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். பள்ளிக்கூட பஸ்சில் தீ பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இதனால் காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு புகார்கள் சென்றது.

    ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ராமன் புதூர் பகுதியில் பஸ்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் கேப் ரோடு பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் நோக்கி வந்த பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தனர். உடனடியாக அந்த பஸ்களை போக்கு வரத்து பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    படியில் பயணம் நொடியில் மரணம். எனவே மாணவர்கள் கவனமாக பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் உங்களை படிப்பதற்காக கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கி றார்கள். நீங்கள் பஸ்களில் வீட்டிற்கு செல்லும் போதும் பள்ளிக்கு வரும்போதும் படிக்கட்டில் பயணம் செய்யாமல் பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்வது நல்லதாகும் என்று அறிவு ரைகளை கூறினார்கள்.

    ஒரு சில பஸ்களில் கூட்டம் அதிகமாக இரு ந்ததையடுத்து மாணவர்களை அந்த பஸ்சிலிருந்து இறக்கி பின்னால் வந்த பஸ்களில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1900 பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி பொங்கல் பண்டிகையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்பட பல இடங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் கடந்த 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இயக்கப்பட்டது.

    சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி

    பேர் பயணம் செய்துள்ள தாகவும், 2 கோடி கூடுதல் வருமானம் கிடைத்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.
    • இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதுரைக்கு பஸ் கிளம்ப தயாரானது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஈரோட்டை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண் பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தார்.

    அவர் அருகே மற்றொரு இளம்பெண் அமர்ந்திருந்தார். பஸ் கிளம்ப தயாரான போது எல்லம்மாள் அருகே அமர்ந்திருந்த இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடி, திருடி என கூச்சலிட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அந்த இளம்பெண்ணை ஓடி சென்று மடக்கிப் பிடித்தனர்.

    அந்த பெண் திருடிய பையில் ரூ.2000 ரொக்கப் பணம் இருந்தது. இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்தப் பெண் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி (28) என தெரிய வந்தது. இவர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது பெரிய வந்தது.

    மேலும் இவர் மீது சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் 6 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×