search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்சீசன்"

    • ஆப் சீசனில்' பயணம் செய்வது பல விதங்களில் பணத்தை சேமிக்க உதவும்.
    • ஒரே பையுடன் பயணம் செய்வது லக்கேஜ்ஜுக்கு ஏற்படும் செலவுகளை தவிர்க்க உதவும்.

    பயணத்திக்காக பலரும் பல்வேறு வழிகளில் பணத்தை சேமிப்பார்கள். ஆனால், பயணத்தின்போது பணத்தை சேமிப்பதை இழந்துவிடுவார்கள். அப்படி பயணத்தின்போது சேமிக்க சில ஆலோசனைகள் இங்கே..

    எப்போதும் ஆப் சீசனில்' பயணம் செய்வது பல விதங்களில் பணத்தை சேமிக்க உதவும். குறுகிய கால பொது விடுமுறை உள்ள நாட்களை பயணத்துக்காக தேர்ந்தெடுத்தால், பயணத்துக்கான செலவு, தங்குமிடம், உணவு பொருட்கள், நினைவுப் பொருட்கள் என அனைத்தும் மலிவாக கிடைக்கும்.

    வருடத்தில் சில மாதங்கள் அல்லது சில நாட்களில் எந்த சீசனும் இருக்காது. அப்படிப்பட்ட நாட்களை தேர்வு செய்து பயணத்துக்கான டிக்கெட்டுகளை குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யுங்கள். குறைவான கட்டணத்தில் சிறந்த தள்ளுபடியுடன் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

    நீண்ட தூர பயணத்தின்போது தொடர்ச்சியாக செல்லக்கூடிய ஒரு வழி பயணத்தை தேர்ந்தெடுப்பது சலிப்பை ஏற்படுத்தினாலும், பயனத்துக்கான செலவை குறைக்கும்.

    பயண காலத்துக்கு ஏற்றவாறு நாமே உணவு, தின்பண்டங்கள், தண்ணீர் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சேமிப்புடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது. அதேநேரம் உணவு மற்றும் தேவையான பொருட்களை கொண்டு செல்ல தனி பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, ஒரே ஒரு பையுடன் பயணத்தை மேற்கொள்வது லக்கேஜ்ஜுக்கு ஏற்படும் செலவுகளை தவிர்க்க உதவும்.

    அதுமட்டுமில்லாமல், பயணத்தின்போது தேவையின்றி வாங்கக்கூடிய பொருட்களின் மீதுள்ள நாட்டத்தை குறைத்து பணத்தை மிச்சப்படுத்தலாம். தேவைக்கேற்ப நாம் தங்கும் இடங்களை நாள் கணக்கில் பதிவு செய்வதை விட, மணிக்கணக்கிற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் முன்பதிவு செய்வது செலவை குறைக்க சிறந்த வழி.

    பயண நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் உணவுக்கான செலவை கட்டுப்படுத்த நீங்கள் உண்ணும் உணவின் தன்மையை தெளிவாக முடிவு செய்யுங்கள். பயணத்தின்போது பொரித்த எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதையும். சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். அவை அதிக செலவை ஏற்படுத்துவதுடன், ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

    பயணத்தின்போது நாம் பொதுவாக செய்யும் மற்றொரு தவறு. சுற்றுலா சென்ற இடத்தில் நாம் பயன்படுத்தும் லோக்கல் வாகனங்கள். சுற்றுலாவின்போது நமக்கென தனியாக வாகனங்களை' பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது வீண் செலவை குறைப்பதுடன், சுற்றுலா செல்வதன் அசல் உணர்வை உணரும்படியான புதிய அனுபவத்தை பெறவும், சுய ஒழுக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.

    ×