search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க மேலும் 200 ஊழியர்கள் நியமனம்
    X

    சேலம் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 31-வது வார்டு பார்க் தெரு பகுதியில் உள்ள வீடுகளில் சுகாதார பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.

    டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க மேலும் 200 ஊழியர்கள் நியமனம்

    • 60 வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
    • அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணி யில் உள்ளனர். அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தென் மேற்கு பருவ மழை

    இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் சமீப காலமாக சேலம் மாநகரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவ திப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து கொசு ஒழிப்பு பணியை தீவிரப் படுத்த அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோசனை செய்தனர்.

    தொடர்ந்து கொசுக்களை ஒழிக்கவும் டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்கவும் வீடு, வீடாக சென்று கள ஆய்வு செய்யும் வகையில் 200 ஊழியர்கள் விரைவில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    200 ஊழியர்கள்

    புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் அம்மாப் பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்ட லாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில் தலா 30 பேர் பணியாற்றுவார்கள். மீதம் உள்ள 80 ஊழியர்கள் தலா 20 வீதம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு வணிக வளாகங்கள், பள்ளி கூடங்கள், கல்லூரிகள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவைக்கு தகுந்தாற்போல அனுப்பி வைக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் 120 பேர் தினமும் 300 வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட வேண்டும், குறிப்பாக தண்ணீர் தேங்கும் வகையில், நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப் பட்டுள்ள பொருட்களை அகற்ற வேண்டும்.

    மேலும் டெங்கு கொசுக் கள் நல்ல தண்ணீரில் பரவும் என்பதால் அதில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிப்பது, கொசு வளர்வதை தடுக்க வீட்டு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சுகாதார துறை அதிகாரிகளிடம் தினமும் அளிக்க வேண்டும்.

    429 ரூபாய் ஊதியம்

    இந்த பணிக்கான ஊழி யர்கள் நியமனம் விரைவில் நடை பெற உள்ளது. தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்க்கப்படும் இவர்களுக்கு ஊதியமாக 429 ரூபாய் வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×