search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொலைதூரம்  பயணிக்கும் டிரைவர்களுக்கு உதவ புதிய செயலி அறிமுகம்
    X

    கோப்பு படம்.

    தொலைதூரம் பயணிக்கும் டிரைவர்களுக்கு உதவ புதிய செயலி அறிமுகம்

    • ராஜ்மார்க் யாத்ரா என்ற செயலி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • அவசர உதவிகள் தேவைப்படும் போது, எளிதில் தொடர்பு கொள்ள ஏதுவாக இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    தொடர்ந்து தொலைதூரம் பயணிக்கும் டிரைவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல தகவல்களுடன் ராஜ்மார்க் யாத்ரா என்ற செயலி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, ஓடிபி கொடுத்து, இ-மெயில் ஐ.டி, இருப்பிடம், வாகன விபரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் அருகே உள்ள சாலையின் வகை, விபரம், பயணிக்கும் தூரத்தில் உள்ள சுங்கச்சாவடி, அதன் கட்டண விபரம், ஒப்பந்த நிறுவனம் மற்றும் அவர்களது தொலைபேசி எண், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், குறிப்பிடத்தக்க இடங்கள் குறித்த விபரத்தை வாகன ஓட்டிகள் அறியலாம்.

    தேசிய நெடுஞ்சாலை திட்ட அதிகாரி பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம். பயணிக்கும் வழியில் உள்ள வானிலை நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் வசதி மற்றும் பயண அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்ய வசதியுள்ளது.அதே நேரம் குறிப்பிட்ட கால அளவு, விதிமுறை மீறி வாகன ஓட்டிகள் பயணித்தால், ஜி.பி.எஸ்., வாயிலாக கண்காணிக்கப்பட்டு டிரைவர்களுக்கு எச்சரிக்கையும் சிக்னல்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இது குறித்து போக்குவரத்து துறையினர் கூறுகையில், நீண்ட தூரம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, அவசர உதவிகள் தேவைப்படும் போது, எளிதில் தொடர்பு கொள்ள ஏதுவாக இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    தேவையிருப்பின் இச்செயலி வாயிலாக நெடுஞ்சாலை ஆணைய அவசர கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளவும் முடியும் என்றனர்.

    Next Story
    ×