search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி"

    • நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
    • பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.

    பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பரிசல் மூலம் தேடுதல்

    உடனடியாக இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசா ருக்கு தகவல் அளித்தனர்.

    இதனிடையே சம்பவம் நடந்த இடம் ஈரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பள்ளிபாளையம் போலீசார் ஈரோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் துணையுடன் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    7-க்கும் மேற்பட்ட பரிசல்களுடன் நேற்று இரவு 7 மணி வரை பெண்ணை தேடும் பணி நடந்தது.

    இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    காவிரி ஆற்றில் குதித்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 60 வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
    • அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணி யில் உள்ளனர். அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தென் மேற்கு பருவ மழை

    இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் சமீப காலமாக சேலம் மாநகரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவ திப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து கொசு ஒழிப்பு பணியை தீவிரப் படுத்த அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோசனை செய்தனர்.

    தொடர்ந்து கொசுக்களை ஒழிக்கவும் டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்கவும் வீடு, வீடாக சென்று கள ஆய்வு செய்யும் வகையில் 200 ஊழியர்கள் விரைவில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    200 ஊழியர்கள்

    புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் அம்மாப் பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்ட லாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில் தலா 30 பேர் பணியாற்றுவார்கள். மீதம் உள்ள 80 ஊழியர்கள் தலா 20 வீதம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு வணிக வளாகங்கள், பள்ளி கூடங்கள், கல்லூரிகள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவைக்கு தகுந்தாற்போல அனுப்பி வைக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் 120 பேர் தினமும் 300 வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட வேண்டும், குறிப்பாக தண்ணீர் தேங்கும் வகையில், நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப் பட்டுள்ள பொருட்களை அகற்ற வேண்டும்.

    மேலும் டெங்கு கொசுக் கள் நல்ல தண்ணீரில் பரவும் என்பதால் அதில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிப்பது, கொசு வளர்வதை தடுக்க வீட்டு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சுகாதார துறை அதிகாரிகளிடம் தினமும் அளிக்க வேண்டும்.

    429 ரூபாய் ஊதியம்

    இந்த பணிக்கான ஊழி யர்கள் நியமனம் விரைவில் நடை பெற உள்ளது. தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்க்கப்படும் இவர்களுக்கு ஊதியமாக 429 ரூபாய் வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் செயல் பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வு களுக்கான பயிற்சி வகுப்பு கள் இலவசமாக நடத்தப் பட்டு வருகிறது.
    • பயிற்சி பெற்ற மாணவர்கள் 2022-ம் ஆண்டு சீருடைப்பணியா ளர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5 பேர், காவலர் தேர்வில் 17 பேர் என 22 பேர் தேர்ச்சி பெற்று தற்போது அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் செயல் பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வு களுக்கான பயிற்சி வகுப்பு கள் இலவசமாக நடத்தப் பட்டு வருகிறது.

    22 பேர் தேர்ச்சி

    இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் 2022-ம் ஆண்டு சீருடைப்பணியா ளர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5 பேர், காவலர் தேர்வில் 17 பேர் என 22 பேர் தேர்ச்சி பெற்று தற்போது அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.

    இதேபோல டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் 17 பேர் நல்ல மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு பெற்றுள்ளனர். குரூப்-2-ல் 34 பேர் முதல்நிலை தேர்வு எழுதி உள்ளனர்.

    இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கூறியதாவது:

    போட்டி தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவல கத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை அளிக்கப்படு கிறது. வாரந்தோறும் 2 தேர்வு நடத்தப்படுகின்றன. தேர்விற்கான பாடக்குறிப்பு கள், அன்றாட பயிற்சி தாள்கள் மாண வர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்பு கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • கீழக்கொளத்தூரில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • 56 பேருக்கு டெங்கு பரிசோதனை

    அரியலூர்,

    தேசிய டெங்கு மாதத்தையொட்டி அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த கீழக்கொளத்தூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்றது.மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ அலுவலர், ஃபிர்தெஸ்பானு ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற முகாமில், 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 56 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 234 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 7 பேருக்கு ரத்த மாதிரிகள் மற்றும் 3 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.தொடர்ந்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சமுதாய சுகாதார செவிலியர் முருகேஸ்வரி, இளநிலை பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள், நடமாடு மருத்துவக் குழுவினர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    • சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
    • இதன் காரணமாக சுமார் 800 கோடி மதிப்பிலான சரக்கு பார்சல்கள் குடோன்களில் தேக்க மடைந்தன.

     ஈரோடு:

     ஈரோடு மாநகரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக சுமார் 800 கோடி மதி ப்பி லான சரக்கு பார்ச ல்கள் குடோ ன்களில் தேக்க மடை ந்தன. இத னைய டுத்து அனைத்து தொழில் சங்கத்தினர் தலைமையில் பேச்சுவா ர்ததை நடத்த ஒரு குழுவும், லாரி டிரா ன்ஸ்போ ர்ட் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்த ஒரு குழுவும் அமை க்கப்பட்டது. 2 கட்டமாக பேச்சு வா ர்த்தை நட ந்தது . இதனை த்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி இரண்டு தரப்பின ரிடமும் தொ லை பேசியில் பேசி பிரச்சி னை க்கு தீர்வு கா ண்ப தாக உறுதி அளி த்தார். இதனை ஏற்று தொழி லாளர்கள் த ங்கள் வேலை நிறுத்த போ ராட்ட த்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

    • அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் ரூ.7 கோடி செலவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தொடங்கியது
    • இளங்கோ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    கரூர்,

    அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் தார் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் முதல்- அமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் மூலமாக தார்சாலை அமைக்க ரூ. 7 கோடியே 3 லட்சத்து 30 ஆயிரம் நிதியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார். இதனைதொடர்ந்து அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.இளங்கோ கலந்து கொண்டு சாலை பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, மலைக்கோவிலூர் முதல் நந்தனூர் வரை ரூ.1 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலும், ஈசநத்தம் ரோடு முதல் சின்னகரியாம் பட்டி வரை ரூ.1 கோடியே 60 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலும், கொக்காட்டிபட்டி முதல் பால்வார்பட்டி, கணக்கு வேலன்பட்டி, பெரியவளையபட்டி வரை ரூ.1 கோடியே 71 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும், வேலன் செட்டியூர் முதல் அஞ்சாகவுண்டன்பட்டி வரை ரூ.1 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தார் சாலை பணிகள் தொடங்கின. இந்தநிகழ்ச்சியில் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • துவாக்குடி-பஞ்சப்பூர் சுற்றுச்சாலை மேம்பாலம் பணிகள் வரும் செப்டம்பருக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
    • ரெயில்வே நிர்வாகத்தின் அனுமதி கிடைத்த பிறகு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்று உறுதி

    திருச்சி, 

    திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலு க்குத் தீர்வு காணும் வகை யில் திருச்சி - தஞ்சாவூர், திருச்சி - புதுக்கோட்டை, திருச்சி-மதுரை, திருச்சி - திண்டுக்கல், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் துவாக்குடியிலிருந்து மாத்தூர், பஞ்சப்பூர், சோழன் நகர் வழியாக ஜீயபுரம் வரை அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கின்றன.அதன்படி துவாக்குடி - பஞ்சப்பூர், பஞ்சப்பூர் - ஜீயபுரம் என இருகட்டங்க ளாக இப்ணிகள் மேற்கொ ள்ளப்படுகின்றன. நிலம் கையகப்படுத்துவதில் இருந்த இடர்பாடுகள் கார ணமாக பஞ்சப்பூர் - ஜீய புரம் இடையிலான 18.43 கி.மீ சாலைப் பணி கிடப்பில் உள்ளது.

    இதே வேளையில் துவாக்குடி - பஞ்சப்பூர் இடையிலான 25.91 கி.மீ சாலைப்பணிகள் கடந்தா ண்டே 95 சதவீதம் நிறை வடைந்து விட்டன. ஆனால் காரைக்குடி - திருச்சி ரெயில் வழித்தடத்தில் குமாரமங்கலம் ரெயில் நிலையம் அருகில் மே ம்பாலம் அமைக்க தெற்கு ரெயில்வே அனுமதி தரா ததால் இந்த சாலைப்பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதில் சிரமம் ஏற்ப ட்டது.

    இதை தொடர்ந்து கால தாமதத்துக்கு தேசிய நெடு ஞ்சாலைத்துறைக்கு அபராதத்தொகையைச் செலுத்திய ஒப்பந்த நிறு வனம் நிகழாண்டில் மட்டும் 3 முறைக்கு மேல் மேம்பாலம் அமைக்க அனுமதி கேட்டு ரெயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. ஆனால் ரெயில் போக்குவரத்து மின்பாதை ஆகியவற்றுக்கு போதிய பாதுகாப்பு அம்ச ங்கள் இல்லை எனகூறி மேம்பாலம் கட்ட அனுமதி தர ரெயில்வே நிர்வாகம் மறுத்து விட்டது.

    அதன்பிறகு ரெயில்வே அதிகாரிகளின் வழிகாட்டு தலின்படி குமாரமங்கலம் அமைப்பதற்கான கட்டுமா னப் பணிகள் கர்டர்களை நிலைநிறுத்தும் தூண்கள் - மின்பாதை இடையேயான இடைவெளி ஆகியவை சரி செய்யப்பட்டன. இதை தொடர்ந்து மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஆய்வுக்குப்பிறகு மேம்பா லம் கட்ட கடந்த மாத இறுதி யில் அனுமதி கிடைத்தது.

    இதையடுத்து கடந்த 3 நாட்களாக கான்கிரீட் கர்ட ர்களை ரெயில் பாதையில் நிலைநிறுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்து அக்டோபர் மாதத்தில் இந்தச்சாலை பயன்பாட்டு க்கு வரும் என நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியது:-

    துவாக்குடி - பஞ்சப்பூர் சுற்றுச்சாலையில் காரை க்குடி - திருச்சி ரெயில் வழி த்தடத்தில் குமாரமங்கலம் ரெயில் நிலையம் அருகில் மேம்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக ராட்சத கிரேன்கள் மூலம் கான்கிரீட் கர்டர்களை தூண்களி நிலை நிறுத்தும் பணி நடை பெற்று வருகிறது.

    அதன்பிறகு மேம்பா லத்தின் குறுக்கே இரும்பு தூண்கள் அமைத்தல், சோதனை அடிப்படையில் போக்குவரத்து இயக்கம் உள்ளிட்டவற்றுக்கு ரெயில்வே நிர்வாகத்தின் அனுமதி கிடைத்த பிறகு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும்.

    செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

    • கலெக்டர் ஆய்வு
    • சுற்றுச்சுவர் சுமார் 40 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கொட்டில்பாடு கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்தினால் கடலரிப்பு ஏற்பட்ட பகுதிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் கொட்டில்பாடு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பழைய தேவாலயத்தின் தெற்கு பகுதியில் கடல் சீற்றத்தினால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுச்சுவர் சுமார் 40 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகும் சூழல் ஏற்பட்டதாக பங்குத்தந்தை, மீனவபிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் கொட்டில் பாடு கடலோர பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடல் நீரானது வீடுகளில் புகாமல் தவிர்க்கும் வகையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு அவசர கால நிதியின் கீழ் ரூ.20 லட்சத்தில் கடலரிப்பு தடுப்பு பணிகள் உடனடியாக மேற் கொள்ள ஆணை பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மீன்பிடித் துறைமுக கோட்ட செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன், உதவி பொறியாளர் அரவிந்த்குமார், கொடில்பாடு பங்குத்தந்தை/ அருட்பணி ராஜ் உள்பட பலர் உடனினிருந்தனர்.

    • வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படுவார்கள்.
    • பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு வருகிற 13 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் அவிநாசி, காங்கயம், பல்லடம், பொங்கலூா், திருப்பூா், வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் கீழ்கண்ட தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

    இதற்கு விண்ணப்பிக்க ஒரு பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 28 வயதுக்கு உள்பட்டவராகவும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இதுபோன்ற திட்டங்களில் பணியாற்றியிருக்கவும் வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.

    இந்த வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு (75 மதிப்பெண்) ஜூலை 20 -ந்தேதியும், நோ்முகத் தோ்வு (25 மதிப்பெண்) ஜூலை 24 ந்தேதியும் நடைபெறும்.

    ஆகவே இதற்கு தகுதிவாய்ந்த நபா்கள், இணை இயக்குநா்-திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், அறை எண் 305, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூா்-641604 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 13 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ரூ.10 கோடி செலவில் சுங்கவாயில் முதல் வெங்கக்கல்பட்டி வரையிலான சாலை மேம்பாட்டு பணிகள்
    • 4.5 கி.மீட்டர் நீளத்திற்கு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டம்

    கரூர், ஜூன்.26-

    கரூர்-திருச்சி புறவழிச்சாலையை இணைக்கும் வகையில், சுங்கவாயில் முதல் வெங்கக்கல்பட்டி வரை 4.5 கி.மீட்டர் தொலைவுக்கு சாலை உள்ளது. இந்த சாலையில், கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சுற்றுலா மாளிகை, அரசு கலைக் கல்லூரி, தாந்தோணிமலை வெங்கட்ரமண சுவாமி கோவில் ஆகியவை அமைந்துள்ளன.கரூர்-திருச்சி புறவழிச்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால், இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்க முன்பு கரூர் சுங்கவாயில் முதல் வெங்கக்கல்பட்டி வரை இச்சாலை, மையத்தடுப்புடன் கூடிய 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.தொடர்ந்து மாவட்டத்தில் முக்கிய அலுவலகங்கள் உள்ள இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்தது.இந்நிலையில் சுங்கவாயில் முதல் வெங்கக்கல் பட்டி வரை 4.5 கி.மீட்டர் தொலைவுக்கு சாலையை ரூ.10 கோடியில் மேம்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.சுங்கவாயில் முதல் வெங்கக்கல்பட்டி வரை சாலையில் இருக்கும் இடவசதியை பொறுத்து சாக்கடை வடிகால் வசதியுடன் சாலை மேம்படுத்தப்படும். மேலும் வடிகாலுக்கும், சாலைக்கும் இடையே உள்ள இடைவெளியில் பேவர் பிளாக் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.10 கோடியில் முன்மொழிவு அனுப்பப்ட்டு, சாலையை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • மோட்டார் சைக்கிள்களை பொது மக்கள் நிறுத்தி செல்கின்றனர்.
    • கயிறு பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம், ஜூன்.25-

    விருத்தாசலத்தில் நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் பெருகி க்கொண்டே செல்கிறது. சாலையோரம் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களை பொது மக்கள் நிறுத்தி செல்கின்றனர்.

    இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்படி, விருத்தாசலம் துணை சூப்பிரண்டு ஆரோக்கி யராஜ் அறிவுறுத்தலின்படி, இன்ஸ்பெக்டர் முருகேசன் கண்காணிப்பில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பாலக்கரை, கடைவீதி, விருத்தகிரீஸ்வரர் கோவில் மாடவீதிகள் உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் கயிறு பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். விதிகளை மீறி சாலையோர கயிற்றுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது.
    • உடற்கூறு தேர்விற்கும் இலவச பயிற்சிகள் அளிக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய 621 காலி பணியிடங்களுக்கான தேர்விற்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் (மே) 3-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு தினமும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது.

    மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், அறிவிக்கையின்படி இணைய வழி விண்ணப்பம் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு ள்ளது.எனவே, நாகை மாவட்ட த்தை சேர்ந்த கல்வி தகுதியுள்ள அனைவரும், இந்த காவலர் சார்பு ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பித்து நாகப்ப ட்டினம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெ றி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வரும் இலவச போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறுப வர்களுக்கு அடுத்தகட்ட தேர்வான உடற்கூறு தேர்விற்கும் இலவச பயிற்சிகள் அளிக்க ப்படும். இப்பயிற்சி யில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×