என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
- கீழக்கொளத்தூரில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
- 56 பேருக்கு டெங்கு பரிசோதனை
அரியலூர்,
தேசிய டெங்கு மாதத்தையொட்டி அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த கீழக்கொளத்தூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்றது.மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ அலுவலர், ஃபிர்தெஸ்பானு ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற முகாமில், 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 56 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 234 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 7 பேருக்கு ரத்த மாதிரிகள் மற்றும் 3 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.தொடர்ந்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சமுதாய சுகாதார செவிலியர் முருகேஸ்வரி, இளநிலை பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள், நடமாடு மருத்துவக் குழுவினர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.






