search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் பள்ளிக்கூட பஸ்சில் திடீர் தீ விபத்து
    X

    கன்னியாகுமரியில் பள்ளிக்கூட பஸ்சில் "திடீர்" தீ விபத்து

    • மாணவ-மாணவிகளை இறக்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட பஸ் ஒன்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட பஸ் ஒன்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ் கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பு அருகே உள்ள திருப்பத்தில் திரும்பும் போது பஸ்சின் முன்பக்க என்ஜின் பகுதியில் "திடீர்" என்று"டமார்" என்ற சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து அந்த என்ஜின் பகுதியில் "திடீர்"என்று தீப்பிடித்து ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.

    உடனே அந்த பஸ்சை டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தினார். அந்த பஸ்சில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். அதன்பிறகு அந்த பஸ்சின் டிரைவர் அந்த பஸ்சில் இருந்த தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கிடையில் இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் கன்னியா குமரி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பால கிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் பஸ்சின் முன் பகுதியில் பிடித்த தீயை டிரைவரும் பொதுமக்களும் சேர்ந்து முழுமையாக அணைத்து விட்டனர். இருப்பினும் மேலும் அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.

    இதனால் தீ அணைக்கும் படை வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருப்பதற்காக தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த சம்பவத்தின் போது மாணவ-மாணவிகள் பஸ்சில் இருந்து தப்பி வெளியே ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். பள்ளிக்கூட பஸ்சில் தீ பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×