என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னையில் இருந்து சேலம் வந்த சொகுசு பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம்
Byமாலை மலர்30 Sept 2023 3:08 PM IST
- சென்னையில் இருந்து நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று சேலத்தை நோக்கி புறப்பட்டது.
- பஸ்சில் இருந்த 24 வயது இளம்பெண்ணுக்கு அருகில் இருந்த வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சென்னையில் இருந்து நேற்று இரவு சொகுசு பஸ் ஒன்று சேலத்தை நோக்கி புறப்பட்டது. இன்று அதிகாலை ஊத்தங்கரை அருகே வந்து கொண்டிருந்தபோது அந்தப் பஸ்சில் இருந்த 24 வயது இளம்பெண்ணுக்கு அருகில் இருந்த வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தன்னுடன் பயணித்த சகநண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை கண்டித்த பெண்ணின் நண்பர்கள் பஸ் சேலம் புதிய பஸ் நிலையம் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X